மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 35
வேதாகமப் பகுதி : பேதுரு எழுதிய முதல் திருமுகம்
முடிவுத் திகதி : 2016-11-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. பேதுரு எழுதிய முதல் திருமுகம் எந்த நாட்டில் குடியேறிய மக்களுக்காக எழுதப்பட்டது?

போந்து
கலாத்தியா
கப்பத்தோக்கியா
ஆசியா
பித்தினியா

2. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„-- -- -- -, -- -- -- -- -- , -- -- -- -- -- உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது.“

அழியாத
இருட்டான
மாசற்ற
மறைந்த
ஒழியாத

3. “நீங்கள் தூயவராய் இருங்கள்.ஏனெனில் நான் தூயவன்“ இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?

லேவியர் 11:44
லேவியர் 11:45
1பேதுரு 1:16
லேவியர் 19:2
லேவியர் 20:10

4. „இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி“ என்று பேதுரு எதை குறிப்பிடுகிறார்?

மானிடர் அனைவரும் புல்லைப் போன்றவர்
அவர்களது மேன்மை வயல்வெளிப் பூவைப் போன்றது
புல் உலர்ந்துபோம்
பூ வதங்கி விழும்
நம் ஆண்டவர் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்

5. பேதுரு எடுத்துக்காட்டும் பழைய ஏற்பாட்டு வசனங்கள் எவை?

கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று
ஆண்டவர் எத்துணை இனியவர் என்பதை சுவைத்துப்பாருங்கள்
நீங்கள் தூய ஆவியால் இறைமக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி
வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை

6. திருமணமான ஆண்களுக்கு பேதுரு சொல்லும் அறிவுரை என்ன?

பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும்
கணவருக்குப் பணிந்திருங்கள்
உங்கள் மனைவியரோடு இணைந்து வாழுங்கள்
வாழ்வுதரும் அருளுக்கு உடன் உரிமையாளராக இருப்பதால் அவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்
அப்போதுதான் நீங்கள் தடையின்றி இறைவேண்டல் செய்ய முடியும்

7. நீதியின் பொருட்டு துன்புற நேர்ந்தால் நீங்கள் செய்யவேண்டியது என்ன?

யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்
உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள்
நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள்
ஆனால் பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாயிருக்கட்டும்
தீமை செய்து துன்புறுவதை விட, நன்மை செய்து துன்புறுவதே மேல்.


8. பேதுரு மூப்பர்களுக்கு அளித்த அறிவுரை என்ன?

உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்
மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்
ஊதியத்திற்காக செய்யாமல் விருப்போடு பணி செய்யுங்கள்
உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள்
நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள்

9. கிறிஸ்தவர்கள் துன்ப நேரங்களில் என்ன செய்யவேண்டும்?

கிறிஸ்துவின் துன்பங்களில் நீங்கள் இத்துணை பங்கு கொள்கிறீர்கள் என எண்ணி மகிழுங்கள்.
கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள்
உங்களுக்கு வரும் துன்பங்கள், நீங்கள் கொலைஞராகவோ, திருடராகவோ, தீமை செய்பவராகவோ, பிறர் காரியங்களில் தலையிடுபவராகவோ இருப்பதால் வந்தவையாய் இருக்கக்கூடாது.
நீங்கள் கிறிஸ்தவராய் இருப்பதால் துன்புற்றால், அதற்காக வெட்கப்படலாகாது.
அந்தப் பெயரின் பொருட்டுக் கடவுளைப் போற்றிப் புகழுங்கள்.

10. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„நம்பிக்கைக்குரிய சகோதரன் என நான் கருதும் -- -- -- -- -- வழியாகச் சுருக்கமாக உங்களுக்கு எழுதியுள்ளேன்.“

பேதுரு
யோவான்
இயேசு
சில்வான்
மரியா

11. வீட்டு வேலையாளர்களுக்கு பேதுரு வழங்கும் அறிவுரை என்ன?

உங்கள் தலைவர்களுக்கு முழுமரியாதையோடு பணிந்திருங்கள்
நல்லவர்களுக்கும் கனிந்த உள்ளமுடையோருக்கும் மட்டுமல்ல, முரட்டுக் குணம் உள்ளவர்களுக்கும் பணிந்திருங்கள்
நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும்.
கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன்மாதிரியை வைத்துச் சென்றுள்ளார்
பணிவும், அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும்

12. இளைஞர்களுக்கு பேதுரு வழங்கிய அறிவுரை என்ன?

அறிவுத்தெளிவோடு விழிப்பாயிருங்கள்
இளைஞர்களே, நீங்கள் முதியவர்களுக்குப் பணிந்திருங்கள்
ஒருவர் மற்றவரோடு பழகும்போது எல்லாரும் மனத்தாழ்மையை ஆடையாய் அணிந்திருங்கள்
கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்துங்கள்
கீழ்படிதலுள்ள மக்களாய் இருங்கள்

13. திருமணமான பெண்களுக்கு பேதுருவின் அறிவுரை என்ன?

ஆசி கூறுங்கள்
கணவருக்கு பணிந்திருங்கள்
பணிவும் அமைதியுமே உங்களுக்கு அழியாத அலங்காரமாய் இருக்கட்டும்
நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாதிருங்கள்
தீமையைவிட்டு விலகி நன்மை செய்க

14. பிற இனத்தினர் செய்யும் எவ்வகை பழக்கங்களை விட்டொழிக்க பேதுரு அறிவுறுத்துகிறார்?

இச்சை
மதுமயக்கம்
களியாட்டம்
குடிவெறி
வெறுப்புக்குரிய சிலைவழிபாடு

15. திருமுழுக்கைப் பற்றி பேதுரு கூறுவது என்ன?

கடவுளுக்கு அஞ்சுங்கள்
திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல
அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்
எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது
கடவுளுக்கே அடிமைகளாய் இருங்கள்