மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 34
வேதாகமப் பகுதி : யோவான் நற்செய்தி 20, 21
முடிவுத் திகதி : 2016-10-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இயேசு உயிர்த்ததை முதலில் அறிவித்தவர் யார்?

பேதுரு
யோவான்
மகதலா மரியா
அன்னை மரியா
யூதர்கள்

2. இயேசு உயிர்த்தெழுந்ததற்கான அடையாளங்கள் என்ன?

கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருந்தது
இயேசுவின் உடலைக் காணவில்லை
இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது.
மகதலா மரியாவும் பேதுருவும், யோவானும், மற்ற சீடர்களும் இதைக் கண்டு நம்பினர்
காவலர்கள் இதைக்கண்டு நம்பினர்.

3. ரபூனி என்ற எபிரேயச் சொல்லின் பொருள் என்ன?

கடவுளே
போதகரே
ஆண்டவரே
அன்னையே
இயேசுவே

4. “அம்மா, ஏன் அழுகிறீர்?“ –இது யார் கூற்று?

வெண்ணாடை அணிந்த இரு வானதூதர்
இயேசு தனி அன்புகொண்டிருந்த சீடர்
மகதலா மரியா
உயிர்த்த ஆண்டவர்
தோட்டக்காரர்

5. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„உங்களுக்கு -- -- -- -- -- -- -- உரித்தாகுக".

அன்பு
பணம்
இரக்கம்
கடவுள்
அமைதி

6. உயிர்த்த இயேசு சீடர்களுக்கு தோன்றியபோது அங்கே யார் இல்லை?

திதிம் என்னும் தோமா
பேதுரு
நத்தனியேல்
இயேசு
யோவான்

7. „உங்களுக்கு அமைதி உரித்தாகுக“ – இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?

யோவான் 20:19
யோவான் 13:19
யோவான் 20:21
யோவான் 12:10
யோவான் 20:26


8. „நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்“ இது யார் கூற்று?

இயேசு
தோமா
பேதுரு
மகதலா மரியா
யோவான்

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„-- -- -- -- -- -- -- -- பெற்றுக்கொள்ளுங்கள்“

ஆண்டவரை
அன்பை
அமைதியை
தூய ஆவியை
பணத்தை

10. இயேசு சீடர்களுக்கு எந்த கடல் அருகே தோன்றினார்?

சாக்கடல்
திபேரியாக் கடல்
யோர்தான் நதி
கலிலேயா கடல்
இந்தியப் பெருங்கடல்

11. „நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்“ – இது யார் யாரிடம் கூறியது?

இயேசு தோமாவிடம்
தோமா இயேசுவிடம்
பேதுரு இயேசுவிடம்
இயேசு மகதலா மரியாவிடம்
இயேசு பேதுருவிடம்

12. „யோவானின் மகன் சீமோனே, நீ என் மீது அன்பு செலுத்துகிறாயா?“ இயேசு பேதுருவிடம் இவ்வாறு எத்தனை முறை கேட்கிறார்?

இரண்டு முறை
நான்கு முறை
மூன்று முறை
ஐந்து முறை
ஒரு முறை

13. இயேசு பேதுருவிடம் கூறியது என்ன?

என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்
என் ஆடுகளை மேய்
ஐயம் தவிர்த்து நம்பிக்கைக்கொள்
என்னைப் பின் தொடர்
உனக்கு என்னிடம் அன்பு உண்டா?

14. இயேசு தோமாவிடம் கூறியது என்ன?

இதோ! என் கைகள்
இங்கே உன் விரலை இடு
உன் கையை நீட்டி என் விலாவில் இடு
ஐயம் தவிர்த்து நம்பிக்கைக்கொள்
நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்

15. இயேசு மகதலா மரியாவிடம் கூறியது என்ன?

ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?
என்னை இப்படிப் பற்றிக்கொள்ளாதே
நான் என் தந்தையிடம் இன்னும் செல்லவில்லை
நீ என் சகோதரர்களிடம் சென்று அவர்களிடம், „என் தந்தையும் உங்கள் தந்தையும் என் கடவுளும் உங்கள் கடவுளுமானவரிடம் செல்லவிருக்கிறேன்“ எனச் சொல்
நான் ஆண்டவரைக் கண்டேன்