மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 33
வேதாகமப் பகுதி : யோவான் நற்செய்தி 18,19
முடிவுத் திகதி : 2016-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இயேசுவைக் காட்டிக்கொடுத்தவன் யார்?

பேதுரு
யோவான்
யூதாசு
சீமோன்
மரியா

2. சீமோன் பேதுரு யாரின் காதை வெட்டினார்?

இயேசு
மால்கு
யூதாசு
தலைமைக் குருவின் பணியாளர்
சீமோன்

3. யார் இந்த கயபா?

இவர் ஓர் தலைமைக் குரு
இவரின் மாமனார் பெயர் அன்னா
"மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது" என்று யூதர்களுக்கு ஆலோசனைக் கூறியவர்.
இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்ல திட்டமிட்டவர்.
இயேசுவின் சீடர்

4. பேதுரு யாரிடம் "இயேசுவைத் தெரியாது" என மறுதலித்தார்?

வாயில் காவல் செய்த பணிப்பெண்ணிடம்
யூதாசிடம்
தலைமைக் குருவிடம்
தலைமைக் குருவின் பணியாளரிடம்
குளிர் காய்ந்து கொண்டிருந்த ஒருவரிடம்

5. இயேசு தலைமைக் குருவிடம் விசாரணையின் போது கூறியது என்ன?

நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன்.
யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன்.
நான் மறைவாக எதையும் பேசியதில்லை
ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும்.
நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே

6. கயபாவின் ஆட்கள் ஏன் பிலாத்துவின் மாளிகையில் நுழையவில்லை?

கதவு மூடியிருந்ததால்
அதற்கு அனுமதியில்லை
பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க
இயேசு விரும்பவில்லை
விடியற்காலமாய் இருந்ததால்

7. பிலாத்துவின் விசாரணையின்போது இயேசுவின் பதில் என்ன?

எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல.
உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன். இதற்காகவே உலகிற்கு வந்தேன்.
உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்.
நீ யூதரின் அரசனா
நீ என்ன செய்தாய்?


8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"இவன் வேண்டாம். -- -- -- -- -- -- -- -- -- -- -- -- விடுதலை செய்யும்"

இயேசுவை
யூதர்களை
பிலாத்துவை
பரபாவையே
எங்களை

9. பரபா -சிறு குறிப்பு வரைக.

ஒரு கள்வன்
பிலாத்துவின் நண்பன்
சிறைக் கைதி
இயேசுவின் சீடர்
இயேசுவுக்கு பதிலாக விடுதலை செய்யப்பட்டான்

10. பிலாத்துவின் மாளிகையில் இயேசு அடைந்த பாடுகள் யாவை?

பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான்
வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்தார்கள்
"தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்" என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்
எதுவும் நடக்கவில்லை
செந்நிற மேலுடையை இயேசுவுக்கு அணிவித்தார்கள்

11. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"இதோ! -- -- -- -- -- -- -- -- -- "

இயேசு
சீடன்
கடவுள்
மனிதன்
மரியா

12. பிலாத்து அமர்ந்த நடுவர் இருக்கை எங்கே அமைந்திருந்தது?

எருசலேம்
கல்தளம்
உரோம்
கபதா
யூதேயா

13. பின்வருவனவற்றில் பிலாத்துவின் கூற்றுகளை தேர்ந்தெடுங்கள்.

இதோ! மனிதன்
இதோ, உங்கள் அரசன்
அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை
மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது
உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும்

14. இயேசுவை எங்கே சிலுவையில் அறைந்தனர்?

கபதா
மண்டை ஓட்டு இடம்
கொல்கொதா
கல்தளம்
கலிலேயா

15. சிலுவையடியில் இருந்த பெண்கள் யாவர்?

குளோப்பாவின் மனைவி மரியா
மகதலா மரியா
சாரா
இயேசுவின் தாய் மரியா
ரெபேக்கா