மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 32
வேதாகமப் பகுதி : யோவான் நற்செய்தி 15, 16, 17
முடிவுத் திகதி : 2016-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக
"நானே ----------------------; நீங்கள் அதன் -------------------."

சீடர்கள்
திராட்சைச் செடி
கொடிகள்
பணியாளர்கள்
தலைவர்

2. "நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது." இது யார் கூற்று?

பேதுரு
பவுல்
யோசேப்பு
யோவான்
இயேசு

3. பின்வருவனவற்றில் இயேசுவின் புகழ்மிக்க வசனங்களை தேர்ந்தெடுங்கள்

தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை.
இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன். உங்களை நான் நண்பர்கள் என்றேன்
உலகு உங்களை வெறுக்கிறதென்றால் அது உங்களை வெறுக்குமுன்னே என்னை வெறுத்தது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்
நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ளவேண்டும் என்பதே என் கட்டளை.

4. தூய ஆவியாரைப் பற்றி சீடர்களிடம் விளக்கியது என்ன?

நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார்.
நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.
அவர் வந்து பாவம், நீதி, தீர்ப்பு ஆகியவை பற்றி உலகினர் கொண்டுள்ள கருத்துகள் தவறானவை என எடுத்துக்காட்டுவார்.
உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.
அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார்.

5. தந்தையைப் பற்றி பேசியபின் இயேசுவுக்கு சீடர்கள் அளித்த மறுமொழி என்ன?

இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர்
உமக்கு அனைத்தும் தெரியும்.
யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது எங்களுக்கு இப்போது புரிகிறது.
இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர் என்பதை நம்புகிறோம்.
தந்தையே உங்கள்மீது அன்பு கொண்டுள்ளார்.

6. " இன்னும் சிறிது காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்; மீண்டும் சிறிது காலத்தில் என்னைக் காண்பீர்கள்". இவ்வார்த்தையைக் கேட்டு குழப்பத்திலிருந்த சீடர்களுக்கு இயேசுவின் பதில் என்ன?

நீங்கள் அழுவீர்கள், புலம்புவீர்கள்; துயருறுவீர்கள்; ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
பிள்ளையைப் பெற்றெடுக்கும்போது தாய் தனக்குப் பேறுகாலம் வந்துவிட்டதால் வேதனை அடைகிறார். ஆனால் பிள்ளையைப் பெற்றெடுத்தபின்பு மகிழ்ச்சியால் தம் வேதனையை அவர் மறந்துவிடுகிறார்.
இப்போது நீங்களும் துயருறுகிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காணும்போது உங்கள் உள்ளம் மகிழ்ச்சி அடையும்.
தந்தையே, நேரம் வந்துவிட்டது
உங்கள் மகிழ்ச்சியை யாரும் உங்களிடமிருந்து நீக்கிவிடமுடியாது.

7. தனக்கும் தன் தந்தைக்கும் உள்ள உறவை இயேசு எவ்வாறு சீடர்களிடம் விளக்குகிறார்.

தந்தையுடையவை யாவும் என்னுடையவையே
என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளதுபோல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன்.
நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார்.
நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்.


8. கோடிட்ட இடத்தை நிரப்புக
"நான் சொன்ன ----------------------- நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்"

கடவுளால்
செபத்தால்
வார்த்தைகளால்
அன்னையால்
சீடரால்

9. சீடர்கள் தன்னோடு இணைந்திருக்கவேண்டும் என்று இயேசு ஏன் வலியுறுத்துகிறார்?

கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது.
என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது.
என்னோடு இணைந்து இராதவர் கொடியைப்போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்.
நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும்.
என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன்

10. இயேசு சீடர்களை எவ்வாறு உற்சாகப்படுத்துகிறார்?

நீங்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருக்க இவற்றையெல்லாம் உங்களிடம் சொன்னேன்.
உங்களை நான் நண்பர்கள் என்றேன்.
துணிவுடன் இருங்கள்
உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்
அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும்

11. "பணியாளர் தலைவரைவிடப் பெரியவர் அல்ல" இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?

யோவான் 13:16
யோவான் 15:20
மத்தேயு 10: 24
லூக்கா 6:40
மாற்கு 20:1

12. சீடர்களிடம் பேசியபின் இயேசு தந்தையிடம் வேண்டியது என்ன?

தந்தையே, நேரம் வந்துவிட்டது. உம் மகன் உம்மை மாட்சிப்படுத்துமாறு நீர் மகனை மாட்சிப்படுத்தும்.
எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக
தந்தையே, உலகம் தோன்றும் முன்பே நீர் என்னை மாட்சிப்படுத்தியுள்ளீர். இப்போது உம் திருமுன் அதே மாட்சியை எனக்குத் தந்தருளும்.
நீர் எனக்குத் தந்தவை அனைத்தும் உம்மிடமிருந்தே வந்தவை என்பது இப்போது அவர்களுக்குத் தெரியும்.
இப்போது உம்மிடம் வருகிறேன்

13. கோடிட்ட இடத்தை நிரப்புக
"உமது வார்த்தையே -----------------"

ஒளி
உப்பு
பொய்
உண்மை
திராட்சைச் செடி

14. சீடர்களுக்கு வரும் துன்பங்களை இயேசு எவ்வாறு முன்னறிவிக்கிறார்?

உங்களைத் தொழுகைக்கூடத்திலிருந்து விலக்கி வைப்பார்கள்
தந்தையையும் என்னையும் அவர்கள் அறியாமல் இருப்பதால்தான் இவ்வாறு செய்வார்கள்
என்னை அவர்கள் துன்புறுத்தினார்கள் என்றால் உங்களையும் துன்புறுத்துவார்கள்
நீங்கள் சிதறடிக்கப்பட்டு ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்
இவை நிகழும் நேரம் வரும்போது நான் உங்களுக்கு இவை பற்றி முன்பே சொன்னதை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள்.

15. தந்தையிடம் இயேசு யாருக்காக, எதற்காக வேண்டுகிறார்?

சீடர்களுக்காக
ஒற்றுமைக்காக
வார்த்தையின் வழியாக நம்பிக்கை கொள்வோருக்காக
மரியாவுக்காக
தந்தைக்காக