1. "நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாயில்லை" - யாரைக் குறித்து இயேசு இவ்வாறு கூறுகிறார்?
2. இயேசுவுக்கும் சீமோனுக்கும் நடந்த உரையாடல் யாது?
3. சீடரின் காலடிகளைக் கழுவுதல் சடங்கு வாயிலாக இயேசு நமக்கு என்ன சொல்கிறார்?
4. "என்னோடு உண்பவனே என்மேல் பாய்ந்தான்" - இம்மறைநூல் வாக்கு எங்கே இடம் பெற்றுள்ளது?
5. இயேசுவின் மார்புப்பக்கமாய் சாய்ந்திருந்த சீடர் யார்?
6. தன் சாவிற்கு முன் இயேசு சீடர்களுக்குக் கொடுத்த புதிய கட்டளை என்ன?
7. "ஆண்டவரே, ஏன் இப்போது நான் உம்மைப் பின்தொடர இயலாது? உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்". இது யார் கூற்று?
8. "ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்". இது யார் கூற்று?
9. "ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்" என்ற பிலிப்பின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?
10. "உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன்". இங்கு குறிப்பிடப்படும் துணையாளர் யார்?
11. தூய ஆவியாரைப் பற்றி இயேசு கூறுவது என்ன?
12. கோடிட்ட இடத்தை நிரப்புக "நீங்கள் உள்ளம் கலங்கவேண்டாம். கடவுளிடம் -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -. என்னிடமும் -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -"
13. "ஆண்டவரே, நீர் உம்மை உலகிற்கு வெளிப்படுத்தாமல் எங்களுக்கு வெளிப்படுத்தப் போவதாகச் சொல்கிறீரே, ஏன்"- இது யார் கூற்று?
14. பின்வருவனவற்றில் எந்த வசனம் எல்லாத் திருப்பலியிலும் பயன்படுத்தப்படுகிறது?
15. "நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்". இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?