மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 30
வேதாகமப் பகுதி : யோவான் நற்செய்தி 11, 12
முடிவுத் திகதி : 2016-06-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. மார்த்தா வாழ்ந்த ஊர் எது?

எருசலேம்
கலிலேயா
சமாரியா
பெத்தானியா
இந்தியா

2. ஆண்டவர் மேல் நறுமணத்தைலம் பூசித் தமது கூந்தலால் அவரின் காலடிகளைத் துடைத்தவர் யார்?

மார்த்தா
மரியா
இலாசர்
இயேசு
பேதுரு

3. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"நம் நண்பன் -- -- -- -- -- -- -- -- -- - தூங்குகிறான்; நான் அவனை எழுப்புவதற்காகப் போகிறேன்"

இயேசு
மரியா
இலாசர்
பவுல்
சீடர்கள்

4. கோடிட்ட இடத்தை நிரப்புக "-- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- நானே"

உயிர்த்தெழுதலும்
ஒளியும்
இருளும்
அமைதியும்
வாழ்வும்

5. பெத்தானியாவில் வாழ்ந்தவர்கள் யாவர்?

மரியா
மார்த்தா
இலாசர்
தோமா
யோவான்

6. "நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" இது யார் கூற்று?

இலாசர்
மரியா
தோமா
இயேசு
பேதுரு

7. மரியாவின் நறுமணத்தைலம் பூசும் நிகழ்வு எதை நினைவூட்டுகிறது?

மரியாவின் மனமாற்றத்தை
மரியாவின் அன்பை
இயேசுவின் அடக்க நாளை
இயேசுவின் அன்பை
இயேசுவின் மன்னிப்பை

8. இயேசுவைப் பற்றிய மார்த்தாவின் கூற்று என்ன?

ஆண்டவரே, நீரே மெசியா
நீரே இறைமகன்
நீரே உலகிற்கு வரவிருப்பவர்
நீரே ஆயன்
நீரே வாயில்

9. இலாசருக்காக இயேசு தன் தந்தையிடம் மன்றாடியது என்ன?

ஆண்டவரே, நான்கு நாள் ஆயிற்று; நாற்றம் அடிக்குமே.
தந்தையே, நீர் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்ததற்காக உமக்கு நன்றி கூறுகிறேன்.
நீர் எப்போதும் என் வேண்டுதலுக்குச் செவிசாய்க்கிறீர் என்பது எனக்கு தெரியும்
எனினும் நீரே என்னை அனுப்பினீர் என்று சூழ்ந்து நிற்கும் இக்கூட்டம் நம்பும் பொருட்டே இப்படிச் சொன்னேன்.
ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக

10. "இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?" என்ற இந்த யூதாசின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?

மகளே சீயோன், அஞ்சாதே
மரியாவைத் தடுக்காதீர்கள்
என் அடக்க நாளை முன்னிட்டு அவர் இதைச் செய்யட்டும்.
ஏழைகள் உங்களோடு என்றும் இருக்கிறார்கள்
ஆனால் நான் உங்களோடு என்றும் இருக்கப்போவதில்லை

11. யூதர்கள் யாரை கொலை செய்ய திட்டமிட்டனர்?

பேதுருவை
இலாசரை
மரியாவை
இயேசுவை
மார்த்தாவை

12. பின்வருவனவற்றில் இயேசுவின் கூற்று யாது?

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.
தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர்
எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்
என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது.
மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது

13. "நான் உலகிற்குத் தீர்ப்பு வழங்க வரவில்லை; மாறாக அதை மீட்கவே வந்தேன்." இது யார் கூற்று?

தோமா
இயேசு
இலாசர்
மரியா
மார்த்தா

14. "அவர்கள் கண்ணால் காணாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம்மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி அவர்களுடைய கண்ணை மூடச் செய்தார். உள்ளத்தை மழுங்கச் செய்தார்" இப்பகுதி எங்கே உள்ளது?

யோவான் 12:39-40
யோவான் 12:41
எசாயா 6:9-10
எசாயா 9:6-10
யோவான் 13:5

15. பல தலைவர்கள் இயேசுவிடம் நம்பிக்கைக் கொண்டும், அதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள ஏன் தயங்கினர்?

பரிசேயர்களுக்கு அஞ்சியதால்
அப்படி ஒப்புக்கொண்டால் அவர்கள் தொழுகைக் கூடத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்
அவர்கள் கடவுள் அளிக்கும் பெருமையைவிட மனிதர் அளிக்கும் பெருமையையே விரும்பினார்கள்
இயேசுவை வெறுத்ததால்
இயேசு அரும் அடையாளம் செய்யாததால்