மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 2
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி 3 முதல் 4 வரையான அதிகாரங்கள்.
முடிவுத் திகதி : 2014-02-28

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. “மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது “என்று கூறியவர் யார்?

எசாயா
பேதுரு
திருமுழுக்கு யோவான்
தோபித்து
எரேமியா

2. திருமுழுக்கு யோவான் உடுத்திய உடை எது?

பஞ்சு உடை
பட்டு உடை
ஒட்டக முடியாலான ஆடை
தோல் உடை
புல்லினாலான உடை

3. “பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது ஆண்டவருக்கா வழியை ஆயத்தமாக்குங்கள் அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று கூறிய இறைவாக்கினர்?

எசேக்கியல்
மீக்கா
மலாக்கி
அபகூக்கு
எசாயா

4. திருமுழுக்கு யோவான் உண்ட உணவு யாது?

தயிர் சாதம்
வெட்டுக்கிளி
இலைவகைகள்
மிருகங்களின் இறைச்சி
காட்டுத் தேன்

5. மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு யோவானிடம் என்ன பெற்றார்கள்?

தங்களுக்கு தேவையான பொருட்கள்
அப்பமும் மீன் துண்டும்
திருமுழுக்கு
குடிக்க தண்ணீர்
உணவுப் பொருட்கள்

6. திருமுழுக்கு யோவான் பரிசேயர் சதுசேயர்களிடம் கூறிய வார்த்தைகளை குறிப்பிடவும்?

விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்.
நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்.
ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை என உங்களிடையே சொல்லிப் பொருமை கொள்ள வேண்டாம்.
நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்
இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமிற்குப் பிள்ளைகதத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்லுகிறேன்.

7. திருமுழுக்கு யோவான் எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர் என்று யாரைப்பற்றி குறிப்பிடகின்றார்?

பேதுரு
வானகத் தந்தை
இயேசு
தூய ஆவி
யோசேப்பு

8. நான் தண்ணிரால் திருமுழுக்குக் கொடுக்கின்றேன் எனக்கு(திருமுழுக்கு யோவான்) பின் வருபவர் எதனால் திருமுழுக்கு கொடுப்பார்?

இறை வேண்டலால்
தூய ஆவி என்னும் நெருப்பால்
எண்ணையால்
சம்பலால்
நறுமணத் தைலத்தால்

9. இப்பொழுது விட்டுவிடும், கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை என்று சொல்லியவர்

அலகை
திருமுழுக்கு யோவான்
இயேசு
பரிசேயர்
சதுசேயர்

10. இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறியபோது என்ன இடம் பெற்றது?

வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் கண்டார்
அவரது முகம் கதிரவனைப் போல் ஒளிர்ந்தது
அவருடைய ஆடைகள் ஒளிபோன்று வெண்மையாயின
என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று.

11. இயேசு பாலைவனத்தில் எத்தனை நாட்கள் நோன்பிருந்தார்,

60
80
100
40
30

12. இயேசு பாலைவனத்தில், அலகையால் சோதிக்கப்பட்ட போது அலகை சொன்ன வார்த்தைகள் எவை?

நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக கடவுளின் வாய்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர் என்று மறைநூலில் எழுதியுள்ளது.
நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்
உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம் எனவும் எழுதியுள்ளது.
நீர் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து என்னை வணங்கினால் இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்

13. அலகை அவரை விட்டு அகன்றபின் யார் வந்து இயேசுவிக்கு பணிவிடை செய்தனர்?

அன்னை மரியாவும் யோசேப்பும்
திருமுழுக்கு யோவானும் அவருடைய சீடர்களும்
பரிசேயர்கள் சதுசேயர்கள்
வானதூதர்
பாலைநிலத்தில் முழங்கின குரல்

14. கலிலேயக் கடற்கரையில் வலைவீசிக் கொண்டிருந்த போதும், வலைகளைப் பழுது பார்த்து கொண்டிருந்தபோதும் இயேசு சீடர்கள்களாக அழைத்தவர்கள் யாவர்

சீமோன்
அந்திரேயா
யோவான்
பிலிப்பு
யாக்கோபு

15. கீறிட்ட இடத்தில் வரவேண்டிய வார்த்தைகள் எவை? இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை .................... .................... ஆக்குவேன் ' என்றார்.

மீன்களை பிடிப்பவர்
மனிதரைப் பிடிப்பவர்
பிசாசுகளை ஒட்டுபவர்
சபைகளை கட்டுபவர்
ஆலயத்தை கட்டுபவர்