1. "ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா? இவர் பெற்றோர் செய்த பாவமா?" இதற்கு இயேசுவின் பதில் என்ன?
2. பார்வையற்றவர் எங்கே குணம்பெற்றார்?
3. "எப்படி பார்வை பெற்றாய்?" என்ற பரிசேயர்களின் கேள்விக்கு பார்வையற்றவராய் இருந்தவரின் பதில் என்ன?
4. "அவனிடமே கேளுங்கள். அவன் வயதுவந்தவன் தானே! நடந்ததை அவனே சொல்லட்டும்." இது யார் கூற்று?
5. 'சிலோவாம்' என்பதன் பொருள் என்ன?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: "வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் -- -- -- -- -- -- -- -- "
7. இயேசுவின் பிரபலமான சொற்றொடர் எது?
8. "எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்" என்ற இயேசுவின் கேள்விக்கு யூதர்களின் பதில் என்ன?
9. பரிசேயர்கள் பார்வையற்றிருந்தவரிடம் தொடுத்த கேள்விக்கணைகள் என்ன?
10. "நாங்கள் மோசேயின் சீடர்கள்" இது யார் கூற்று?
11. இயேசு யோவான் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு சென்றபோது நடந்தது என்ன?
12. இயேசுவின் பெயர்கள் என்ன?
13. ஆயரைப் பற்றிய விவிலிய பகுதிகள் எது?
14. எவ்வாறு யூதர்கள் இயேசுவைப் பழித்தனர்?
15. இயேசு தன் தந்தையோடு கொண்ட உறவை எவ்வாறு விளக்குகிறார்?