மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 28
வேதாகமப் பகுதி : யோவான் நற்செய்தி 7, 8
முடிவுத் திகதி : 2016-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இயேசு யூதர்களின் கூடார விழாவிற்கு சென்றாரா?

அவர் கலிலேயாவிலேயே தங்கிவிட்டார்.
செல்லவில்லை
வெளிப்படையாக அன்றி மறைவாகச் சென்றார்.
ஏற்ற நேரம் வராததால் செல்லவில்லை
தம் சகோதரர்களோடு சென்றார்.

2. கூடாரவிழாவிலே மக்கள் இயேசுவைப் பற்றி என்ன பேசிக்கொண்டார்கள் ?

அவர் நல்லவர்
இல்லை, அவர் மக்கள் கூட்டத்தை ஏமாற்றுகிறார்.
எனக்கு ஏற்ற நேரம் இன்னும் வரவில்லை
படிப்பற்ற இவருக்கு இத்துணை அறிவு எப்படி வந்தது?
நீர் இவ்விடத்தை விட்டு யூதேயா செல்லும்

3. "பொதுவாழ்வில் ஈடுபட விரும்பும் எவரும் மறைவாகச் செயல்புரிவதில்லை" இது யார் கூற்று?

இயேசு
பேதுரு
இயேசுவின் சீடர்கள்
யூதர்கள்
இயேசுவின் சகோதரர்கள்

4. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"வெளித்தோற்றத்தின்படி தீர்ப்பளியாதீர்கள். ----------------------- தீர்ப்பளியுங்கள்"

அன்போடு
நீதியோடு
நேர்மையோடு
சிரிப்போடு
வேதனையோடு

5. விருத்தசேதனம் பற்றிய குறிப்புகள் எங்கே உள்ளன?

திருத்தூதர் பணிகள் 7:8
யோவான் 7:22
யோவான் 7:24
லேவியர் 12:3
தொடக்கநூல் 17:10

6. "தாவீதின் மரபிலிருந்தும் அவர் குடியிருந்த பெத்லகேம் ஊரிலிருந்தும் மெசியா வருவார் என்றல்லவா மறைநூல் கூறுகிறது?" எங்கே கூறப்படுகிறது?

யோவான் 7:43
நீதிமொழிகள் 18:4
எசாயா 4:5
மீக்கா 5:2
எசாயா 55:1

7. "உலகின் ஒளி நானே". இது யார் கூற்று?

தந்தை கடவுள்
இயேசு
யோவான்
பேதுரு
அன்னை மரியா

8. நிக்கதேம் யார்?

பரிசேயர்
இயேசுவை இரவில் சந்தித்தவர்
ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது முறையன்று என்று வாதிட்டவர்
யோவான் 3:1, 7:50, 19:39 ஆகிய பகுதிகளில் இடம்பெற்றுள்ளவர்
சதுசேயர்

9. விபச்சாரம் செய்த பெண்ணை கொல்லவேண்டும் என்பது மோசே கொடுத்த கட்டளை. இதற்கான சான்று எங்கே உள்ளது?

யோவான் 8:12
லேவியர் 20:10
யோவான் 7:30
இணைச்சட்டம் 22:22-24
எசாயா 8:12

10. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனி ----------------- செய்யாதீர்."

அன்பு
சிலுவை
பாவம்
செபமாலை
தவறு

11. இயேசுவுக்கு எதிராக யூதர்களின் கூற்று என்ன?

நீ சமாரியன்
நீ பேய் பிடித்தவன்தான்
உம் சான்று செல்லாது
உங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நீர் எப்படிச் சொல்லலாம்?
நாங்கள் பரத்தைமையால் பிறந்தவர்கள் அல்ல

12. யூதர்களுடனான விவாதத்தில் இயேசு கூறியவை என்ன?

நீங்கள் கீழிருந்து வந்தவர்கள்; நான் மேலிருந்து வந்தவன்
நீங்கள் இவ்வுலகைச் சார்ந்தவர்கள். ஆனால் நான் இவ்வுலகைச் சார்ந்தவன் அல்ல
என்னை அனுப்பியவர் என்னோடு இருக்கிறார். அவர் என்னைத் தனியாக விட்டுவிடுவதில்லை
கடவுள் உங்கள் தந்தையெனில் நீங்கள் என்மேல் அன்பு கொள்வீர்கள்
சாத்தானே உங்கள் தந்தை

13. தன்மேல் நம்பிக்கைக்கொண்ட யூதர்களுக்கு இயேசு கூறிய அறிவுரை என்ன?

என் தந்தைக்கு மதிப்பளிப்பவன்
என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால் உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்.
உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள்
உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும்
நான் உண்மையைக் கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை

14. இருக்கிறவர் நானே என்ற வரி எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?

ஒருமுறை
இருமுறை
மூன்று முறை
நான்கு முறை
ஐந்து முறை

15. கடவுளே எங்கள் தந்தை என்று கூறிய யூதர்களுக்கு பதிலடியாக இயேசு கூறியது என்ன?

சாத்தானே உங்களுக்குத் தந்தை
அவன் ஒரு கொலையாளி
அவன் பொய்யன்
அவன் பொய்மையின் பிறப்பிடம்
நான் உண்மையை கூறுவதால் நீங்கள் என்னை நம்புவதில்லை