மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 27
வேதாகமப் பகுதி : யோவான் நற்செய்தி 5, 6
முடிவுத் திகதி : 2016-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. பெத்சதா குளத்தில் இறங்க விரும்பியவர் எத்தனை ஆண்டுகளாய் உடல்நலமற்றிருந்தார்?

35 ஆண்டுகள்
38 ஆண்டுகள்
34 ஆண்டுகள்
33 ஆண்டுகள்
37 ஆண்டுகள்

2. பெத்சதா குளம்- சிறுகுறிப்பு வரைக

இது எருசலேமில் உள்ளது
ஆட்டு வாயிலுக்கு அருகில் ஐந்து மண்டபங்கள் கொண்ட குளம்
ஆண்டவரின் தூதர் தண்ணீரை கலக்கும் நேரத்தில் உடல் நலமற்றோர் குளத்தில் இறங்குவர்
பெத்சதா என்பது கிரேக்கப் பெயர்
பெத்சதா என்பது எபிரேயப் பெயர்

3. படுக்கையை எடுத்துக்கொண்டு நடந்து செல்லும் என்று கூறியவர் யார்?

இயேசு
யூதர்கள்
உடல்நலமற்றிருந்தவர்
பேதுரு
பவுல்

4. ஏன் யூதர்கள் இயேசுவின்மேல் கோபம்கொண்டு, கொல்ல முயற்சித்தனர்?

ஓய்வுநாளில் உடல் நலமற்றவருடன் பேசியதால்
இயேசு தம்மையே கடவுளுக்கு இணையாக்கியதால்
ஓய்வுநாளில் உடல்நலமற்றவரை, எழுந்து படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றதால்
கடவுளைத் தம் சொந்தத் தந்தை என்று கூறியதால்
ஓய்வுநாள் சட்டத்தை மீறியதால்

5. தந்தை, மகன் உறவு பற்றி இயேசு கூறுவது என்ன?

மகன் தாமாக எதையும் செய்ய இயலாது; தந்தையிடம் தாம் காணும் செயல்களையே செய்ய இயலும்.
தந்தை மகன்மேல் அன்புகொண்டு தாம் செய்யும் அனைத்தையும் அவருக்குக் காட்டுகிறார்.
தந்தை இறந்தோரை எழுப்பி அவர்களை வாழவைப்பதுபோல மகனும் தாம் விரும்பியவர்களை வாழவைக்கிறார்.
தீர்ப்பு அளிக்கும் அதிகாரம் முழுவதையும் தந்தை மகனுக்கு அளித்துள்ளார்.
மகனை மதியாதவர் அவரை அனுப்பிய தந்தையையும் மதிப்பது இல்லை

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

தந்தை, தாம் ------------------- இருப்பதுபோல மகனும் --------------------- இருக்குமாறு செய்துள்ளார்.

மகனாய்
வாழ்வின் ஊற்றாய்
தந்தையாய்
தூய ஆவியாய்
விளக்காய்

7. தந்தை ஏன் மகனுக்கு தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை கொடுத்தார்?

மகன் பாவம் செய்யாததால்
தந்தை யாருக்கும் தீர்ப்பு அளிப்பதில்லை
மகன் குணமாக்கியதால்
மகன் மானிடமகனாய் இருப்பதால்
மகன் சிலுவை சுமந்ததால்


8. இயேசு யோவானைப் பற்றி கூறியவை என்ன?

உண்மைக்குச் சான்று பகர்ந்தவர்
எரிந்து சுடர்விடும் விளக்கு
நீங்கள் சிறிதுநேரமே அவரது ஒளியில் களிகூர விரும்பினீர்கள்
அவரது குரலைக் கேட்டதுமில்லை; அவரது உருவைக் கண்டதுமில்லை
வாழ்வு பெறுமாறு என்னிடம் வர உங்களுக்கு விருப்பம் இல்லை

9. கலிலேயக் கடலின் மற்றொரு பெயர் என்ன?

சாக்கடல்
யோர்தான்
செங்கடல்
நைல் நதி
திபேரியக் கடல்

10. அப்பம் பகிர்ந்தளித்தல் புதுமை இடம்பெற்றுள்ள பகுதி எது?

யோவான் 6:1-14
மத்தேயு 14:13-21
மாற்கு 6:30-44
லூக்கா 9:10-17
யோவான் 6:16-21

11. அனைத்து நற்செய்திகளிலும் இடம்பெற்றுள்ள ஒரே புதுமை எது?

இயேசு கடலை கடந்து செல்லுதல்
ஓய்வுநாளில் உடல் நலமற்றவர் நலமடைதல்
அப்பம் பகிர்ந்தளித்தல்
தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுதல்
பார்வையற்றவர் பார்வை பெறுதல்

12. சிறுவனிடம் அப்பமும் மீனும் உள்ளது என்பதை இயேசுவிடம் சொன்னது யார்?

பிலிப்பு
பேதுரு
அந்திரேயா
யோவான்
பவுல்

13. யோவான் 6 ஆம் அதிகாரம் குறிப்பாக நமக்கு சொல்லும் செய்தி என்ன?

இயேசுவே நம் ஆண்டவர்
இயேசுவே நம் உணவு
இயேசுவே நம் வழி
இயேசுவே நம் மெசியா
இயேசுவே நம் ஒளி

14. இயேசுவின் எந்தப் பேச்சு வாக்குவாதத்திற்கு இட்டுச்சென்றது?

வாழ்வுதரும் உணவு நானே
மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள்
என் வார்த்தையைக் கேட்டு என்னை அனுப்பியவரை நம்புவோர் நிலைவாழ்வுக் கொண்டுள்ளனர்
எனது சதை உண்மையான உணவு
எனது இரத்தம் உண்மையான பானம்

15. "ஆண்டவரே நாங்கள் யாரிடம் போவோம்? நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன" இது யார் கூற்று?

பிலிப்பு
அந்திரேயா
யோவான்
பேதுரு
இயேசு