மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 26
வேதாகமப் பகுதி : யோவான் நற்செய்தி 3, 4
முடிவுத் திகதி : 2016-02-29

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. நிக்கதேம் - சிறுகுறிப்பு வரைக

பரிசேயர்
சதுசேயர்
யூதத் தலைவர்களுள் ஒருவர்
இரவில் இயேசுவை சந்தித்தவர்
அரசர்

2. கோடிட்ட இடத்தை நிரப்புக..... "ஒருவர் -------------------------, ---------------------------- பிறந்தாலன்றி இறையாட்சிக்கு உட்பட இயலாது"

இயேசுவாலும்
தந்தையாலும்
தண்ணீராலும்
வார்த்தையாலும்
தூய ஆவியாலும்

3. "வயதானபின் ஒருவர் எப்படிப் பிறக்கமுடியும்" என்ற நிக்கதேமின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?

மனிதரால் பிறப்பவர் மனித இயல்பை உடையவர்
தூய ஆவியால் பிறப்பவர் தூய ஆவியின் இயல்பை உடையவர்
காற்று விரும்பிய திசையில் வீசுகிறது
அது எங்கிருந்து வருகிறது என்றும் எங்குச் செல்கிறது என்றும் உமக்குத் தெரியாது
தூய ஆவியால் பிறந்த அனைவருக்கும் இது பொருந்தும்

4. பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது என்ற குறிப்பு விவிலியத்தில் எங்குள்ளது?

தொடக்கநூல் 12:3
எண்ணிக்கை 21:9
யோவான் 21:8
யோவான் 3:14
2 யோவான் 3:14

5. திருமுழுக்கு யோவானின் கூற்று யாது?

அவரது செல்வாக்குப் பெருகவேண்டும்; எனது செல்வாக்குக் குறையவேண்டும்
நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்
மணமகள் மணமகனுக்கே உரியவர்
தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர்
அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்

6. தூய்மை சடங்குபற்றி யாருக்கும் யாருக்குமிடையே விவாதம் நடந்தது?

இயேசுவுக்கும் யோவானுக்குமிடையே
யோவானுக்கும் அவரது சீடருக்குமிடையே
யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்குமிடையே
சமாரிய பெண்ணுக்கும் இயேசுவுக்குமிடையே
நிக்கதேமுவுக்கும் இயேசுவுக்குமிடையே

7. யோவான் எங்கே திருமுழுக்கு கொடுத்துகொண்டிருந்தார்?

யோர்தான் ஆற்றங்கரையில்
சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில்
கலிலேயாவில்
எருசலேமில்
இந்தியாவில்

8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

மகனிடம் ---------------------- நிலைவாழ்வை பெறுவர். ----------------------- வாழ்வைக் காணமாட்டார்.

நம்பிக்கை கொள்வோர்
நம்பிக்கை கொள்ளாதோர்
இறந்தோர்
வாழ்வோர்
நோயாளிகள்

9. இயேசு சமாரியப் பெண்ணை எங்கே சந்தித்தார்?

கலிலேயாவில்
சமாரியாவில்
சிக்காரில்
யாக்கோபு கிணற்றருகே
யூதேயாவில்

10. சமாரியப் பெண்ணிடம் இயேசு கூறியது என்ன?

குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்
நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்
நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக்கொண்டு வாரும்
அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது
நீர் யூதர்; நானோ சமாரியப்பெண்

11. "கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்" - இது யார் கூற்று?

இயேசு
நிக்கதேம்
யோவான்
சமாரியப்பெண்
யூதர்கள்

12. எது தன் உணவு என்று இயேசு கூறுகிறார்?

கல் அப்பமாதல்
என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதும்
திராட்சை ரசம்
வாழ்வுதரும் தண்ணீர்
எதுவுமில்லை

13. இயேசு சமாரியாவில் எத்தனை நாள் தங்கினார்?

ஒரு நாள்
இரண்டு நாள்
மூன்று நாள்
நான்கு நாள்
ஐந்து நாள்

14. இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு எந்த வழியாக சென்றார்?

எருசலேம்
யோர்தான்
பெத்லகேம்
எகிப்து
சமாரியா

15. தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்ற கருத்து இடம்பெற்றுள்ள விவிலியபகுதி எது?

யோவான் 4:44
மத்தேயு13:57
மாற்கு 6:4
லூக்கா 4:24
யோவான் 4:34