1. "தொடக்கத்தில் வாக்கு இருந்தது; அவ்வாக்கு கடவுளோடு இருந்தது; அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது". இங்கு குறிப்பிடப்படும் "வாக்கு" என்னும் சொல் யாரை குறிக்கிறது?
2. "எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்". இது யார் கூற்று?
3. நற்செய்தியாளர் யோவானைப் பற்றி சிறுகுறிப்பு வரைக?
4. கோடிட்ட இடத்தை நிரப்புக: --------------- மனிதர் ஆனார்; நம்மிடையே குடிகொண்டார்
5. குருக்களும் லேவியர்களும் திருமுழுக்கு யோவானிடம் கேட்டவை என்ன?
6. "ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் எனப் பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கிறது" - இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?
7. இயேசு எங்கே யாரிடம் திருமுழுக்கு பெற்றார்?
8. "இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்." இது யார் கூற்று?
9. "கேபா" என்றால் என்ன?
10. "வந்து பாருங்கள்"- இயேசு இவ்வாறு யாரிடம் கூறினார்?
11. பெத்சாய்தா ஊரைச் சேர்ந்தவர்கள் யாவர்?
12. இயேசு நத்தனியேலிடம் சொன்னவை என்ன?
13. இயேசு செய்த முதல் அரும் அடையாளம் எது?
14. எருசலேம் கோவிலை கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
15. எருசலேம் கோவிலில் இயேசு கோபம் கொண்டு செய்தது என்ன?