மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 24
வேதாகமப் பகுதி : யாக்கோபு எழுதிய திருமுகம்
முடிவுத் திகதி : 2015-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஐயப்பாடு கொள்பவர்கள் நிலை என்ன?

இறந்து போவார்கள்
காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள்
இருமனமுள்ளவர்கள்
நிலையற்ற போக்குடையவர்கள்
அவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெறமுடியும் என நினைக்காதிருக்கட்டும்

2. சோதனை பற்றி யாக்கோபின் கருத்து என்ன?

உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும்
சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர்.
அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள்
சோதனை வரும்போது, 'இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது' என்று யாரும் சொல்லக்கூடாது.
ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர்.

3. கோடிட்ட இடத்தை நிரப்புக:

ஒவ்வொருவரும் கேட்பதில் ------------------- பேசுவதில் -------------------- காட்டவேண்டும்

ஆர்வமும்
வேகமும்
தயக்கமும்
தாமதமும்
பயமும்

4. ஏழைகளை மதித்தல் குறித்து கூறப்படும் அறிவுரை என்ன?

ஆள்பார்த்து செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்
உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாக கடவுள் தேர்ந்துகொண்டார்.
நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள்.
கொலை செய்யாதே
பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்தவர்மீது தனிக்கவனம் செலுத்துகிறீர்கள்

5. எது பயனற்றது?

தூங்குவது
சோம்பேறியாய் இருப்பது
செயலற்ற நம்பிக்கை
இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பது
பிறருக்கு உதவுவது

6. நாவடக்கம் பற்றி யாக்கோபின் கருத்து என்ன?

பேச்சில் தவறாதவர் நிறைவு பெற்றவராவர்
தீப்பொறி எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது. நாவும் தீயைப் போன்றதுதான்.
நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது.
தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.
தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக்கொண்டிருப்போர் தம் நாவை அடக்காமலிருப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்

7. செல்வர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்ன?

உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள்
இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள்.
நேர்மையானவரை குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள்
உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன
பேய்த்தன்மை வாய்ந்தது


8. செயலுள்ள நம்பிக்கைக்கு உதாரணமாக குறிப்பிடப்படும் நபர்கள் யாவர்?

யூதாஸ்
ஆபிரகாம்
பர்னபா
யோவான்
இராகாபு என்ற விலைமகள்

9. சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன?

சிற்றின்ப நாட்டங்கள்
பேராசை
சினிமா
பயம்
நம்பிக்கை

10. கோடிட்ட இடத்தை நிரப்புக:

நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது --------------------------.

புண்ணியம்
பாவம்
மகிழ்ச்சி
கவலை
ஒன்றுமில்லை

11. 'மழை பெய்யக்கூடாது' என்ற எலியாவின் மன்றாட்டால் எத்தனை நாட்கள் மழையில்லாது போனது?

பத்து நாட்கள்
மூன்று ஆண்டுகள்
ஆறு மாதம்
மூன்று ஆண்டு ஆறு மாதம்
ஆறு ஆண்டு மூன்று மாதம்

12. யாரைப்போல் பொறுமையாக இருக்கவேண்டும்?

யோபு
எலியா
சூசை
ஆபிரகாம்
பயிரிடுபவர்

13. நம்பிக்கையோடு மன்றாடினால் நடப்பது என்ன?

நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார்.
ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார்
அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார்.
குணமடைவீர்கள்
நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும்.

14. ஞானத்தின் பண்புகள் யாவை?

அமைதியை நாடும்
பொறுமை கொள்ளும்
இணங்கிப் போகும்
இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது
நடுநிலை தவறாதது

15. யாக்கோபின் இறுதி அறிவுரை என்ன?

உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்
மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும்
உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள்
விபச்சாரம் செய்யாதே
கொலை செய்யாதே