மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 23
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் 27, 28
முடிவுத் திகதி : 2015-11-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இத்தாலியாவுக்கு பவுலை அழைத்துச்செல்லும் பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்பட்டது?

அகிரிப்பா
பெஸ்து
யூலியு
அரிஸ்தர்க்கு
பேதுரு

2. யூலியு பவுலை எவ்வாறு நடத்தினான்?

பவுலிடம் கடுமையாக நடந்துகொண்டார்
பவுலை மனித நேயத்துடன் நடத்தினார்
அவர் தம் நண்பர்களிடம் செல்ல அனுமதித்தார்.
நண்பர்கள் அவரைக் கவனித்துக்கொள்ளவும் அனுமதித்தார்.
அவரை சிறையில் அடைத்தான்

3. எந்த தீவில் தங்கியிருந்தால் கப்பலில் பயணித்தோர் புயலிலிருந்து தப்பியிருக்கலாம்?

மால்தா தீவு
கிரேத்துத் தீவு
கவுதா தீவு
சிலிசியா
பம்பிலியா

4. பேய்ப்புயலால் கப்பலில் பயணித்தோர் அடைந்த துன்பம் என்ன?

கதிரவனோ, விண்மீன்களோ பல நாள்களாய்த் தென்படவில்லை
பல நாள்களாக எதுவும் உண்ணாமலிருந்தனர்.
கப்பலின் தளவாடங்களை அவர்கள் தங்கள் கையாலேயே எடுத்துக் கடலில் வீசினார்கள்.
ஆதிரியா கடலில் அங்குமிங்குமாக அடித்துச் செல்லப்பட்டு கொண்டிருந்தனர்.
மனவுறுதியுடன் இருந்தனர்.

5. கடலில் தத்தளித்த கப்பலில் பயணித்தோருக்கு பவுல் எவ்வாறு நம்பிக்கையூட்டினார்?

இப்போதும் நீங்கள் மன உறுதியுடன் இருக்குமாறு உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன்.
கப்பலுக்குத்தான் இழப்பு நேரிடுமேயன்றி உங்களுள் எவருடைய உயிருக்கும் ஆபத்து ஏற்படாது.
மன உறுதியுடனிருங்கள்.
நான் கடவுளிடம் நம்பிக்கை கொண்டிருக்கிறேன்.
நாம் ஒரு தீவில் தள்ளப்படுவது உறுதி

6. "அஞ்சாதீர்! நீர் சீசர் முன்பாக விசாரிக்கப்பட வேண்டும்" இது யார் கூற்று?

பவுல்
யூலியு
கடவுளின் தூதர்
மாசிதோனியர்
சீசர்

7. கப்பலில் எத்தனை பேர் பயணித்தனர்?

76 பேர்
136 பேர்
376 பேர்
73 பேர்
276 பேர்

8. கப்பலில் பயணித்தோர் எத்தனை நாட்களாக பட்டினியாய் இருந்தனர்?

10 நாட்கள்
14 நாட்கள்
13 நாட்கள்
20 நாட்கள்
12 நாட்கள்

9. கப்பலிலிருந்து யாருக்கு தெரியாமல் தப்பி ஓட நினைத்தவர் யார்?

கப்பலோட்டுநர்கள்
பவுல்
அரிஸ்தர்க்கு
பேதுரு
மாசிதோனியர்

10. "இவர்கள் கப்பலில் இல்லாவிட்டால் நீங்கள் தப்பிப்பிழைக்க முடியாது" இது யார் கூற்று?

நூற்றுவர் தலைவர்
சீசர்
பவுல்
படைவீரர்கள்
பெஸ்து

11. கப்பலில் இப்போது பயணம் செய்வது ஆபத்தானது என்ற பவுலின் சொல்லை அலட்சியம் செய்தது யார்?

யூலியு
கப்பல் தலைவர்
கப்பலோட்டுநர்
யோவான்
படைவீரர்கள்

12. உடைந்த கப்பலிலிருந்து எப்படி பயணித்தோர் கரைசேர்ந்தனர்?

நீந்தக் கூடியவர்கள் கடலில் குதித்து முதலில் கரைசேர்ந்தனர்
பலகைகளை பற்றிக்கொண்டு கரைசேர்ந்தனர்
கப்பலின் உடைந்த துண்டுகளை பற்றிக்கொண்டு கரைசேர்ந்தனர்.
படகில் கரைசேர்ந்தனர்
கப்பலில் கரைசேர்ந்தனர்

13. உடைந்த கப்பலிலிருந்து பயணித்தோர் கரைசேர்ந்த தீவின் பெயர் என்ன?

கிரேத்துத் தீவு
கவுதா தீவு
இரேகியு
இத்தாலியா
மால்தா தீவு

14. மால்தா தீவின் தலைவர் யார்?

யூலியு
பவுல்
புப்பிலியு
இரேகியு
அகிரிப்பா

15. பவுல் உரோமையில் எடுத்துரைத்த எசாயா இறைவாக்கு எங்குள்ளது?

திருத்தூதர் பணிகள் 28:24-25
திருத்தூதர் பணிகள் 28: 26-27
எசாயா 6:9-10
எசாயா 6:12-14
மத்தேயு 13:14-15