மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 22
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் 24, 25, 26
முடிவுத் திகதி : 2015-10-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. பவுலுக்கு எதிராக ஆளுநரிடம் முறையிட்டவர் யாவர்?

பெலிக்சு
தலைமைக்குருவான அனனியா
மூப்பர்கள்
வழக்குரைஞர் தெர்த்துல்
ஏரோது

2. பவுலுக்கு எதிராக தெர்த்துல்லின் முறைப்பாடு என்ன?

தொல்லை கொடுக்கும் இந்த மனிதனை நாங்கள் கண்டுபிடித்தோம்.
இவன் உலகம் முழுவதிலுமுள்ள யூதர் அனைவரிடையேயும் கலகமூட்டி வருகிறான்
நசரேயக் கட்சியினரின் தலைவனாகவும் செயல்படுகிறான்
திருக்கோவிலை இவன் தீட்டுப்படுத்த முயன்றான்
இவனே இறைமகன்

3. "ஆயிரத்தவர் தலைவரான லீசியா வரும்போது உங்களை விசாரிப்பேன்". இது யார் கூற்று?

பவுல்
பெலிக்சு
தெர்த்துல்
அனனியா
மூப்பர்

4. பெலிக்சின் முன்னிலையில் குற்றசாட்டுகளுக்கு பவுல் கூறிய விளக்கம் என்ன?

நான் கோவிலில் எவரோடாவது விவாதித்ததையோ, நகரிலோ தொழுகைக்கூடத்திலோ மக்களிடையே கலகமூட்டியதையோ, இவர்கள் யாருமே கண்டதில்லை
இப்போது இவர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளையும் உம்முன் இவர்களால் மெய்ப்பிக்க முடியாது.
இவர்கள் ஒரு கட்சி எனக் கூறிவரும் கிறிஸ்தவ நெறியின்படியே, நான் என் மூதாதையரின் கடவுளை வழிபட்டு வருகிறேன்.
கடவுள் முன்னிலையிலும் மக்கள் முன்னிலையிலும் எப்போதும் குற்றமற்ற மனச்சான்றோடு வாழ முயலுகிறேன்.
இறந்தோர் உயிர்த்தெழுவர் என்று சொன்னதால்தான் இன்று நான் உங்கள் முன்பு விசாரிக்கப்படுகிறேன். இது ஒன்றைத் தவிர வேறு என்ன குற்றம் கண்டார்கள்; சொல்லட்டும்

5. பவுலின் விளக்கவுரைக்குப் பிறகு ஆளுநர் பெலிக்சு கூறியவை என்ன?

பவுலைக் காவலில் வையுங்கள்
சிறையில் அடையுங்கள்
ஆயிரத்தவர் தலைவரான லீசியா வரும்போது உங்களை விசாரிப்பேன்
பணிவிடை செய்ய அவரது உறவினரைத் தடுக்கவும் வேண்டாம்
ஆனால் கடுங்காவல் வேண்டாம்

6. பெலிக்சுக்குப் பிறகு ஆளுநராக பொறுப்பேற்றவர் யார்?

லீசியா
ஏரோது
பொர்க்கியு பெஸ்து
துருசில்லா
அனனியா

7. கோடிட்ட இடத்தை நிரப்புக:
"--------------------- என்னை விசாரிக்க வேண்டும்"

கடவுளே
ஆளுநரே
இயேசுவே
சீசரே
பவுலே

8. "நீர் உம்மை சீசர் விசாரிக்கவேண்டும் என்று கூறினீர். எனவே நீர் சீசரிடமே செல்லும்". இது யார் கூற்று?

பவுல்
பொர்க்கியு பெஸ்து
பெலிக்சு
யூதர்கள்
பேதுரு

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:
"நான் ----------------------------, ------------------------------------, ------------------------------------ எதிராகத் தவறு எதுவும் செய்யவில்லை"

யூதருடைய திருச்சட்டத்துக்கோ
இயேசுவுக்கோ
கோவிலுக்கோ
மரியாவுக்கோ
சீசருக்கோ

10. ஆளுநர் பெஸ்துவை சந்திக்க செசரியா வந்தவர்கள் யாவர்?

பெலிக்சு
அகிரிப்பா அரசன்
துருசில்லா
பெர்னிக்கியு
பவுல்

11. "ஒரு கைதியின் மேல் சாட்டப்பட்டுள்ள குற்றங்களைக் குறிப்பிடாமல் அவனை அனுப்புவது அறிவீனம்". இது யார் கூற்று?

அகிரிப்பா
பெர்னிக்கியு
பொர்க்கியு பெஸ்து
பெலிக்சு
பவுல்

12. பவுல் யார் யாரிடம் தனது நிலையை விளக்கினார்?

ஆளுநர் பெலிக்சு
ஆளுநர் பொர்க்கியு பெஸ்து
அகிரிப்பா அரசன்
இயேசு
துருசில்லா

13. பவுலே! உனக்குப் பித்துப் பிடித்துவிட்டது; அதிகப்படிப்பு உன்னை பைத்தியக்காரனாக மாற்றிவிட்டது" - இது யார் கூற்று?

பெலிக்சு
அகிரிப்பா
பெர்னிக்கியு
மூப்பர்கள்
பெஸ்து

14. பவுலின் விளக்கவுரைக்குப் பிறகு அரசரும், ஆளுநரும், பெர்னிக்கியும் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டதென்ன?

இவரை காவலில் வையுங்கள்
இவர் மரண தண்டனைக்கோ சிறைத் தண்டனைக்கோ உரிய குற்றம் எதையும் செய்யவில்லையே
இவர் சீசரே தம்மை விசாரிக்கவேண்டும் என்று கேட்டிராவிட்டால் இவரை விடுவித்திருக்கலாம்
இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்கு வேண்டாம்
அனைவரும் என்னைப் போலாக வேண்டும்

15. பவுல் தன்னைப்பற்றி அகிரிப்பா அரசனிடம் கூறிய தன்விளக்கம் என்ன?

நான் நமது சமயத்தில் மிகவும் கண்டிப்பான பரிசேயக் கட்சி முறைப்படி வாழ்ந்து வந்தேன்
நானுங்கூட நாசரேத்து இயேசுவுக்கு எதிராகப் பல செயல்களைச் செய்யவேண்டுமென நினைத்துக் கொண்டிருந்தேன்.
இறைமக்கள் பலரைச் சிறையிலடைக்கத் தலைமைக் குருக்களிடம் அதிகாரம் பெற்றேன்.
கடவுளைப் பழித்துரைக்க அவர்களைப் பலமுறை நான் கட்டாயப்படுத்தினேன்.
நான் வெளியே உள்ள நகரங்களுக்கும் சென்று, அங்குள்ளோர்மீது வெகுண்டெழுந்து அவர்களைத் துன்புறுத்தினேன்.