1. "நற்செய்தி அறிவிப்பவரான பிலிப்பின் வீட்டுக்குச் சென்று அவருடன் தங்கினோம்" - பவுல் இங்கு குறிப்பிடும் பிலிப்பு என்பவர் யார்?
2. பவுலை எருசலேமிற்கு போகவேண்டாம் என எச்சரித்தவர்கள் யாவர்?
3. பவுல் தன்னைப்பற்றி உரையில் கூறியது என்ன?
4. எருசலேமில் யூதர்களிடமிருந்து தப்பிக்க பவுலுக்கு வழங்கப்பட்ட அறிவுரை என்ன?
5. பவுலுக்கு எதிராக யூதர்கள் எழுப்பிய குற்றச்சாட்டு என்ன?
6. பவுல் எருசலேமில் எந்த மொழியில் உரையாற்றினார்?
7. அனனியா - சிறுகுறிப்பு வரைக
8. ஸ்தேவான் கொலைக்கு உடன்பட்டவர் யார்?
9. பவுல் உரையாற்றிய பின் யூத மக்களின் எதிர்வினை என்ன?
10. பரிசேயர்கள் என்போர் யார் ?
11. "நாங்கள் பவுலை கொல்லும்வரை உண்ணவோ குடிக்கவோ மாட்டோம்" – இச்சூளுரை எத்தனை முறை இடம்பெற்றுள்ளது?
12. கோடிட்ட இடத்தை நிரப்புக "நான் ஒரு --------------------------------."
13. பவுலை தண்டிக்க ஆயிரத்தவர் தலைவர் ஏன் தயங்கினார்?
14. ஆயிரத்தவர் தலைவரின் பெயர் என்ன?
15. உயிர்த்த ஆண்டவரை பார்த்தவுடன் பவுலுக்கு நேர்ந்தது என்ன?