மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 20
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் 18,19,20
முடிவுத் திகதி : 2015-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. "யூதர் அனைவரும் உரோமை நகரத்தை விட்டு வெளியேற வேண்டும்" இது யார் கூற்று?

பிரிஸ்கில்லா
அக்கிலா
பவுல்
பேதுரு
கிலவுதியு பேரரசர்

2. திருத்தூதர் பவுலின் தொழில் என்ன?

மீன் பிடிப்பது
கூடாரம் செய்வது
உழவுத்தொழில்
கட்டிடம் கட்டுவது
தச்சுத்தொழில்

3. அக்கிலா- சிறுகுறிப்பு வரைக:

இவர் கொரிந்து நகர் போந்துப் பகுதியில் வாழ்ந்தவர்
இவரின் மனைவி பிரிஸ்கில்லா
மன்னனின் கட்டளையால் இத்தாலிய நாட்டைவிட்டு இவர் அண்மையில் வெளியேறியவர்
இவரின் தொழில் கூடாரம் செய்வது.
திருத்தூதர் பவுல் இவரின் வீட்டில் தங்கியிருந்தார்

4. பின்வருவனவற்றில் பவுலின் கூற்றை பிரித்தெடுங்கள்:

இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை
இயேசுவே மெசியா
உங்கள் அழிவுக்கு நீங்களே பொறுப்பு, நான் அல்ல
கடவுள் விரும்பினால் நான் மீண்டும் உங்களிடம் திரும்பி வருவேன்.
நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்

5. "அஞ்சாதே; நான் உன்னோடு இருக்கிறேன்" இது யார் கூற்று?

கல்லியோ
பவுல்
ஆண்டவர்
சிலா
திமொத்தேயு

6. அப்பொல்லோ - சிறு குறிப்பு வரைக:

இவர் அலக்சாந்திரியாவில் பிறந்தவர்
சொல்வன்மை மிக்கவர்
மறைநூல்களில் புலமை வாய்ந்தவர்
இயேசுவைப் பற்றிய செய்தியை பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார்
யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார்

7. பவுலுக்கு எதிரான வழக்கில் அக்காயா நாட்டு ஆட்சியாளர் கல்லியோவின் கூற்று என்ன?

அஞ்சாதே; பேசிக்கொண்டேயிரு; நிறுத்தாதே
குற்றமோ, பழிபாவமோ இருக்குமாயின் நான் பொறுமையுடன் உங்கள் வழக்கைக் கேட்டிருப்பேன்
இது சொற்களையும், பெயர்களையும் உங்கள் திருச்சட்டத்தையும் பற்றிய சிக்கலாய் இருப்பதால் நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்
உனக்குத் தீங்கிழைக்கப்போவதில்லை
இதில் நடுவராயிருக்க நான் விரும்பவில்லை


8. யார் இந்த ஸ்கேவா?

யூத தலைமைக்குரு
இவருக்கு ஏழு மைந்தர்கள்
இயேசுவின் பெயரைப் பயன்படுத்தி மாய வித்தை செய்தவன்.
பொல்லாத ஆவியை துரத்த முயன்றபோது அதே ஆவியால் தாக்கப்பட்டார்
அவரும் அவர் மைந்தர்களும் ஆடையின்றி தப்பியோடினர்

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:
--------------------- எனக்குத் தெரியும்; -------------------------------- எனக்குத்தெரியும்; ஆனால் நீங்கள் யார்?

பேதுருவை
இயேசுவை
அப்பொல்லோவை
பவுலையும்
அக்கிலாவையும்

10. எபேசு நகர் தெமேத்திரியு கைவினைஞர்களிடையே ஆற்றிய உரை என்ன?

தோழர்களே, இந்தத் தொழில் நமக்கு நல்ல வருவாயைத் தருகிறது.
'மனித கையால் செய்யப்பட்டவை தெய்வங்களல்ல' என்று தவறாகக் கூறித் திரளான மக்களை இந்தப் பவுல் நம்பச் செய்து வருகிறார்.
இது நமக்கு ஆபத்து விளைவிக்கும்.
நம் தொழிலும் மதிப்பற்றுப்போகும்
பெருந்தேவதையான அர்த்தமியின் கோவில் கூடத் தன் பெயரை இழந்துவிடும்.

11. பவுலின் வழித்துணைவர்களான மாசிதோனியர்கள் யாவர்?

அக்கிலா
காயு
அரிஸ்தர்க்கு
அப்பொல்லோ
பிரிஸ்கில்லா

12. எபேசு மூப்பர்களுக்கு பவுல் ஆற்றிய உரை என்ன?

யூதர்களுடைய சூழ்ச்சியினால் எனக்கு ஏற்பட்ட சோதனைகளின்போது மிகுந்த மனத்தாழ்மையோடும் கண்ணீரோடும் ஆண்டவருக்குப் பணிபுரிந்தேன்.
என்னைப் பொறுத்தவரையில் எனது உயிரை ஒரு பொருட்டாக நான் மதிக்கவில்லை.
ஆண்டவர் இயேசு எனக்குக் கொடுத்த பணியை நிறைவேற்றி என் வாழ்க்கை ஓட்டத்தை முடிப்பதே என் விருப்பம்.
உங்களையும், மந்தை முழுவதையும் கவனமுடன் காத்துக் கொள்ளுங்கள்.
பெற்றுக்கொள்வதைவிட கொடுத்தலே பேறுடைமை என்று ஆண்டவர் இயேசு கூறியதை நினைவு கூறுங்கள்

13. கோடிட்ட இடத்தை நிரப்புக:
"இனிமேல் நீங்கள் ------------------------------ பார்க்கப் போவதில்லை"

இயேசுவை
என்னை
பவுலை
என் முகத்தை
இறையாட்சியை

14. மூன்றாவது தூதரைப் பயணமாக பவுல் எங்கே சென்றார்?

கலாத்தியா
பிரிகியா
எபேசு
மாசிதோனியா
கிரேக்க நாடு

15. ஆசியாவைச் சேர்ந்த பவுலின் வழித்துணைவர்கள் யாவர்?

திக்கிக்கு
திமொத்தேயு
காயு
சோப்பத்தர்
துரோப்பிம்