1. ஆபிரகாமின் மகன் யார்?
2. இயேசுவின் தலைமுறை அட்டவணையில் இடம் பெறும் பெண்களின் பெயர்கள் எவை
3. யாருடைய காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்?
4. ஆபிரகாம் முதல் இயேசு வரை எத்தனை தலைமுறை?
5. மரியாவின் கணவர் யோசேப்புக்கு வானதூதர் கனவில் கூறியவை.
6. இம்மானுவேல் என்பதன் பொருள் என்ன
7. எந்த அரசன் காலத்தில் இயேசு பிறந்தார்?
8. இயேசு எங்கே பிறந்தார்
9. கீறிட்ட இடத்தில் வரவேண்டிய சொல் என்ன? யூதா நாட்டுப் ................, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்
10. கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் குழந்தை இயேசுவிற்கு காணிக்கையாக கொடுத்தவை எவை?
11. "ராமாவிலே ஒரு குரல் கேட்கிறது; ஒரே புலம்பலும் பேரழுகையுமாய் இருக்கிறது" என்பது யாருடைய இறைவாக்கு?
12. எகிப்திலிருந்து திரும்பிய யேசேப்பு யூதேயாபகுதிக்கு செல்லாமல் கலிலேயப்பகுதிக்கு சென்றது ஏன்?
13. கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, "யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே" என்று கேட்ட போது என்ன நடந்தது?
14. மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்ததும் யோசேப்பு என்ன செய்ய திட்டமிட்டார்?
15. கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் வினவியது என்ன?