1. மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது என்று கூறுவோர் யார்?
2. 'மனமாறிய பிற இனத்தினர் விருத்தசேதனம் செய்தால்தான் மீட்பு பெற முடியும்' என்றவர்களுக்கு பேதுரு அளித்த பதில் என்ன?
3. எருசலேம் சங்கத்தின் தீர்மானத்தை எல்லா இடங்களுக்கும் எடுத்துரைக்க தேர்ந்தெடுக்கப்பட்டோர் யார்?
4. எருசலேம் சங்கத்தின் தீர்மானத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்கள் எங்கே எடுத்துச்சென்றனர்?
5. இரண்டாம் தூதரைப் பயணத்தில் பவுல் யாரை துணைக்கு அழைத்துக்கொண்டார் ?
6. இரண்டாம் தூதரைப் பயணத்தில் பர்னபா யாரை துணைக்கு அழைத்துக்கொண்டார்?
7. தீமோத்தேயு - சிறு குறிப்பு வரைக
8. யார் இந்த லீதியா?
9. பிலிப்பி நகரில் பவுலுக்கும் சீலாவுக்கும் நடந்ததென்ன?
10. கோடிட்ட இடத்தை நிரப்புக: --------------------------------------------------------- நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்.
11. "தலைமை நடுவர்கள் உங்களை விடுதலை செய்யுமாறு சொல்லியனுப்பியுள்ளார்கள். எனவே இப்போது நீங்கள் அமைதியுடன் புறப்பட்டுப் போங்கள்" - இதற்கு பவுலின் பதில் என்ன?
12. ஏதென்சு நகரில் பவுலின் உரைக்குப்பின் மனமாறியோர் யார்?
13. பவுல் மற்றும் சீலாவின் பொருட்டு, தெசலோனிக்க யூதர்களால் யாசோன் எவ்வாறு தாக்கப்பட்டான்?
14. அரயோபாகு மன்றத்தில் பவுல் ஆற்றிய உரை என்ன?
15. ஏதென்சு நகரில் பவுல் யாரோடு ஒவ்வொரு நாளும் விவாதித்து உரையாடினார்?