மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 18
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் 12, 13, 14
முடிவுத் திகதி : 2015-06-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஏரோது திருச்சபைக்கு எதிராக செய்தவை என்ன?

யோவானின் சகோதரரான யாக்கோபை வாளால் கொன்றான்.
பேதுருவை சிறையில் அடைத்தான்
பேதுருவை வாளால் கொன்றான்.
திருச்சபையைச் சார்ந்த மக்களை கொடுமைப்படுத்தினான்.
எல்லா யூதர்களையும் சிறையிலடைத்தான்.

2. சிறையில் ஆண்டவரின் தூதர் பேதுருவிடம் உரைத்தவை யாவை?

அது உண்மையே
இடைக் கச்சையைக் கட்டி மிதியடிகளைப் போட்டுக்கொள்ளும்
உமது மேலுடையை அணிந்துகொண்டு என்னைப் பின்தொடரும்
உனக்குப் பித்துப்பிடித்து விட்டதா?
உடனே எழுந்திடும்

3. மாற்கு - யார் இவர்?

தூய பவுலின் தூதுரைப் பயணத்தில் உதவியவர்
இவர் நற்செய்தி நூலாசிரியர்
இவருக்கு யோவான் என்ற பெயரும் உண்டு; இவரின் தாய் பெயர் மரியா.
தொடக்க கால கிறிஸ்தவர்கள் இவரது வீட்டில் ஒருங்கிணைந்து இறைவேண்டல் செய்தனர்.
பேதுரு இவரின் வீட்டிற்கு வருவது வழக்கம்.

4. கோடிட்ட இடத்தை நிரப்புக
------------------------- --------------------------- ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள்

யோவானையும் சவுலையும்
பர்னபாவையும் மாற்கையும்
பர்னபாவையும் சவுலையும்
பேதுருவையும் பவுலையும்
பவுலையும் சவுலையும்

5. பவுல் முதல் தூதரைப் பயணமாக எங்கே சென்றார்?

சைப்பிரசு
பம்பிலியா
அந்தியோக்கியா
கொரிந்து
இக்கோனியா

6. எலிமா -விளக்குக?

இவன் ஓர் மந்திரவாதி
சவுலையும் பர்னபாவையும் எதிர்த்து நின்றவன்.
சவுலால் சபிக்கப்பட்டு கண் பார்வை இழந்தவன்
சவுலால் சபிக்கப்பட்டு இறந்தவன்
எலிமா என்றாலே மந்திரவாதி என்பதுதான் பொருள்

7. இதில் பவுலின் கூற்றைப் பிரித்தெடுங்கள்

நாங்களும் உங்களைப்போன்ற மனிதர்கள்தாம்
கடவுளின் வார்த்தையை உங்களுக்குத்தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது.
இறந்த அவர் இனி ஒருபோதும் அழிவுக்குட்படாதபடி கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார்.
இயேசு வழியாகவே உங்களுக்கு பாவமன்னிப்பு உண்டு
உங்களுள் யாராவது மக்களுக்கு அறிவுரை கூறுவதாயிருந்தால் கூறலாம்


8. "நீரே என் மகன், இன்று நான் உம்மை ஈன்றெடுத்தேன்" இவ்வசனம் எங்குள்ளது?

எசாயா 55:3
திருத்தூதர் பணிகள் 13:33
திருப்பாடல் 16:10
திருப்பாடல் 2:7
மாற்கு 15:13

9. முதல் தூதரைப் பயணத்தில் பவுலும் பர்னபாவும் அனுபவித்த துன்பங்கள் என்ன?

அந்தியோக்கியாவிலிருந்தும், இக்கோனியாவிலிருந்தும் யூதர்கள் வந்து மக்களைத் தூண்டிவிட்டு, பவுல் மேல் கல் எறிந்தார்கள்
யூதர்கள் கடவுளை வழிபட்டு வந்த மதிப்புக்குரிய பெண்களையும் நகரின் முதன்மைக் குடிமக்களையும் தூண்டிவிட்டு, பவுலையும் பர்னபாவையும் இன்னலுக்குள்ளாக்கி, தங்களது நாட்டிலிருந்து துரத்திவிட்டார்கள்
மக்கள் திரளைக் கண்ட யூதர்கள் பொறாமையால் நிறைந்து, பவுல் கூறியதை எதிர்த்துப்பேசி அவரைப் பழித்துரைத்தார்கள்
நம்பாத யூதர் சகோதரருக்கு எதிராகப் பிற இனத்தவரைத் தூண்டிவிட்டு அவர்கள் உள்ளத்தைக் கெடுத்தனர்
பிற இனத்தாரும் யூதரும் தம் தலைவர்களுடன் சேர்ந்து திருத்தூதரை இழிவுபடுத்தி கல்லால் எறியத் திட்டமிட்டனர்

10. லிஸ்திராவில் பவுலும் பர்னபாவும் லிக்கவோனிய மொழியில் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

தாவீதின் மகன்
சேயுசு
எர்மசு
தெருபை
பெருகை

11. காளைகளுடனும், பூமாலைகளுடனும் பலியிட வந்தவர்களைப் பார்த்து பவுலும் பர்னபாவும் வெகுண்டு கூறிய வார்த்தைகள் என்ன?

மனிதர்களே, ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போன்ற மனிதர்கள்தாம்
விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள்
ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார்
வானிலிருந்து உங்களுக்கு மழையைக் கொடுக்கிறார்
நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்கிறார்

12. "நாம் பல வேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்படவேண்டும்" இது யார் கூற்று?

பேதுரு
யோவான்
பவுல்
பர்னபா
மாற்கு

13. எங்கு பவுலும் பர்னபாவும் அருள் வழங்கும் கடவுளின் பணிக்கென்று அர்ப்பணிக்கப்பட்டார்கள்?

பம்பிலியா
அத்தாலியா
பிசிதியா
இக்கோனியா
அந்தியோக்கியா

14. லிஸ்திராவில் பவுல் செய்த புதுமை என்ன?

காது கேளாதவரை கேட்கவைத்தார்
கால் ஊனமுற்றவனை நடக்கச் செய்தார்
வாய் பேசமுடியாதவரை பேச வைத்தார்
பேய்களை ஓட்டினார்
இறந்தவரை உயிர்த்தெழச் செய்தார்

15. பேதுரு சிறையிலிருந்து வானதூதர் உதவியுடன் தப்பியவுடன் ஏரோது என்ன செய்தான்?

மீண்டும் தேடி அவரை கண்டுபிடித்தான்
காவலரை சங்கிலியால் கட்டினான்
எல்லாரையும் சிறையிலடைத்தான்
அவரைத் தேடிப் பார்க்கச் செய்தான்
காவலரை விசாரித்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான்.