மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 17
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் 10,11
முடிவுத் திகதி : 2015-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கொர்னேலியு - சிறுகுறிப்பு வரைக

செசரியா நகரைச் சேர்ந்தவர்
நூற்றுவர் தலைவர்
நேர்மையாளர்
இறைப்பற்றுள்ளவர்
யூதமக்கள் அனைவரிடமும் நற்சான்று பெற்றவர்

2. கோடிட்ட இடத்தை நிரப்புக:
“எழுந்திடும்; நானும் ஒரு ------------------.”

கடவுள்தான்
வானதூதர்
சீடர்
அப்போஸ்தலர்
மனிதன்தான்

3. கொர்னேலியுவின் ஆட்கள் வருவதற்குமுன் பேதுரு எங்கே தங்கிருந்தார்?

செசரியாவில் தங்கிருந்தார்
யோப்பாவில் தங்கியிருந்தார்
கொர்னேலியுவின் வீட்டில் தங்கியிருந்தார்
தோல் பதனிடும் சீமோன் வீட்டில் தங்கிருந்தார்.
அவர் தங்கியிருந்த வீடு கடலோரத்தில் இருந்தது.

4. பேதுருவை அழைத்து வர ஆண்டவர் யாரைத் தேர்ந்துகொண்டார்?

வானதூதர்
கொர்னேலியு
சீமோன்
பிலிப்பு
யோவான்

5. "ஒரு யூதன் பிற குலத்தவரிடம் செல்வதும், அவர்களோடு உறவாடுவதும் முறைகேடு. ஆனால் யாரையும் தீட்டுள்ளவர் என்றோ, தூய்மையற்றவர் என்றோ சொல்லக்கூடாது." இது யார் கூற்று?

பேதுரு
கொர்னேலியு
இயேசு
பவுல்
சீமோன்

6. பேதுரு கனவைப் பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கும்போது, தூய ஆவியார் கூறியது என்ன?

எழுந்து செல்
இதோ மூவர் உன்னைத் தேடி வந்திருக்கின்றனர்
நீ கீழே இறங்கித் தயக்கம் ஏதுமின்றி அவர்களோடு புறப்பட்டுச் செல்
ஏனெனில் நான்தான் அவர்களை அனுப்பியுள்ளேன்
நீங்கள் தேடுபவர் நான்தான்

7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுங்கள்

கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை
கொர்னேலியு பேதுருவின் காலில் விழுந்து வணங்கினார்.
கொர்னேலியு பிற்பகல் பனிரெண்டு மணிக்கு கடவுளின் தூதரைக் கண்டார்.
கொர்னேலியு இடைவிடாது கடவுளிடம் மன்றாடி வந்தவர்
இயேசு கிறிஸ்துவே அனைவருக்கும் ஆண்டவர்


8. கொர்னேலியுவின் இல்லத்தில் பேதுரு உரைத்தது என்ன?

வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதான்
இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்கு சாட்சிகள்
தூய்மையானது எனக் கடவுள் கருதுவதை தீட்டாகக் கருதாதே
எழுந்திடு! இவற்றைக் கொன்று சாப்பிடு
அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர்

9. "நீர் ஏன் விருத்தசேதனம் செய்துகொள்ளாதோரிடம் சென்று அவர்களுடன் உணவு உண்டீர்?" இதை யார் யாரிடம் கேட்டார்?

எருசலேம் மக்கள் பேதுருவிடம்
விருத்தசேதனம் செய்து கொண்டவர் பேதுருவிடம்
பேதுரு கொர்னேலியுவிடம்
திருத்தூதர்கள் பேதுருவிடம்
சீமோன் திருத்தூதர்களிடம்

10. எங்கே முதன்முறையாக சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்றழைக்கப்பட்டனர்?

யூதேயா
எருசலேம்
சமாரியா
அந்தியோக்கியா
சைப்பிரசு

11. கோடிட்ட இடத்தை நிரப்புக:
"யோவான் --------------------- திருமுழுக்குக் கொடுத்தார்; ஆனால் நீங்கள் ------------------------- திருமுழுக்குப் பெறுவீர்கள்"

தூய ஆவியால், தண்ணீரால்
தண்ணீரால், இயேசுவால்
நெருப்பினால், ஆவியால்
இறைமகனால், திருத்தூதர்களால்
தண்ணீரால், தூய ஆவியால்

12. பஞ்சம் ஏற்பட்ட யூதேயாவுக்கு பொருளுதவியை அளிக்க சீடர்கள் யாரை அனுப்பினார்கள்?

கிளாதியு
சவுல்
பேதுரு
பர்னபா
அகபு

13. " ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டபோது நமக்கு அருளப்பட்ட அதே கொடையைக் கடவுள் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் கடவுளைத் தடுக்க நான் யார்?" இது யார் கூற்று?

சவுல்
கொர்னேலியு
பேதுரு
பர்னபா
ஸ்தேவான்

14. ஸ்தேவானை முன்னிட்டு உண்டான துன்புறுத்தலால் மக்கள் எங்கெல்லாம் ஓடிப்போனார்கள்?

யூதேயாவுக்கு
சைப்பிரசுக்கு
பெனிசியாவுக்கு
எருசலேமுக்கு
அந்தியோக்கியாவுக்கு

15. பர்னபா - சிறுகுறிப்பு வரைக

அவர் நல்லவர்
பெருந்திரளான மக்களை ஆண்டவரிடம் சேர்த்தவர்
தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவர்
ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்தியவர்.
கடவுளின் அருள்செயலைக் கண்டு மகிழ்ச்சியடைந்தவர்