மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 16
வேதாகமப் பகுதி : திருத்தூதர்பணிகள் 7, 8, 9
முடிவுத் திகதி : 2015-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. குலமுதல்வர்கள் யாரை யாருக்கு விற்றனர்?

பேதுருவை
ஸ்தேவானை
யோசேப்பை
எபிரேயருக்கு
எகிப்தியருக்கு

2. ஸ்தேவான் அருளுரையில் மிகுதியாக இடம்பெறுபவை என்ன?

இயேசுவின் போதனை
இஸ்ராயேலர் வாழ்க்கை வரலாறு
திருத்தூதர்களின் படிப்பினைகள்
திருச்சபை வரலாறு
இயேசுவின் வாழ்க்கை வரலாறு

3. ஸ்தேவானின் அருளுரையில் கோபம் கொண்டோர் ஸ்தேவானை எப்படிக் கொன்றனர்?

சிலுவையில் அறைந்தனர்
தூக்கிலிட்டனர்
கல்லால் எறிந்து கொன்றனர்
வாளால் குத்திக் கொன்றனர்
விஷம் குடிக்கச் செய்தனர்

4. சவுல் திருச்சபைக்கு எதிராக என்ன செய்தார்?

ஸ்தேவானைக் கொலை செய்வதற்கு உடன்பட்டிருந்தார்.
வீடுவீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய் அவர்களை சிறையிலடைக்கச் செய்தார்.
இயேசுவைப் பற்றி போதித்தார்.
கோவில் கட்டினார்
திருவிழாக்கள் கொண்டாடினார்.

5. பிலிப்பின் நற்செய்தி அறிவிப்பால் சமாரியாவில் நிகழ்ந்தது என்ன?

அவர் செய்த அரும் அடையாளங்களைக் மக்கள் கண்டனர்
தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்தக் குரலுடன் கூச்சலிட்டுக் கொண்டே வெளியேறின
முடக்குவாதமுற்றோர் குணம் பெற்றனர்
கால் ஊனமுற்றோர் குணம் பெற்றனர்
அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று

6. பிலிப்பிடம் திருமுழுக்குப் பெற்றோர் யாவர்?

பேதுரு
சீமோன்
எத்தியோப்பிய நிதியமைச்சர்
சமாரிய மக்கள்
கந்தகி

7. பணம் கொடுத்து தூய ஆவியை அருளும் அதிகாரத்தை பெற முனைந்தவன் யார்?

சீமோன்
கமாலியேல்
அனானியா
பிலிப்பு
சவுல்

8. எத்தியோப்பிய நிதியமைச்சர் வாசித்த விவிலிய பகுதி எது?

திருத்தூதர் பணிகள் 8:31-33
எசாயா 53:7-8
எரேமியா 20:2-3
எசாயா 55:9-10
எசாயா 42: 5-6

9. எந்த நகருக்கு செல்லும்போது சவுல் ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்டார்?

எருசலேம்
கலிலேயா
சமாரியா
யூதேயா
தமஸ்கு

10. ஆண்டவரால் ஆட்கொள்ளப்பட்ட சவுலுக்கு நிகழ்ந்தது என்ன?

தம் கண்கள் திறந்திருந்தும் அவரால் எதையும் பார்க்கமுடியவில்லை
அவருடைய கைகளைப் பிடித்து அவரைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றார்கள்
அவர் மூன்று நாள் பார்வையற்றிருந்தார்.
அவர் மூன்று நாள் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை
சவுல் கிறிஸ்தவர்களைக் கொன்றார்

11. சவுல் மீண்டும் பார்வை பெற ஆண்டவர் அனுப்பிய சீடர் யார்?

பவுல்
அனனியா
ஐனேயா
தபித்தா
தொற்கா

12. மனமாறிய சவுல் கொல்லத் தேடிய யூதர்களிடமிருந்து எப்படி தப்பித்தார்?

தமஸ்குக்கு ஓடிப்போனார்
நற்செய்தியை அறிவிக்க வெளியே வரவில்லை
அவருடைய சீடர்கள் இரவில் அவரைக் கூடையில் வைத்து, நகர மதில் வழியாக இறக்கி விட்டார்கள்
தொழுகைக்கூடத்தில் தங்கியிருந்தார்
அரசனிடம் தஞ்சம் அடைந்தார்.

13. திருத்தூதர்களுக்கு பவுலை அறிமுகப்படுத்தியது யார்?

அனனியா
சவுலின் சீடர்கள்
யூதர்கள்
பர்னபா
பிலிப்பு

14. எட்டு ஆண்டுகள் முடக்குவாதத்தால் படுக்கையில் கிடந்த ஐனேயா யாரால் குணம் பெற்றார்?

பவுல்
சவுல்
பிலிப்பு
யோவான்
பேதுரு

15. பேதுரு யாரை உயிர்ப்பித்தார்?

சீமோன்
தொற்கா
ஐனேயா
தபித்தா
அனனியா