மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 15
வேதாகமப் பகுதி : திருத்தூதர்பணிகள் 5, 6
முடிவுத் திகதி : 2015-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. நிலத்தை விற்று ஒரு பகுதியை தனக்கென்று வைத்துக்கொண்டு மறு பகுதியை மட்டும் திருத்தூதர்களின் காலடியில் வைத்த அனனியாவிடம் பேதுரு கேட்டது என்ன?

நீ நிலத்தை விற்ற தொகையின் ஒரு பகுதியை உனக்கென்று வைத்துக்கொண்டு தூய ஆவியாரிடம் பொய் சொல்லும்படி சாத்தான் உன் உள்ளத்தை ஆட்கொண்டதேன்?
அது விற்கப்படுவதற்கு முன்பு உன்னுடையதாகத்தானே இருந்தது? அதை விற்றபின்பும் அந்தப்பணம் உன்னுடைய உரிமையாகத்தானே இருந்தது?
ஏன் நீ இச்செயலுக்கு உன் உள்ளத்தில் இடமளித்தாய்?
நிலத்தை இவ்வளவுக்குதானா விற்றீர்கள்?
நீ மனிதரிடமல்ல, கடவுளிடமல்லவா பொய் சொன்னாய்?

2. பொய் சொன்னதால் உயிர்விட்டவர் யாவர்?

பேதுரு
அனனியா
யோவான்
சப்பிரா
யூதாஸ்

3. ஏன் திருத்தூதர்கள் கைது செய்யப்பட்டார்கள்?

மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாகச் செய்யப்பட்டன.
மக்கள் இவர்களைப்பற்றி பெருமையாகப் பேசினர்.
ஆண்டவரிடம் நம்பிக்கைக் கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள்
எருசலேமை சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல் நலமற்றோரையும் தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்துகொண்டு திரளாகக் கூடிவந்தார்கள்
அனைவரும் நலம் பெற்றனர்.

4. "இந்த மனிதருடைய இரத்தப்பழியையும் எங்கள்மீது சுமத்தப் பார்க்கிறீர்களே" என்ற தலைமைக்குருவின் கேள்விக்கு திருத்தூதர்களின் மறுமொழி என்ன?

மனிதர்களுக்கு கீழ்படிவதைவிட கடவுளுக்கு அல்லவா கீழ்படியவேண்டும்?
நீங்கள் சிலுவையில் தொங்கவைத்து கொன்ற இயேசுவை நம் மூதாதையரின் கடவுள் உயிர்த்தெழச் செய்தார்.
நீங்கள் இந்த இயேசு பற்றிக் கற்பிக்கக்கூடாது என்று நாங்கள் கண்டிப்பாய் கட்டளையிடவில்லையா?
இஸ்ரயேல் மக்களுக்கு மனம் மாற்றத்தையும் பாவ மன்னிப்பையும் அளிப்பதற்காகக் கடவுள் அவரை தலைவராகவும் மீட்பராகவும் தமது வலப்பக்கத்துக்கு உயர்த்தினார்.
எருசலேம் முழுவதும் நீங்கள் கற்பித்து வருகிறீர்கள்.

5. திருத்தூதர்களைக் கொல்ல திட்டமிட்ட தலைமைச்சங்கத்தாரிடம் கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் சொன்னது என்ன?

நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள்
நீங்கள் போய்க் கோவிலில் நின்று வாழ்வு பற்றிய வார்த்தைகளையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள்
இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிடவேண்டாம்
இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடமிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்துவிடும்.
அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது.

6. திருத்தூதர்களை தலைமைச் சங்கத்தார் என்ன செய்தார்கள்?

அவர்களை கொன்றனர்
அவர்களை நையப்புடைத்தனர்
அவர்களை சிலுவையில் அறைந்தனர்.
இயேசுவைப்பற்றி பேசக்கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர்.
அவர்களை திட்டினர்.

7. பந்தியில் கிரேக்க மொழி பேசுவோருக்கும் எபிரேய மொழி பேசுவோருக்கும் நடந்த முறுமுறுப்பில் திருத்தூதர்களின் அறிவுரை என்ன?

நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டு பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல
உங்களிடமிருந்து நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவியின் அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரை கவனமாய் தெரிந்தெடுங்கள்
அவர்களை இந்த பணியில் நியமிப்போம்
நாங்களோ இறைவேண்டலிலும், இறைவார்த்தைப்பணியிலும் உறுதியில் நிலைத்திருப்போம்.
நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்


8. பணிவிடை செய்ய திருத்தூதர்கள் நியமித்த எழுவர் யாவர்?

அந்தியோக்கிய நகரத்து நிக்கோலா
ஸ்தேவான், பிலிப்பு
பிரக்கோர், நிக்கானோர்
தீமோன்
பர்மனா

9. ஸ்தேவானுக்கு எதிரான குற்றச்சாட்டு என்ன?

வாழ்வுபற்றிய வார்த்தைகளை எடுத்துக்கூறினார்
மோசேக்கும் கடவுளுக்கும் எதிராக பழிச்சொற்கள் சொல்கிறான்
மோசே நமக்குக் கொடுத்திருக்கிற முறைமைகளை மாற்றிவிடுவார் என்கிறான்
நசரேயராகிய இயேசு இந்த இடத்தை அழித்துவிடுவார் என்கிறான்
இத்தூய இடத்தையும் திருச்சட்டத்தையும் எதிர்த்து ஓயாமல் பேசிவருகிறான்.

10. கமாலியேல் சொல்லும் பொய் இறைவாக்கினர் யாவர்?

ஸ்தேவான்
யூதா
பேதுரு
தெயுதா
பிலிப்பு

11. கிரேக்க மொழி பேசுவோர் எபிரேய மொழியினருக்கு எதிராக வைத்த குற்றச்சாட்டு என்ன?

நற்செய்தியை அறிவிக்கவில்லை
தங்கள் கைம்பெண்கள் பந்தியில் முறையாக கவனிக்கப்படவில்லை
ஏழைகளுக்கு உதவவில்லை
தூய ஆவியின் அருளை பெறவில்லை
விவிலியம் படிக்கவில்லை

12. கோடிட்ட இடத்தை நிரப்புக:
அவை -------------------------------------- சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்கமுடியாது

சாத்தானைச்
உலகைச்
விண்ணகத்தைச்
மனிதனைச்
கடவுளைச்

13. கோடிட்ட இடத்தை நிரப்புக:
ஸ்தேவான் ----------------------------- ------------------------------------- எதிராகப் பழிசொற்கள் சொன்னதை நாங்கள் கேட்டிருக்கிறோம்

மண்ணுக்கும் விண்ணுக்கும்
உனக்கும் எனக்கும்
இயேசுவுக்கும் மரியாவுக்கும்
கடவுளுக்கும் மோசேக்கும்
எபிரேயருக்கும் கிரேக்கருக்கும்

14. ஸ்தேவானுக்கு எதிராக வாதாடியோர் யாவர்?

உரிமையடைந்தோர் குழுவினர்
சிரேன், அலெக்சாந்திரியா நகரத்தினர்
சிலிசியா, ஆசியா மாநிலத்தவர்
எபிரேய மக்கள்
கிரேக்க மக்கள்

15. காவலில் இருந்த திருத்தூதர்களை விடுவித்தவர் யார்?

பேதுரு
ஆண்டவரின் தூதர்
ஸ்தேவான்
பிலிப்பு
யோவான்