மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 14
வேதாகமப் பகுதி : திருத்தூதர் பணிகள் 3,4
முடிவுத் திகதி : 2015-02-28

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. பிச்சை கேட்பதற்காக கால் ஊனமுற்றிருந்தவர் நிற்குமிடம் எது?

கோவிலின் வெளிப்புறம்
சாலை
கோவிலின் அழகுவாயில்
கோவிலின் உள்புறம்
கடைகள்

2. "வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை; என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும்" இது யார் கூற்று?

கால் ஊனமுற்றவன்
பேதுரு
பவுல்
யாக்கோபு
யோவான்

3. பேதுருவின் அருளுரை எங்கே நிகழ்ந்தது?

சாலமோன் மண்டபத்தில்
கோவிலில்
வீதிகளில்
அழகுவாயிலில்
செபக்கூடத்தில்

4. "இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர்".இங்கே குறிப்பிடப்படும் நபர் யார்?

ஆபிரகாம்
யோவான்
பேதுரு
கால் ஊனமுற்றவன்
இயேசு

5. கீழ்க்கண்டவற்றில் பேதுருவின் கூற்று யாது?

இந்த நம்பிக்கையே இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது.
நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல ஏன் எங்களையே உற்றுப்பார்க்கிறீர்கள்?
நீங்கள் எந்த வல்லமையால் அல்லது எந்தப் பெயரால் இதனைச் செய்தீர்கள்?
உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்
வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்.

6. "உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச் செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவி சாயுங்கள். அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்". இங்கே குறிப்பிடப்படும் இறைவாக்கினர் யார்?

மோசே
இயேசு
சாமுவேல்
பேதுரு
ஆபிரகாம்

7. யோவான் மற்றும் பேதுருவின் நற்செய்தி அறிவிப்பால் மனமாறியோர் எத்தனை பேர்?

ஆறாயிரம் பேர்
பத்தாயிரம் பேர்
ஆயிரம் பேர்
இரண்டாயிரம் பெண்கள்
ஆண்கள் மட்டும் ஐயாயிரம் பேர்

8. தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட பேதுரு தலைமைச் சங்கத்தாரைப் பார்த்து கூறியவை என்ன?

நீங்கள் எந்த வல்லமையால் இதனைச் செய்தீர்கள்?
நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார்.
நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார்.
இந்த இயேசுவே கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல்
இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை.

9. தலைமைச் சங்கத்தார் பேதுருவையும் யோவானையும் என்ன செய்தனர்?

சிலுவையில் அறைந்து கொன்றனர்
சங்கத்தைவிட்டு வெளியேறும்படி ஆணையிட்டனர்
இயேசுவைப்பற்றி எதுவும் பேசவோ, கற்பிக்கவோ கூடாது என்று கட்டளையிட்டனர்.
அவர்களை அச்சுறுத்தி விடுதலை செய்தனர்.
சிறையில் அடைத்தனர்.

10. என்ன ஆனாலும் நாங்கள் ----------------------, ------------------------ எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது

இயேசுவையும், மரியாவையும்
நற்செய்தியையும். பார்த்ததையும்
கண்டதையும், கேட்டதையும்
புதுமைகளையும், குணமளிப்பையும்
பேதுருவையும், யோவானையும்

11. துணிவு பெற்ற மக்களின் மன்றாட்டு என்ன?

ஆண்டவரே, விண்ணுலகையும், மண்ணுலகையும் கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்தவர் நீரே.
பேதுருவும் யோவானும் கல்வியறிவற்றவர்கள்
உம் அடியார் முழுத் துணிவுடன் உமது வார்த்தைகளை எடுத்துக்கூற அருள்தாரும்.
உமது தூய ஆவியார் இயேசுவின் பெயரால் உமது கையை நீட்டி நோயுற்றோருக்கு நலமளியும்.
அடையாளங்களும் அருஞ்செயல்களும் நடைபெறச் செய்யும்

12. நம்பிக்கைக் கொண்டோரின் செயல்பாடுகள் என்ன?

அனைவரும் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர்.
தமது உடைமைகளை தம்முடையதாக கருதவில்லை;
மிகுந்த வல்லமையோடு சான்று பகர்ந்து வந்தனர்.
அனைவரும் நல்லெண்ணத்தை மிகுதியாக பெற்றிருந்தனர்.
எல்லாம் அவர்களுக்கு பொதுவாய் இருந்தது.

13. நிலபுலன்களை அல்லது வீடுகளை விற்று அந்தத் தொகையைக் கொண்டு வந்து --------------------------------------------------------------- வைப்பர்

இயேசுவின் காலடியில்
திருப்பலி பீடத்தில்
ஏழைகளின் வீடுகளில்
திருத்தூதருடைய காலடியில்
கோவிலில்

14. பர்னபா என்பதன் பொருள் என்ன?

யோசேப்பு
ஊக்குவிக்கும் பண்பு கொண்டவர்
கடவுள் நம்மோடு
ஆறுதல் அளிப்பவர்
சீடர்

15. அரும் அடையாளம் வாயிலாக நலம் பெற்ற மனிதர்கள் எவ்வயதுடையோர்?

முப்பது வயதுக்கு மேற்பட்டோர்
குழந்தைகள்
ஐம்பது வயதுடையோர்
நாற்பது வயதுக்கு மேற்பட்டோர்
முதியோர்