1. உயிர்த்தப்பின் இயேசு எத்தனை நாள்களாக திருத்தூதர்களுக்கு தோன்றி அவர்களுக்கு கற்பித்தார்?
2. உயிர்த்த ஆண்டவர் திருத்தூதர்களுக்கு கற்பித்தவை என்ன?
3. "கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்?" இது யார் கூற்று?
4. யூதாஸ் பெற்ற நேர்மையற்ற கூலியைக்கொண்டு என்ன வாங்கப்பட்டது?
5. யூதாசுக்கு பதிலாக திருத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
6. "பெந்தகோஸ்து" என்றால் என்ன?
7. தூய ஆவியானவர் எந்த வடிவில் திருத்தூதர்கள்மேல் வந்து அமர்ந்தார்?
8. திருத்தூதர்கள் தூய ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டவுடன் அங்கு நிகழ்ந்தது என்ன?
9. ஒரே இறைவாக்குகளை உள்ளடக்கியவை யாவை?
10. பேதுரு தனது அருளுரையில் மேற்கோளிட்ட இருவர் யாவர்?
11. "நீங்கள் _________________________ மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள்"
12. "உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசுகிறிஸ்துவின் பெயரால் ______________ பெறுங்கள்"
13. திருமுழுக்கு பெற்றோர் எதில் உறுதியாய் நிலைத்திருந்தார்கள்?
14. நம்பிக்கைக்கொண்டோரின் வாழ்க்கைமுறை எப்படியிருந்தது?
15. "சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்ற மக்களின் கேள்விக்கு பேதுருவின் பதில் என்ன?