மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 12
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி 26, 27, 28
முடிவுத் திகதி : 2014-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இயேசுவை சூழ்ச்சியாக பிடித்து கொலை செய்ய ஆலோசித்தவர்கள் யாவர்?

பிலாத்து
கயபா
தலைமைகுருக்கள்
ஏரோது
மக்களின் மூப்பர்கள்

2. "இந்த தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்?" என்ற சீடர்களின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?

ஏன் இந்த பெண்ணுக்கு தொல்லை கொடுக்கிறீர்கள்?
அவர் எனக்கு செய்தது முறையான செயலே
ஏனெனில் ஏழைகள் எப்பொதுமே உங்களோடு இருக்கிறார்கள். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை
இவர் இந்த நறுமணத் தைலத்தை எனது உடல்மீது எனது அடக்கத்திற்கு ஆயத்தம் செய்தார்
உலகம் முழுவதும் எங்கெல்லாம் இந்நற்செய்தி அறிவிக்கப்படுமோ அங்கெல்லாம் இப்பெண் செய்ததும் எடுத்துக்கூறப்படும்; இவரும் நினைவுகூரப்படுவார்.

3. இயேசுவை காட்டிக்கொடுப்பதற்காக யூதாசு பெற்ற கூலி என்ன?

ஆயிரம் பொன்
முப்பது வெள்ளிக்காசுகள்
இருபது வெள்ளிக்காசுகள்
பத்து வெள்ளிகாசுகள்
ஐந்து தாலந்து

4. கோடிட்ட இடத்தை நிரப்புக எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது;
என் சீடர்களோடு உம் வீட்டில் -------------------------கொண்டாடப்போகிறேன்

பாஸ்கா
விருந்து
பிறந்தநாள்
கிறிஸ்மஸ்
பொங்கல்

5. ஆண்டவரே நானோ உம்மை காட்டிக்கொடுக்கப்போகிறவன் என்ற சீடர்களின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?

என்னுடன் பாத்திரத்தில் தொட்டு உண்பவனே என்னைக் காட்டிக்கொடுப்பான்.
மானிடமகன், தம்மைப் பற்றி மறைநூலில் எழுதியுள்ளபடியே போகிறார்.
ஐயோ! அவரைக் காட்டி கொடுக்கிறவனுக்குக் கேடு
அம்மனிதன் பிறவாதிருந்தால் அவனுக்கு நலமாயிருக்கும்
நீயே சொல்லிவிட்டாய்

6. ஆண்டவர் இராவுணவில் திருவிருந்தை ஏற்படுத்தும்போது சொன்னவை யாவை?

இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்
இதில் உள்ளதை பருகுங்கள்;இது எனது உடன்படிக்கையின் இரத்தம்
பலருடைய பாவமன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்
இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்.
எனது நேரம் நெருங்கி வந்துவிட்டது

7. "இன்றிரவு நீங்கள் அனைவரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள்" என்று இயேசு சொன்னவுடன் பேதுருவின் பதில் என்ன?

உமது திருவுளப்படியே ஆகட்டும்
எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது
ஆயரை வெட்டுவேன், அப்போது மந்தையிலுள்ள ஆடுகள் சிதறடிக்கப்படும்
எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்
நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்


8. கோடிட்ட இடத்தை நிரப்புக:
வாளை எடுப்போர் அனைவரும் --------------------------- அழிந்துபோவர்.

அமைதியால்
வன்முறையால்
வாளால்
தானாகவே
கத்தியால்

9. இயேசுவுக்கு எதிரான சாட்சியங்கள் என்ன?

இவன் கடவுளுடைய திருக்கோவிலை இடித்து அதை மூன்று நாளில் கட்டியெழுப்ப என்னால் முடியும் என்றான்
உங்களுள் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான்
வாளை அதன் உறையில் திரும்பப்போடு என்றான்
இவன் தன்னை கடவுளின் மகன், மெசியா என்றான்
நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் (26:75)

10. யூதாஸின் முப்பது வெள்ளிக்காசுகளைக்கொண்டு என்ன வாங்கப்பட்டது?

வீடு
குயவன் நிலம்
வாகனம்
இரத்த நிலம்
கோவில்

11. பாஸ்கா விழாவின் போது விடுதலை செய்யப்பட்டவர் யார்?

இயேசு
பரிசேயர்
பேதுரு
பரபா
யோவான்

12. இயேசுவை படைவீரர்கள் செய்த ஏளனம் என்ன?

வருடைய ஆடைகளை உரிந்து, கருஞ்சிவப்பு நிறமுள்ள தளர் அங்கியை அவருக்கு அணிவித்தனர்.
ஒரு முள்முடி பின்னி அவரது தலையின்மேல் வைத்தனர்
அவருடைய வலக்கையில் ஒரு கோலைக்கொடுத்தனர்
யூதர்களின் அரசே வாழ்க என்றனர்
அவர்மேல் துப்பி, கோலை எடுத்து அவருடைய தலையில் அடித்தனர்.

13. இயேசுவை சிலுவையில் அறைந்த இடம் எது?

கொல்கொதா
கலிலேயா
மண்டையோட்டு இடம்
பெத்லகேம்
நாசரேத்

14. இயேசு சிலுவையில் உயிர்விட்டவுடன் நடந்தவை என்ன?

திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது
நிலம் நடுங்கியது
பாறைகள் பிளந்தன
கல்லறைகள் திறந்தன
இறந்த இறைமக்கள் பலரின் உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டன

15. உயிர்த்த இயேசு சீடர்களுக்கு வழங்கிய இறுதி உரை என்ன?

விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது
நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்.
தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்கு கொடுங்கள்
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைபிடிக்கும்படி கற்பியுங்கள்
இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்