மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 11
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி 23, 24, 25
முடிவுத் திகதி : 2014-11-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

உங்களுள் பெரியவர் உங்களுக்குத் ....... இருக்க வேண்டும்.

தலைவராக
தொண்டராக
ஆசிரியராக
சதுசேயராக
மறைவல்லுனராக

2. மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் பற்றி இயேசு கூறியவை என்ன?

அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்
தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்கவேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்
விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்
சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும், ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள்
சுமத்தற்கரிய பளுவான சுமைகளை கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள்

3. தம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான பணியாளர் யார்?

தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியை செய்யாதவர்
தினமும் பணி செய்பவர்
இயேசுவின் சீடர்கள்
பரிசேயர்கள்
தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியை செய்துகொண்டிருப்பவரே

4. இயேசுவின் பரிசேயர்களைக் குறித்த கோபமான சொற்கள் என்ன?

நேர்மையாளர் அனைவரின் இரத்தப்பழியும் உங்கள்மேல் வந்து சேரும்
உங்கள் இறை இல்லம் கைவிடப்பட்டு பாழடையும்
நீங்கள் இறைவாக்கினரை கொன்றவர்களின் வழிமரபினர் என்பதற்கு நீங்களே சாட்சிகள்
போலித்தனமும் நெறிகேடும் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்
நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள்

5. உலக முடிவுக்கு அறிகுறி என்ன?

நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்
பல போலி இறைவாக்கினர் தோன்றி பலரை நெறி தவறி அலையச் செய்வர்
ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பர்
பல இடங்களில் பஞ்சமும் நில நடுக்கங்களும் ஏற்படும்
என் பெயரின் பொருட்டு எல்லா மக்கள் இனத்தவரும் உங்களை வெறுப்பர்

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

----------------------------------- ஒழிந்துபோகும். ஆனால் என் --------------------------------ஒழியவே மாட்டா

வார்த்தைகள், சொற்கள்
விண்ணும் மண்ணும், வார்த்தைகள்
விண்ணகம், மண்ணகம்
பூமி, வார்த்தைகள்
மனிதர்கள், வார்த்தைகள்

7. மணமகனை எதிர்கொள்ள வந்த மணமகளின் தோழியர் யாவர்?

ஐந்து அறிவிலிகள்
பத்து அறிவிலிகள்
பத்து முன்மதி உடையவர்கள்
ஐந்து போதகர்கள்
ஐந்து முன்மதி உடையவர்கள்


8. எண்ணெய் கேட்ட அறிவிலிகளுக்கு முன்மதியுடையவர்கள் கூறிய பதில் என்ன?

இதோ தருகிறோம்
எண்ணெய் இல்லை
உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்
வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக்கொள்வது நல்லது
பிறகு வாருங்கள்

9. நெடும் பயணம் செல்லவிருந்தவர் கொடுத்த தாலந்துகள் எவ்வளவு?

ஐந்து தாலந்து
நான்கு தாலந்து
இரண்டு தாலந்து
ஆறு தாலந்து
ஒரு தாலந்து

10. இறுதிநாளில் இயேசு நேர்மையாளர்களைப் பார்த்து சொல்கிறவை என்ன?

நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்
நோயுற்றிருந்தேன்; என்னை கவனித்துக் கொண்டீர்கள்
சிறையில் இருந்தேன், என்னை தேடி வந்தீர்கள்
நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை
நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்

11. ஒரு தாலந்து பெற்ற பணியாளனிடம் தலைவர் கூறியவை என்ன?

நன்று, நம்பிகைக்குரிய நல்ல பணியாளரே
ஐயா, நீர் கடின உள்ளத்தினர்
பயனற்ற இந்த பணியாளனை புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள்
சோம்பேறியே! பொல்லாத பணியாளனே
என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்கவேண்டும்

12. ஆணையிடுதல் குறித்து இயேசுவின் போதனை என்ன?

பலிபீடத்தின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதன்மேலுள்ள அனைத்தின்மீதும் ஆணையிடுகிறார்
வானத்தின்மீது ஆணையிடுகிறவர் கடவுளின் அரியணைமீதும் அதில் வீற்றிருக்கிற கடவுள் மீதும் ஆணையிடுகிறார்
நீங்கள் புதினா, சோம்பு, சீரகம் ஆகியவற்றில் பத்தில் ஒரு பங்கை படைக்கிறீர்கள்
திருக்கோவிலின்மீது ஆணையிடுகிறவர் அதன்மீதும் அதில் குடிகொண்டிருக்கிறவர்மிதும் ஆணையிடுகிறார்
நீங்கள் பருகும்போது கொசுவை வடிகட்டி அகற்றுகிறீர்கள். ஆனால் ஒட்டகத்தையோ விழுங்கிவிடுகிறீர்கள்

13. மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் உவமை கூறும் நீதி என்ன?

உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்
வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார்
விழிப்பாயிருங்கள்
மனுமகன் வரும் நாளோ வேளையோ உங்களுக்கு தெரியாது

14. அறிவிலிகளின் கூற்று யாது?

உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம்
எங்கள் விளக்குகள் அணைந்துகொண்டிருக்கின்றன
உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடும்
இதோ, மணமகன் வருகிறார், அவரை எதிர்கொள்ள வாருங்கள்
உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது.

15. "நடுங்கவைக்கும் தீட்டு". இது யார் கூற்று?

இயேசு
சீடர்கள்
இறைவாக்கினர் எரேமியா
இறைவாக்கினர் எசாயா
இறைவாக்கினர் தானியேல்