மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 119
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர் 18:19-31; 19:1-14
முடிவுத் திகதி : 2023-11-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. குருவின் இதயம் மகிழ்வித்ததற்கான வினாக்கள் என்ன?

ஐவரும் கேட்ட கேள்விகளால்
ஒரு தனி மனிதரின் வீட்டுக்குக் குருவாக இருப்பதா? எனக் கேட்டார்கள்
இஸ்ராயேல் குலத்திற்குக் குருவாக இருப்பதா? எனக் கேட்டார்கள்
இஸ்ராயலில் ஒரு குடும்பத்திற்குக் குருவாக இருப்பதா? எனக் கேட்டார்கள்
நீர் உமக்குக் குருவாக இருப்பதா? எனக் கேட்டார்கள்

2. குரு எதை எடுத்துக்கொண்டு மக்களிடையே வந்தார்?

தெராபீம் உருவம்
ஏபோது உருவம்
செதுக்கிய உருவம்
அவரது ஆடைகள்
அவரது கைத்தடி

3. அவர்கள் பயணம் தொடர்ந்த போது அவர்கள் முன்னே சென்றவை எவை?

ஒட்டகம்
பலி ஆடு
குழந்தைகள்
கால்நடைகள்
உடமைகள்

4. அவர்கள் மீக்காவின் வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றபின் என்ன நிகழ்ந்தது?

அடுத்த வீட்டு ஆட்கள் ஒன்று திரண்டனர்
அடுத்த வீட்டு ஆட்கள் குரல் எழுப்பினர்
அடுத்த வீட்டு ஆட்கள் ஒன்று திரண்டு தாண் மக்களைத் துரத்திச் சென்றனர்
அடுத்த வீட்டு ஆட்கள் ஒன்று திரண்டு தாண் மக்களை நோக்கி கத்தினர்
மந்தைகளை கடத்திச் சென்றனர்

5. தாண் மக்கள் மீக்காவுக்கு அளித்த பதில் என்ன?

எங்களோடு விவாதம் செய்யாதே
கொடிய மனம் கொண்ட இம்மனிதர் உங்களைத் தாக்குவர்
நீயும் உன் வீட்டாரும் உயிரிழக்க நேரிடும்
உனது கழுதைகளை நீயே வைத்துக்கொள்
உனது குதிரைகளை எமக்குத் தந்துவிடு

6. தாண் மக்களுக்கு மீக்கா அளித்த பதில் என்ன?

நான் செய்த தெய்வங்களை நீங்கள் எடுத்துச் செல்கின்றீர்கள்
குருவையும் கூட்டிக்கொண்டு செல்கின்றீர்கள்
இப்படி இருக்க உனக்கு என்ன வேண்டும் என என்னையே கேட்கின்றீர்களே?
எனக்கு வேறு என்ன இருக்கிறது ?
எனது குதிரைகளை எமக்குத் தந்துவிடு

7. தாண் மக்கள் மீக்காவிடம் என்ன கேட்டனர்?

நீ ஏன் ஆள் திரட்டி வருகின்றாய்?
எங்களோடு வா
எங்களுக்கு உணவு தருவாயா?
எங்கள் மந்தைகளை விட்டுவிடு
உனக்கு என்ன வேண்டும்?


8. மீக்கா ஏன் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றார்?

தாண் மக்கள் மீக்கா செய்து வைத்திருந்ததை கவர்ந்து சென்றதால்
தங்களது குருவை அவர்கள் கவர்ந்து சென்றதால்
அவர்கள் தன்னை விட வலிமை வாய்ந்தவர்கள் என்று கண்டு கொண்டதால்
மீக்காவை அவர்கள் தாக்கியதால்
அவர்கள் பின் செல்லத் துணியாமையால்

9. கடவுளின் உறைவிடம் எங்கே இருக்கிறது?

சீலோவில்
சீனா மலையில்
செங்கடலில்
வியாபாரிகளிடம்
மோயிசனிடம்

10. இலாயீசு நகர் ஏன் தாண் என அழைக்கப்பட்டது?

இலாயீசு நகர் பெத்ரகோபின் பள்ளத்தாக்கில் இருந்ததனால்
தாண் மக்கள் அந்நகரை கட்டி எழுப்பியதனால்
இஸ்ரவேலரக்குப் பிறந்த தங்கள் தந்தை தாண் அவர்களின் பெயரால் அந்நகரை தாண் என அழைத்தனர்
செதுக்கிய உருவத்தை தானின் மக்கள். தங்களுக்கென நிறுவிக் கொண்டதால்
இலாயீசு நகரின் மீது அன்பு கொண்டதால்


11. எப்ராயீம் மலை நாட்டின் எல்லைப் புறத்தில் தங்கியிருந்த லேவியர் பற்றி நீங்கள் அறிவது என்ன?

அப்போது இஸ்ராயீல் மக்களுக்கு அரசர் இல்லாதிருந்தார்கள்
லேவியர் யூதா நாட்டு பெத்லேககமைச் சேர்ந்த பெண்ணை மறு மனைவியாக கொண்டிருந்தார்
அவள் அவருக்கு எதிராக வேசித்தனம் செய்தாள்
அவள் அவரிடமிருந்து பிரிந்து சென்றாள்
அவள் தன் தந்தையின் வீட்டுக்கு சென்றாள்


12. லேவியர் தொடர்ந்து மாமனார் வீட்டில் தங்காமல் புறப்பட்டு என்ன செய்தார்?

சேணமிட்ட இரு கழுதைகளுடன் புறப்பட்டார்
தனது மனைவியுடன் புறப்பட்டார்
அவர் எருசலேம் என்ற எபூசுக்கு அருகே வந்தார்
அவர்கள் எபூசை நெருங்கிய போது அந்தி மாலை ஆகிவிட்டது
வேலையாள் தன் தலைவரிடம் எபூசுக்கு சென்று அங்கே இரவை கழிப்போம் என்றார்


13. நான்காம் நாள் அவர்கள் புறப்படுகையில் லேவியர் மாமனார் கூறியது என்ன?

சிறிது உணவருந்திக் கொண்ட பின் போகலாம்
உன் இதயம் மகிளுமாறு இங்கே தங்கும்
ஐந்தாம் நாளும் உமது இதயம் மகிழ, பொழுது சாயும் வரை இங்கே தங்கும்
நாள் முடிந்து மாலை ஆகிவிட்டது இரவு இங்கே தங்கும்
ஐந்தாம் நாளும் ஆகிவிட்டது ஐந்தாம் நாளும் மகிழுமாறு பொழுது சாயும் வரை இங்கே தங்கும் நாளை அதிகாலை (ஆறாம் நாள்) உங்கள் வீட்டிற்கு பயணமாகலாம்


14. லேவியர் பெண்ணின் தந்தை வீடு சென்ற போது எவை நடைபெற்றன?

பெண்ணின் தந்தை அவரை வரவேற்றார்
அவர்களோடு 3 நாட்கள் தங்கினார்
லேவியர் தன் மனைவியிடம் சென்றார்
தன் வேலையாளைக் கூட்டிச் சென்றார்
தன் இரு கழுதைகளையும் கொண்டு சென்றார்


15. வேலையாள் தலைவர் எபூசுவுக்குச் செல்லாமல் வேறு எண்ணம் கொண்டிருந்தபோது நிகழ்ந்தவை என்ன?

நாம் இஸ்ரேலர் மக்கள் அல்லாத வேற்று இனத்தார் பக்கம் செல்லாமல் இருப்போம்
கிபையாவுக்கு கடந்து செல்வோம்
கிபையா அல்லது இராமாவுக்குச் செல்வோம்
ஏதாவது ஓரிடத்தில் இரவை கழிப்போம்
அவர்கள் பெஞ்சமினை சார்ந்த கிபையாவை அடைந்தபோது கதிரவன் மறைந்தான்