மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 118
வேதாகமப் பகுதி : நீதித்தலைவர்கள் 18:1- 18
முடிவுத் திகதி : 2023-10-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இஸ்ரேயலுக்கு அரசன் இல்லாத காலத்தில் தாண் குலத்தாரின் நிலை என்ன?

தாம் வாழ்வதற்கு என உரிமை உள்ள பகுதியை தேடிக் கொண்டிருந்தார்கள்
இவ்வேளையில் இஸ்ராயேல் குலங்களுக்கிடையே அவர்களுக்கு உரிமைப் பகுதி கிடைக்கவில்லை
அவர்களுக்கு அரசன் இருக்கவில்லை
அவர்கள் இஸ்ராயல் குலங்களின் ஒரு பகுதியினர்
அவர்களுக்கு சூரியன் கடவுளாக இருந்தார்

2. தாண் குலத்தார் தங்களுக்கு ஆற்றல் நிறைந்தவர்களை கொண்டு என்ன செய்தார்கள்?

சோராவையும் எசுத்தாவோலையும் சார்ந்த 5 போர் வீரர்களை தெரிவு செய்தார்கள்
அவர்கள் மீக்கா வீட்டு அருகே வந்து சேர்ந்தார்கள்
அவர்கள் மீக்கா வீட்டு அருகே இரவை கழித்தார்கள்
அவர்கள் மீக்கா வீட்டருகே இருந்த போது இளைஞரின் குரலை கண்டு கொண்டார்கள்
அவர்கள் மீக்கா வீட்டினுள் சென்றனர்

3. அவர்கள் மீக்கா வீட்டு அருகே நின்ற இளைஞரிடம் என்ன கேட்டனர்?

மீக்காவை எங்களுக்கு காட்டு
உன்னை இங்கு அழைத்து வந்தது யார்?
உனக்கு இங்கு என்ன வேலை
உனக்கு பணம் தருகிறோம்
நீ மீக்காவை கொலை செய்ய வந்தாயா?

4. அவர்களோடு பேசிய இளைஞன் அளித்த பதில் என்ன?

மீக்கா என்னை வேலைக்கு அமர்த்தியுள்ளார்
நான் அவரிடம் குருவாக இருக்கிறேன்
நீங்கள் அமர்ந்து தூங்குங்கள்
உங்கள் செயல் வெற்றி பெறாது
மீக்கா தனக்கு நல்லவை செய்யவில்லை

5. ஐவரும் பயணத்தை தொடர்ந்து இலாயிசை வந்தடைந்த போது அவர்கள் கண்ட காட்சி என்ன?

அங்கிருந்த மக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர்
நெறிமுறைக்கு ஏற்ப வாழ்ந்தார்கள்
அவர்கள் அமைதியாக வாழ்ந்தார்கள்
அவர்கள் கவலை அற்றவர்களாக வாழ்ந்தனர்
அவர்கள் பயம் கொண்டவர்களாக இருந்தனர்

6. அவர்களிடம் குரு கூறிய பதில் என்ன?

மன அமைதியுடன் செல்லுங்கள்
குருவும் சேர்ந்து பயணத்தை மேற்கொண்டார்
ஆண்டவர் உங்களை கண் நோக்குவார்
ஆண்டவர் உங்களை காப்பார்
உங்கள் பயணம் வெற்றி பெறாது

7. நாட்டை உழவு பார்க்க வந்த போர்வீரர்கள் இளைஞரிடம் கேட்டது என்ன?

நாங்கள் செல்லும் பயணம் வெற்றி கரமாக இருக்குமா?
நாங்கள் செல்லும் பயணம் தோல்வியாகுமா?
எங்கள் பயணம் வெற்றி பெற கடவுளிடம் கேள்
எங்களுக்கு உணவு தருவாயா?
எங்களை மீக்காவிடம் அழைத்துச் செல்ல வேண்டும்


8. இலாயீசைச் சேர்ந்த மக்கள் நிலை என்ன?

மக்கள் சீதோனியரிடம் எவ்வித தொடர்பும் கொண்டிருக்கவில்லை
அம்மக்கள் சீதோனியரிடம் இருந்து தொலைவில் இருந்தனர்
எதிலும் குறைவற்றவர்களாக இருந்தனர்
அம்மக்கள் வாழ்ந்த நாடு செழிப்பு உடையதாக இருந்தது
சீர்கோனியரிடம் கைத்தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்கள்

9. ‘மகனே தாண்’ என அழைக்கப்படுவதன் சிறப்பு என்ன?

யூதா நாட்டு கிரியாத்து எயாரிமில் தாண் வீரர்கள் பாளையம் இறங்கியது
மகனே தாண் கிரியத்து எரியாமுக்கு மேற்கே உள்ளது
அவர்கள் அங்கே புலியுடன் போராடினார்கள்
அவர்கள் யுத்தத்தில் தோல்வி அடைந்ததனால்
அந்த இடம் இரத்த நிலமானதாக இருந்ததனால்

10. தாண் குலத்தார் என்ன செய்தனர்?

600 பேர் போர்க்கோலம் பூண்டனர்
சோராவிலிருந்து புறப்பட்டு சென்றனர்
எசுத்தாவோலில் இருந்தும் புறப்பட்டு சென்றனர்
அவர்கள் யூதாநாட்டு கிரியத்து எயாரிமில் பாளையம் இறங்கினர்
போர்க்களம் போனவர்கள் அங்கே படுத்து உறங்கினர்


11. சோராவிலிலும் எசுத்தாவோலிலும இருந்த சகோதரர்களிடம் திரும்பி வந்து கூறியது என்ன?

வாருங்கள், அவர்களுக்கு எதிராகப் புறப்படுவோம்
நாங்கள் ஒரு நாட்டை கண்டோம்
அது மிகவும் செழிப்பானது
அந்த நாட்டில் நுழைந்து அதை உரிமையாக்கிக் கொள்ள தயங்க வேண்டாம்
பரந்த அந்த நிலத்தை கடவுள் உங்கள் கையில் ஒப்படைத்து விட்டார்


12. ஐவரும் ஏபோது, தெராபிம், வார்ப்புச் சிலை ஆகியவற்றை எடுத்த போது என்ன நிகழ்ந்தது?

குரு நீங்கள் செய்வது என்ன என கேட்டார்
அவரிடம் பேசாதே வாயை மூடு என்று சொன்னார்கள்
எங்களுடன் நட எனக் கூறினார்கள்
எங்களுக்கு தந்தையாய் இருப்பாய் எனக் கூறினார்கள்
எங்களுக்குக் குருவாக இருப்பாய் எனக் கூறினார்கள்


13. இலாயீசு நாட்டை வேவுபார்க்கச் சென்றவர்கள் ஐவரும் உடன் வந்த பிறரிடம் கூறியது என்ன?

இவ்வீட்டில் ஏபோதுவின் சிலை உள்ளது
இவ்வீட்டில் தெராபிம் உருவம் உள்ளது
இவ்வீட்டில் செதுக்கிய உருவம் உள்ளது
இவ்வீட்டில் வார்ப்புச்சிலை உள்ளது
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது பற்றி சிந்தியுங்கள்


14. மீக்காவின் வீட்டில் தங்கியிருந்த இளைஞரிடம் அவர்கள் என்ன செயற்பாடுகள் இடம்பெற்றன?

இளைஞரிடம் நலம் விசாரித்தார்கள்
போர்க் கோலம் தாங்கிய 600 தான் வீரர்கள் நுழைவாயிலின் முன் நின்றார்கள்
நாட்டை வேவு பார்க்க வந்த ஐவரும் உள்ளே சென்று செதுக்கிய உருவத்தை எடுத்தார்கள்
ஏபோது தெராபிம் ஆகிய சிலைகளை எடுத்தனர்
வார்ப்பு சிலையையும் எடுத்தனர்


15. மகனே தாண் என்னும் இடத்தை அடைந்த வீரர்கள் அங்கிருந்து என்ன செய்தார்கள்?

எப்தாயீம் மலை நாட்டிற்குச் சென்றார்கள்
அங்கே அவர்கள் மீக்காவின் வீட்டை நெருங்கினார்கள்
மீக்காவிடம் அவர்கள் சரணடைந்தார்கள்
மீகாவிடம் இருந்த இளைஞனை தங்கள் குருவாக ஏற்றுக் கொண்டார்கள்
தாம் அந்த இடத்தை கைப்பற்ற போவதாகக் கூறினார்கள்