மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 117
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர்கள் 17: 1—17: 13
முடிவுத் திகதி : 2023-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. மீக்கா யார்?

எப்ராயீம் நாட்டை சார்ந்தவர்
மலைநாடு (எப்ராயீம்) சார்ந்தவர்
சிம்சோனின் சகோதரர்
மோயிசனின் மாமனார்
தெலீலாவோடு உடன் இருந்தவர்

2. உருவத்தையும் வார்ப்பு சிலைகளையும் செய்து கொள்வதற்காக வெள்ளி காசு அளித்தவர் யார்?

சோன்
தெலீலா
மீக்காவின் தாய்
கிழிந்த கூந்தலுடன் ஒரு மனிதன்
மீக்கா

3. வெள்ளிக் காசுகளைத் திருடியவர் யார்?

சிம்சோன்
தெலீலா
மீக்கா
சிம்சோன் தாய்
மீக்காவின் மாமனார்

4. செதுக்கிய உருவமாகவும் வார்ப்பு சிலையாகவும் செய்தது யார்?

தெலீலா
மோசேசு
தட்டான்
மீக்கா
மீக்காவின் தாய்

5. செதுக்கிய உருவகமாகவும் வளர்ப்பு சிலையாகவும் செய்த உருவம் இருந்த இடம் எங்கே?

ஆரோன் வீடு
மோயிசன் வீடு
மீக்கா வீடு
தெராபிமின் வீடு
ஏர்போரத் வீடு

6. அந்நாளில் இஸ்ரவேல் அரசன் யார்?

சிம்சோன்
மீக்கா
ஆரோன்
அரசர் இல்லை
மோசேசு

7. ஆண்டவருக்கு நேர்ச்சையாக அளிக்கப்பட்டது என்ன?

200 வெள்ளிக்காசுகள்
முப்பது வெள்ளிக்காசுகள்
40 வெள்ளி காசுகள்
ஆயிரத்தி நுாறு வெள்ளி காசுகள்
1500 வெள்ளி காசுகள்

8. மீக்காவின் புதல்வருள் ஒருவர் எங்கே குருவாக நியமிக்கப்பட்டார்?

சிம்சோன் கட்டிய ஆலயத்தில்
பெலிஸ்தியரின் ஆலயத்தில்
மீக்கா கட்டிய ஆலயத்தில்
எருசலேம் தேவாலயத்தில்
ஆரோனின் பேழைவைக்கப்பட்ட இடத்தில்

9. லேவியரான இளைஞர் இருந்த இடம் எது?

மீக்காவில்
பாவு நூல் கட்டிய இடத்தில்
சிம்சோன் சிறை வைக்கப்பட்ட இடத்தில்
பெத்லகேமில்
யூதா நாட்டு பெத் லேகமில்

10. லேவியரான இளைஞருக்கு தங்கும் இடம் கொடுத்தவர் யார்?

பெலிஸ்தியர்
தெலீலா
சிம்சோன்
மீக்கா
பெலிஸ்திய சிற்றரசர்


11. மீக்காவின் வீடு எங்கே இருந்தது?

எப்ராயீம் மலைப்பகுதியில்
மீக்காவில்
பெத்லகேமில்
ஆரோனின் பேழைவைக்கப்பட்ட இடத்தில்
தெலீலா வாழ்ந்த இடத்தில்


12. மீக்காவிடம் தங்குவதற்காக வந்தவர் யார்?

யூதா நாட்டு இளைஞர்
பெலிஸ்தியர்
சிம்சோன்
லேவியரான இளைஞன்
சிம்சோனின் தந்தை


13. யாருக்கு யாரால் 10 வெள்ளிக்காசு உணவும் உடையும் தர உடன்பாடு செய்யப்பட்டது?

லேவியரான இளைஞருக்கு
எப்ராயீம் மலைநாட்டை சேர்ந்த மனிதரால்
மீக்காவால்
தன் தாயிடம் இருந்து ஆயிரத்து நூறு வெள்ளி காசுகள் திருடியவரால்
யூதா நாட்டுப் பெத்லேகேமில் இருந்து வந்தவருக்கு


14. என்னுடன் தங்கும் எனக்கு தந்தையாயும் குருவாகவும் இருப்பீர் என சொன்னவர் யார்?

ஆரோன்
மோயீசன்
மீக்கா
பெத்லேகேம் இளைஞர்
சிம்சோன்


15. ஆண்டவர் எனக்கு நல்லது செய்வார் என மீக்கா நம்பியது ஏன்?

யூதாகுல இளைஞர் பெத்லெகேமில் இருந்து வந்தமையால்
யூதாகுல இளைஞர் இளைஞர் மீக்கா வீட்டில் தங்கியமையால்
அந்த இளைஞர் லேவியர் ஆனதனால்
லேவியரே குருவாக ஆனதனால்
அவர் சிம்சோனின் சகோதரர் ஆனதனால்