மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 116
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர்கள் 16:10-31
முடிவுத் திகதி : 2023-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. தெலீலா சிம்சோனிடம் கூறியது என்ன?

என்னை அற்பமாக நினைத்தீர்
என்னிடம் பொய்கள் சொல்லிவிட்டீர்
எதனால் உம்மை கட்ட வேண்டும்
நீர் தூங்கிவிட்டீர்
ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்

2. சிம்சோன் தெலீலாவிடம் கூறியது என்ன?

இதுவரை உபயோகிக்கப்படாத புதிய கயிறு வேண்டும்
இரண்டு புதிய கயிறு வேண்டும்
எட்டு புதிய கயிறு வேண்டும்
அப்போது நான் வலிமை இழந்து விடுவேன்
நான் மற்ற மனிதர்களைப் போல் ஆகிவிடுவேன்

3. தெலீலா என்ன செய்தாள்?

தெலினா புதிய கயிறுகளை எடுத்து சிம்சோனை கட்டினாள்
பெலிஸ்தியர் உன்மீது பாய்கின்றனர் எனக் கூறினாள்
குறுக்குச் சட்டங்களை தன் தோள் மீது வைத்துக்கொண்டு நடந்தாள்
எவ்விரோனுக்கு எதிரில் இருந்த மலைக்குத் தூக்கிச் சென்றாள்
வாயின் கதவுகளை பிடுங்கினாள்

4. தெலீலா புதிய கயிறுகள் எடுத்து சிம்சோனை கட்டிய போது என்ன நிகழ்ந்தது?

சிம்சோனை பார்த்து சிரித்தாள்
தான் வெற்றி பெற்று விட்டேன் எனக் கூறினாள்
அறையில் ஆட்கள் ஒழிந்து கொண்டிருந்தனர்
நூல் கயிற்றைப் போல் சிம்சோன் அக்கயிற்றை அறுத்தெறிந்தான்
தெலீலா ஒளிந்து கொண்டாள்

5. தெலீலா மீண்டும் சிம்சோனிடம் கூறியது என்ன?

எதனால் உண்மை கட்ட வேண்டும் என எனக்கு சொல்லும்
நீர் என்னை அற்பமாக நினைத்து விட்டீர்
நீர் என்னிடம் பொய்கள் சொல்லி விட்டீர்
நீங்கள் என்னை நன்றாக புரிந்து கொண்டீர்கள்
நீர் பெலிஸ்தியருடன் சேர்ந்து கொண்டீர்

6. சிம்சோன் தூங்கும் போது என்ன நிகழ்ந்தது?

சிம்சோனின் ஏழு மயிர்க்கட்டையும் பாவு நூலால் பின்னினாள்
அவற்றை கட்டுவதற்காக முளை அடித்தாள்
தூங்கிக் கொண்டிருந்த சிம்சனுக்கு ஒன்றும் ஆகவில்லை
சிம்சோன் பெலிஸ்தியர் உன் மீது பாய்கின்றனர் என கத்தினால்
சிம்சோன் தூக்கத்தில் இருந்து விழுந்தான்

7. சிம்சோன் தூக்கத்திலிருந்து எழுகின்ற போது தெலீலா என்ன கூறினாள்?

நீர் என்னை அற்பமாக நடத்தி விட்டீர் எனச் சொன்னாள்
நீர் என் மீது அன்பு செலுத்துவதாய் எப்படிக் கூறலாம்
நீர் என் மீது மனம் திறந்து பேசவில்லை
உமது பேராற்றல் எங்கு உள்ளது என இன்னும் சொல்லவில்லை
தெளிவா வார்த்தைகளால் சிம்சோனை நச்சரித்து கொண்டே இருந்தாள்


8. சிம்சோன் தனது ஆற்றல் பற்றி தெலீலாவிடம் கூறியது என்ன?

சவரக்கத்தி என் தலை மீது பட்டதே இல்லை
பிறப்பில் இருந்து நான் கடவுளின் நாசீராக இருக்கிறேன்
என் தலை மழிக்கப்பட்டால் என் ஆற்றல் என்னிடமிருந்து அகன்று விடும்
நான் வலிமையிழந்து விடுவேன்
மற்ற மனிதன் போல் ஆகி விடுவேன்

9. சிம்சோன் தெலீலாவிடம் எல்லாவற்றையும் மனம் திறந்து கூறிய போது என்ன நிகழ்ந்தது?

சிம்சோன் கூறியதை தெலீலா தெளிவாக உணர்ந்தாள்
அவள் பெலிஸ்தியச் சிற்றரசருக்கு உடனே வாருங்கள் என செய்தி அனுப்பினாள்
சிம்சோன் மனம் திறந்து கூறியவாறு சிற்றரசருக்கு தெளிவு படுத்தினாள்
சிற்றரசர் வெள்ளிக் காசுகளை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றனர்
சிம்சோனை தன் மடியில் தூங்க வைத்தாள்

10. தெலீலா சிம்சோனை மடியில் தூங்க வைத்து என்ன செய்தாள்?

ஒர் ஆளைக் கூப்பிட்டு சிம்சோனின் ஏழு மயிர் கற்றைகளையும் மழித்தாள்
சிம்சோனின் ஆற்றல் அவரிடம் இருந்து அகன்றது
தெலீலா அவரை சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்
சிம்சோன் பெலிஸ்தியர் உன் மீது பாய்கின்றனர் என கத்தினாள்
சிம்சோன் தான் தன்னை விடுவித்துக் கொண்டு வெளியே செல்வேன் என சொன்னார்


11. ஆண்டவர் சிம்சோனிடம் இருந்து அகன்ற போது என்ன நிகழ்ந்தது?

ஆண்டவர் தன்னிடம் இருந்து அகன்றதை சிம்சோன் உணரவில்லை
பெலிஸ்தியர் அவரைப் பிடித்தனர்
சிம்சோனின் கண்களை தோண்டி எடுத்தனர்
அவரைக் காசாவுக்குக் கொண்டு சென்றனர்
அவரை வெண்கல சங்கிலிகளினால் கட்டினர்


12. தாவோன் யார்?

சிற்றரசர்
பெலிஸ்தியர்
சிம்சோன்
பெலிஸ்தியரின் கடவுள்
தெலீலா


13. பெலிஸ்தியர் பலி செலுத்தி விழா எடுக்க ஒன்று கூடியது ஏன்?

தெலீலா சிம்சோனை பெலிஸ்தியர்களின் கையில் ஒப்புவித்ததால்
சிற்றரசர்களுக்கு பணம் கொடுப்பதற்காக
பெலிஸ்தியர்களின் தெய்வம் சிம்சோனை தங்களிடம் ஒப்புவித்ததால்
தாகோனுக்கு விழா எடுக்க ஒன்று கூடினார்கள்
பெலிஸ்தியர் சிற்றரசருக்கு விழா எடுப்பதற்காக


14. வேடிக்கை காட்டுவதற்காக சிம்சோனை என்ன செய்தார்கள்?

தூண்களுக்கு இடையே நிற்கும்படி செய்தனர்
இவ்விடத்தை தாங்கி நிற்கும் தூண்களை தொடுமாறு என்னை விட்டு செல்லுங்கள் என்று சிம்சோன் கூறினார்
சிறையில் இருந்து சிம்சோனை கொண்டு வந்தனர்
பெண்களை அங்கே கொண்டு வந்தனர்
ஆண்களை அங்கே கொண்டு வந்தனர்


15. சிம்சோன் ஆண்டவரை நோக்கி என்ன கூறினார்?

என் தலைவராகிய ஆண்டவரே எனக் கூறினார்
இம்முறை மட்டும் என்னை நினைவு கூறும்
எனக்கு ஆற்றல் அளியும்
என் இரு கண்களுக்கு ஈடாக பெலிஸ்தியர் மீது ஒரே தாக்குதலால் வஞ்சம் தீர்க்கச் செய்யும்
மேற்கண்டவாறு மன்றாடினார்