மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 115
வேதாகமப் பகுதி : நீதி தலைவர்கள் 15, 16
முடிவுத் திகதி : 2023-07-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. எங்கே ஆண்டவரின் ஆவி சிம்சோன் மீது இறங்கியது?

சிம்சோன் இலேகியை நெருங்கி வருகையில்.
பெலிஸ்தியர் கூச்சலுக்கு கொண்டு அவரை காண வரும் போது.
பெலிஸ்தியர்க்குக் கீழ் நாங்கள் இருக்கின்றோம் என்று கூறுகையில்.
பெலிஸ்தியர் யூதாவில் பாலம் பாளையம் இறங்கிய போது.
சிம்சோன் பாறைப்பிளவில் தங்கி இருந்தபோது.

2. எப்போது சிம்சோனின் கட்டுக்கள் அவிழ்ந்தன?

ஆண்டவரின் ஆவி அவர் மீது இறங்கிய போது.
அவர் கையில் இருந்த கயிறுகள் நெருப்பில் எரிந்த சணல் போல் ஆன போது.
பெலிஸ்தியர்க்கு கீழ் நாம் இருக்கின்றோம் என்று சொன்னபோது.
எனக்கு செய்தது போல் நானும் செய்தேன் என சொன்ன போது.
திமிரா சிம்சோனின் மனைவியை அவர் தோழருக்கு கொடுத்தபோது.

3. சிம்சோன் ஆண்டவரிடம் என்ன மன்றாடி நன்றி கூறினார்?

தனது தாகம் தீர்ப்பதற்கு நன்றி கூறினார்.
உம் ஊழியர் மூலம் மாபெரும் விடுதலையை தந்ததற்காக நன்றி கூறினார்.
விருத்தசேதனம் செய்யாதவர்களின் கைகளில் வீழாதிருப்பதற்காக மன்றாடினார்.
எற்றாமின் பாறைப்பிளவில் ஒளிந்திருந்த தன்னை காட்டி கொடுக்க வேண்டாம் என்று.
திராட்சை ஒலிவ மரங்கள் அழிய வேண்டும் என்று.

4. சிம்சோன் ஆயிரம் பேரை எவ்வாறு கொன்றான்?

குதிரையின் பச்சைத் தாடை எழும்பினால்.
ஒரு குதிரையின் பச்சைத் தாடை எலும்பை சூடாக்கி அதன் மூலம் கொன்றான்.
ஒரு கழுதையின் பச்சை தாடை எலும்பினால் கொன்றான்.
தனது போர் வாளினால் கொன்றான்.
தனது யானை படையால் கொன்றான்.

5. இராமேத்து இலேகி என அழைக்கப்பட்ட இடத்தில் என்ன நிகழ்ந்தது?

அவரது கையில் இருந்த கட்டுக்கள் தளர்ந்து விழுந்தன.
சிம்சோன் கழுதையின் தாடை எலும்பினை வீசி எறிந்தான்.
குதிரை அவர் அருகே வந்து நின்றது.
குதிரையின் கொடியில் சிலுவை பொறைத்திருந்தது.
ஆண்டவரின ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது.

6. கடவுள் இலேகியில் என்ன செய்தார்?

ஆண்டவரின் ஆவி அவர் மீது இறங்கச் செய்தார்.
ஒரு நிலப் பிளவைத் தோற்றுவித்தார்.
நிலப் பிளவில் இருந்து தண்ணீர் வெளியே வரச் செய்தார்.
சிம்சோன் குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார்.
சிம்சோன் மீண்டும் புத்துயிர் பெறச் செய்தார்.

7. ஏன்ககோரே என்னும் இடம் எங்கே உள்ளது?

இஸ்ரவேலில் சிம்சோன் நீதி தலைவராக இருந்த இடத்தில் உள்ளது.
சிம்சோன் தண்ணீர் குடித்த இடத்தில்.
இலேகி என்னும் இடத்தில்.
இலேகி என்னும் இடத்தில் உள்ள நிலப் பிளவில்.
யாழ்ப்பாணத்தில்.


8. சிம்சோன் யாருடைய காலத்தில் 20 ஆண்டுகள் இஸ்ரவேலில் நீதி தலைவராக இருந்தார்?

இஸ்ரவேலர்களின் காலத்தில்.
பெலிஸ்தியர்களின் காலத்தில்.
சிம்சோனின் காலத்தில்.
திமினாவின் காலத்தில்.
நற்கருணை ஆண்டில்.

9. சிம்சோன் காசாவிற்கு சென்றபோது என்ன நிகழ்ந்தது?

சிம்சோன் இங்கு வந்துள்ளார் என காசா மக்களுக்குக் கூறப்பட்டது.
சிம்சோன் அங்கு ஒரு விலைமாதை கண்டார்.
மக்கள் இரவு முழுவதும் சிம்சோனுக்காகக் காத்துக் கிடந்தனர்.
பொழுது புலரும் வரை காத்திருந்து அவரை கொல்வோம் எனக் கூறினர்.
சிம்சோன் நடுச்சாமும் வரை படுத்துக் கிடந்தார்.

10. எவ்வாறு சிம்சோன் வலிமை இழக்க முடியும்?

நூறு வெள்ளிக் காசு கொடுத்தால்.
தெலீலாவை காதலித்ததால்.
ஏழு புதிய உலராத நரம்பு கயிறுகளினால் கட்டினால்.
உணவு கொடுக்காமல் விட்டால்.
அதிகம் மது அளித்தால்.


11. சிம்சோன் தப்பிச் செல்ல கையாண்ட வழிகள் என்ன?

எலி சென்ற பாதையால் செல்வது.
நள்ளிரவில் நகர் வாயில் கதவுகளை பிடித்து குறுக்கு சட்டங்களைப் பிடுங்கி விடுவது.
அவற்றைத் தோள் மீது வைத்துக்கொண்டு தப்பிச் செல்வது.
அவர் எபிரேயனுக்கு எதிரில் இருந்த மலைக்குத் தூக்கிச் செல்வது.
அவர் மருந்துக் குளிகைகளைப் பாவிப்பது.


12. 12. சோரோக்கு பள்ளத்தாக்கில் அவர் விரும்பிய பெண்ணின் பெயர் என்ன?

திமினா
நமீனா
தெலிலா
ஆயி
ஜோனா


13. சிம்சோனை அடக்குவதற்கு பெலிஸ்தியர் கையாண்ட வழி என்ன?

சிம்சோன் காதலித்த பெண்ணை அவரை அடக்குவதற்குப் பாவித்தனர்.
காதலித்த பெண்ணுக்கு ஒவ்வொருவரும் ஆயிரத்து நூறு வெள்ளி காசு தருவதாக உறுதியளித்தனர்.
தெலீலா ஊடாக அவரது வலிமையை அறிந்தனர்.
திமீனாவைக் கூட்டி வந்து அவரோடு மோத விடுவதன் மூலம்.
பெருந்தொகை பணத்தினை சிம்சோனுக்கு கொடுப்பதன் மூலம்.


14. சிம்சோன் எவ்வாறு வலிமை இழப்பான்?

புதிய உலராத நரம்பு கயிறுகளினால் கட்டினால்.
மயக்க மருந்து கொடுத்தால்.
ஐந்து பேர் சிம்சோன் மீது தாக்குதல் நடத்தினால்.
பெலிஸ்தியரின் தெய்வம் வந்து தாக்கினால்.
சிம்சோனின் குதிரை கொல்லப்பட்டால்.


15. பெலிஸ்தியர் உம்மீது பாய்கின்றனர் என தெலீலா கத்தியதும் என்ன நிகழ்ந்தது ?

சிம்சோன் அவரைக் கட்டிய கயிறுகளை அறுத்தெறிந்தார்.
சிம்சோன் சோர்ந்து போனார்.
சிம்சோன் ஏமாற்றமடைந்தார்.
சிம்சோன் அவர்களிடம் சரணடைந்தார்.
அவர்களால் தாக்கப்பட்டு உயிர் விட்டார்.