மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 114
வேதாகமப் பகுதி : நீதி தலைவர்கள் 14, 15
முடிவுத் திகதி : 2023-06-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. சிம்சோன் அவர் தந்தைக்கும் தாய்க்கும் மறைத்த விடயங்கள் என்ன?

சிங்கக்குட்டியை வெறும் கையில் வெறும் கையால் இரண்டாகக் கிழித்த விடயம்
சிங்கத்தின் பிணத்தில் தேன்கூடும் தேனும் காணப்பட்ட விடயம்
சிங்கத்தின் பிணத்தில் இருந்து தேன் அடை எடுத்த விடயம்
சிங்கத்தின் பிணத்தில் சிம்சோனை வரவேற்ற விடயம்
சிங்கத்தின் திராட்சை ரசம் கொடுத்த விடயம்

2. சிம்சோன் கூறிய விடுகதை என்ன?

உணவினை சாப்பிட உடல் வளரும்
தண்ணீர் குடிக்க பசி அடங்கும்
உண்பவனிடமிருந்து உணவு வெளி வந்தது
வலியவனிடம் இருந்து இனி யது வந்தது
சிங்கத்திடம் இருந்து தேன் வந்தது

3. சிம்சோன் தானும் அருந்தி தன் தாய்க்கும் தந்தைக்கும் என்ன கொடுத்தார்?

தேன் அடை
தேனீர்
கோப்பி
குளிர்பானம்
பியர்

4. சிம்சோனின் தந்தை பெண் வீட்டிற்குச் சென்றபோது நடைபெற்ற நிகழ்வு என்ன ?

சிம்சோன் விருந்தளித்தார்
இளைஞர் அவ்வாறு செய்வது வழக்கமானது
அவரது தோழராய் இருக்குமாறு 30 பேரை கூட்டி வந்தனர்
சிம்சோன் விடுகதை கூறினார்
அவர்கள் விடுகதையை கேட்டார்கள்

5. சிம்சோனின் தோழராய் வந்த இளையோர் எப்போது - சிம்சோனின் மனைவியிடம் என்ன கூறினர்?

நான்காம் நாள்
உன் கணவரை மயக்கி விடு
உன் கணவனை மயக்கி விடுகதையை விடுகதையின் விடையை கூறச் சொல் ?
உன் வீட்டை தீக்கிரையாக்கி விடுவோம்
எங்களைக் கூப்பிட்டது கொள்ளை அடிக்கவா?

6. சிம்சோனின் மனைவி சிம்சோனிடம் கூறியது என்ன?

நீர் எனக்கு அன்பு காட்டாமல் வெறுப்பை காட்டுகின்றீர்
என் உறவும் பையன்களுக்கு விடுத்த விடுகதை கூறினீர்
சரி எனக்கு அதன் விடையை கூறவில்லை
எனக்கு நல்ல கோப்பி தரவில்லை
என்னை கடற்கரைக்கரைக்கு அழைத்தச் செல்லவில்லை

7. அந்நகரின் ஆண்கள் எழுப்பிய கேள்வி எது?

சரி தேனிலும் இனியது எது
செவ்வந்திப்பூ வாடிப் போகுமா?
தாமரை நீரில் வளர்வது ஏன்?
சிங்கத்திலும் வலியது எது?
நிலத்தின் மண் பல நிறங்களைக் கொண்டுள்ளது ஏன்?


8. சிம்சோனின் விடுகதைக்கு பதில் கண்டபோது சிம்சொன் மீது நடைபெற்ற நிகழ்வு என்ன?

ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர் மீது இறங்கியது
ஆண்டவரின் ஆவி அவர் மீது ஆற்றலுடன் இறங்கவில்லை
சிம்சோன் அஸ்கலோனிற்குச் சென்று அங்குள்ளவர்களுள் 30 பேரைக் கொன்று அவர்கள் உடைகளை குறித்து விடுகதைக்கு விடை கூறியவர்களுக்கு கொடுத்தார்
அவர் தந்தையின் வீட்டிற்கு திரும்பச் சென்றார்
சிம்சோனின் மனைவி அவருக்கு மாப்பிள்ளைத் தோழனாக இருந்த ஒருவனுக்கு கொடுக்கப்பட்டான்

9. கோதுமை அறுவடை காலத்தில் சிம்சோன் மனைவி வீட்டிற்கு போனபோது சிம்சோனக்கு என்ன நிகழ்ந்தது?

ஓர் ஆட்டுக்குட்டியுடன் தன் மனைவியை சந்திக்க சென்றார்
நான் அறையில் உள்ள என் மனைவியை சந்திக்க செல்கின்றேன் என அவர் அவள் தந்தையிடம் கூறினார்
அவள் தந்தை அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை
அவளை நீர் உண்மையாக வெறுப்பதாக நினைத்து அவளை உன் தோழனுக்குக் கொடுத்து விட்டேன்
அவளது இளைய சகோதரி அவளுக்கு பதிலாக மனைவியாக இருக்கட்டும் என அவள் தந்தை கூறினார்

10. சிம்சோன் பந்தங்களில் தீ மூட்டி பெலிஸ்தியரின் முக்கிய பயிர்களில் நடுவே எதனை அனுப்பினார்?

குதிரைகள்
மான்கள்
நரிகள்
நாய்கள்
புலிகள்


11. பெலிஸ்தியர் சிம்சோனின் மனைவியையும் அவள் தந்தையையும் ஏன் கொன்றார்கள்?

அவருடைய தோழனுக்கு சிம்சோனின் மனைவி கொடுக்கப்பட்டதால்
சிம்சோனின் மனைவியின் தந்தை இந்கக் காரியத்தைச் செய்ததால்
சிம்சோன் நம்பி இருந்த அவரது மனைவியை வேறு ஒருவருக்கு மனைவி ஆக்கியதால்
பெலிஸ்தியர் தோட்டங்களும் தானியங்களும் எரிக்கப் பட்டதால்
நரிகளுக்கு வால் இல்லாமல் போனதால்


12. சிம்சோன் தங்கி இருந்த பாறைப் பிளவின் பெயர் என்ன?

ஏற்றாம்
ராமேஸ் லேகி
யூதா
பெலிஸ்ட்
நரிவால் வளைவு


13. சிம்சோனின் மனைவியையும் தந்தையை யும் பெலிஸ்தியர்கள் எரித்ததற்காகக் கோபம் அடைந்த சிம்சோன் என்ன செய்தார்?

அவர்களை அன்பு செய்தார்
ஏற்றாமன் பாறைப் பிளவில் தங்கியிருந்தார்
அவர்களைப் பழி வாங்கினார்
அவர்களை கடுமையாக தாக்கினார்
அவர்களுள் பலரை வெட்டி வீழ்த்தினார்


14. பெலிஸ்தியரை் இலேகியைத் தாக்குவதற்காக எங்கே பாளையம் இறங்கினர்?

சிம்சோன் மலை
யூதாவில்
ஏற்றாமின் கோட்டையில்
பெலிஸ்தியரின் கோட்டையில்
நரி வால் வளைவில்


15. யூதா மக்கள் பெலிஸ்தியரிடம் என்ன கூறினர்?

ஏன் எங்களுக்கு எதிராக வந்துள்ளீர்கள்
எங்களுக்குப் பாதுகாப்பு வழங்குங்கள்
நாங்கள் குற்றம் செய்யவில்லை
நாங்கள் பழிக்கு பழி செய்வோம்
நாங்கள் உங்களை அன்பு செய்வோம்