மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 111
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர்கள் 11:25-40 12 :1-4 வரை
முடிவுத் திகதி : 2023-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இஸ்ராயேலர்கள் 300 ஆண்டுகள் வாழ்ந்த இடம் எது?

எஸ்போன்
அரோயேர் அதன் சிற்தூர்
அரோயேர்
இப்தாநகர்
அர்னோன் கரைகளில் இருந்த நகரங்கள்

2. யார் இப்தா சொல்லிய வார்த்தைகளை ஏற்கவில்லை?

சீயோன்
இப்தா
அமோனியரின் மன்னன்
ஏதோமின் மன்னன்
அர்னோனின் மன்னன்

3. அமோனியரை இப்தா கையில் ஒப்படைத்தவர் யார்?

அலமேக்கியர்
அமோனியரின் தலைவர்
ஆண்டவர்
காசேசு
அனனியா

4. இப்தா செய்த நேர்ச்சை என்ன?

ஆண்டவருக்கு ஒரு கோவில் கட்டுவேன்
ஒரு எருதினைப் பலியாக்குவேன்
அமோனிய மக்களை மக்களை வெற்றி பெற்றுத் திரும்பும் போது யார் என்னை சந்திக்க வீட்டு வாயிலில் நின்று புறப்பட்டு வருகிறாரோ அவரை கொண்டு வந்து உமக்கு எரிபலிஆக்குவேன்
எனது மகளுக்குத் திருமுழுக்கக்கொடுப்பேன்
முதல் வருபவருக்கு மாலை அணிவிப்பேன்

5. ஆண்டவரின் ஆவி யாருக்கு அருளப்பட்டது?

கிலயாத்துக்கு
அமோனியமன்னனுக்கு
சீயோனுக்கு
ஜோர்தான்மன்னனுக்கு
இப்தாவுக்கு

6. இப்த்தாவால் அழிக்கப்பட்ட பகுதிகள் எவை?

அரயோரில் இருந்து மின்னித்து அருகாமை வரை
ஆபெல்கெராமிம் பகுதிகள்
ஜாவேலின்பகுதிகள்
கீசோன்ஆற்றுப்பகுதிகள்
செபுலோன் பகுதிகள்

7. தன் மகளைக் கண்டதும் என்ன?

நீ என்னை துன்பத்திற்கு ஆளாக்கி விட்டாய்
நீ எனக்கு மோசம் செய்து விட்டாயே
நான் ஆண்டவருக்கு வாக்குக் கொடுத்து விட்டேன்
மின்னித்து அருகாமை வரை 20 நகர்கள் கைப்பற்றி விட்டேன்
ஆண்டவர் இஸ்ரேலிய அம்மோனிய மக்களுக்கிடையே நீதி வழங்கட்டும்


8. இப்தாவின் மகள் தந்தையிடம் கூறிய செய்தி என்ன?

நீங்கள் ஆண்டவருக்கு வாக்கு கொடுத்து விட்டீர்கள்
நீங்கள் உங்கள் வாக்கின்படி செய்யுங்கள்
ஆண்டவர் அமோனியரை உங்களுக்காக பழி வாங்கி விட்டார்
நான் ஆண்டவரோடு நேர்ச்சை செய்வேன்
ஆண்டவர் நமக்கு இடையே சாட்சியாக இருப்பார்

9. மேளதாளத்துடன் இப்தாவைச் சந்திக்கப் புறப்பட்டு வந்தவர்யார்?

இப்தாவின் மருமகன்
இப்தாவின் மனைவி
இப்தாவின் மகள்
நோவாவின் மகள்
அமமோனியரின் தலைவன்

10. இப்தாவின் மகள் தன் தந்தையிடம் கேட்டது என்ன?

என்னை இரண்டு மாதங்கள் தனியாக விடுங்கள்
என் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்
நான் மலைகளில் சுற்றித் திரியப் போகிறேன்
என் கன்னிமை குறித்து தோழியருடன் துக்கம் கொண்டாடுவேன்
நான் ஆண்டவரிடம் செல்வதற்காக தியானம் செய்வேன்


11. இஸ்ராயேலினரின் வழக்கமானது எது?

இப்தாவின் மகளுக்காகத் துக்கம் கொண்டாடுவது
கிலயத்தைச்சேர்ந்த இப்தாவின் மகளுக்காக ஆண்டு தோறும் நான்கு நாட்கள் துக்கம் கொண்டாடுவது
இஸ்ராயேல் மக்களினம் ஆண்டு தோறும் 4 நாட்கள் இப்தாவின் மகளுக்காக துக்கம் கொண்டாடுவது
அமோனியர் வெற்றி நிகழ்வினை கொண்டாடுவது
ஆண்டுதோறும் பாலை நிலத்தை கடந்து செல்வது


12. எப்ராயிம் மக்கள் இப்த்தாவை சந்திக்க கடந்து சென்ற இடம் எது?

ஏததோமின் நாடு
அமோனியரின் நாடு
சாப்போன்
கன்னிமை மலை
மோவாவின் மலை


13. எப்ராயீம் மக்கள் இப்தாவிடம் எழுப்பிய கேள்வி என்ன?

எங்களை உம்முடன் செல்ல அழைக்காமல் நீர் ஏன் அம்மோனியருடன் போர்புரியச்சென்றீர்?
எம்மை விட்டு உம்மால் அமோனியரை வெல்ல முடியும் என நினைத்தீரா?
உமக்கு இந்த சக்தியை தந்தவர் யார்?
நீர் ஏன் சமாதானமாக அம்மோனியருடன் செயல்படவில்லை
அம்மோனியர் உமக்கு ஏன் கப்பம் கட்டவில்லை


14. இப்த்தாவிடம் மக்கள் வினா எழுப்பிய போது இப்பதா அளித்த பதில் என்ன?

அம்மோனியரிடம் என் மக்களுக்கு சச்சரவு ஏற்பட்ட போது நான் உங்களை உதவிக்கு அழைத்தேன்
நீங்கள் என்னை அவர்கள் கையில் நின்று விடுவிக்கவில்லை
நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டே அம்மோனியரிடம் சென்றேன்
ஆண்டவர் அவர்களை என் கையில் ஒப்புவித்தார்
நீங்கள் இன்று என்னுடன் சண்டை இட்டு வருகிறீர்கள்


15. இப்த்தா கிலையாத்தின் எல்லா ஆள்களையும் ஒன்று திரட்டி என்னசெய்தார்?

எப்ராமுக்கு எதிராகப்போரிட்டார்
கிலயாதியர் எப்ராயிம் மக்களைக் கொன்றார்
எப்ராயிமுக்கு உரிய ஜோர்தான் தொங்கு பாலங்களை கைப்பற்றிக்கொண்டான்
எப்ராமியருக்கு விருந்து வைக்கச் செய்தார்
எப்ராமியப் பெண்களை விருந்தில் நடனம் ஆடச் செய்தார்