மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 110
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர்கள் 10-17, 11-1,24
முடிவுத் திகதி : 2023-02-28

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கிலயாத்தில் பாளையம் இறங்கியோர் யார்?

இஸ்ரவேல் மக்கள்
பெலிஸ்தியர்
அம்மோனியர்
மலைக் கோட்டைக்கு வந்த பெண்
இப்தா குழுவினர்

2. மிஸ்பாவில் பாளையம் இறங்கியோர் யார்?

அபிலெக்
பெலிஸ்தியர்
இப்தா குழுவினர்
இஸ்ரவேல் மக்கள்
மூவா பின் தெய்வங்கள்

3. இப்தா யார்?

வலிமை மிக்க போர் வீரன்
கிளையாத்தை சேர்ந்தவர்
அபி வேலை மகன்
அபி மெலேக்கின் சகோதரர்களைக் கொன்றவர்
விலைமாதின் மகன்

4. இப்தாவை அவர்கள் ஏன் துரத்தி விட்டனர்?

இப்தா வேறொரு பெண்ணின் மகன்
தங்கள் தந்தையின் வீட்டில் பங்கு இல்லாததனால்
அவர் விலைமாதின் மகன் என்பது
அவர் வயது முதிர்ந்தவர்
வீரர்களுடன் திரிந்ததனால்

5. இப்தா தப்பியோடி எங்கே வாழ்ந்து வந்தார்?

தோபு நாட்டில்
கிலயாத்தில்
மலைக்கோட்டையில்
சீதோனியருடன்
அலமேக்கியருடன்

6. அம்மோனியர் இஸ்ராயலரோடு போர் தொடுத்த போது கில யாத்தின் பெரியவர்கள் எங்கே சென்றனர்?

இப்தாவைக் கூட்டி வரச் சென்றனர்
தோபுவில் இருந்து கூட்டி வரப் போனார்கள்
இப்தாவைக் கொன்றுவிட முடிவு செய்தார்கள்
இப்தாதாவுடன் சமாதானம் செய்தார்கள்
இப்தாவுக்கப் பதவி கொடுத்தார்கள்

7. இப்தா தன்னைக் கூட்டி வர வந்த பெரியவர்களிடம் என்ன கூறினார்?

நீங்கள் என்னை வெறுக்கவில்லையா?
என் தந்தையின் வீட்டிலிருந்து என்னை வெளியே துரத்தவில்லையா?
நீங்கள் துன்புறும் நேரத்தில் மட்டும் ஏன் என்னிடம் வருகிறீர்கள்?
உங்களுக்கு நான் உணவு தருவேன்
என்னைக் கொன்று விடுங்கள்


8. இப்தாவைக் கூட்டிச் செல்ல வந்த பெரியவர்களிடம் இருந்த எண்ணம் என்ன?

அம்மோனியருக்கு எதிரான போரில் இப்தாவை இணைத்துக் கொள்வது
கிலயாத்தில் வாழும் அனைவருக்கும் இப்த்தாவை தலைவர் ஆக்குவது
அம்மோனியரிடம் இத்தாவை ஒப்படைப்பது
தூது அனுப்புவதற்காக
அம்மோனியரிடம் இருந்து தங்களைக்காப்பது

9. பெரியோர்களுடன் புறப்பட்டு மக்களிடம் சென்ற இப்தாவின் நிலை என்ன?

உங்கள் பெரியவர்களுடன் புறப்பட்டு வந்துள்ளேன் என இப்தா எடுத்துச் சொன்னார்
மக்கள் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர்
மக்கள் தங்களின் போர் தளபதியாக ஏற்றுக் கொண்டனர்
இப்தா மிஸ் பாவில் ஆண்டவர் திருமுன் தம் காரியங்கள் அனைத்தையும் மக்களிடம் எடுத்துக் கூறினார்
இப்தா மக்களை மதிக்கவில்லை

10. இப்தா அமோனிய மன்னரிடம் தனது தூதரை அனுப்பிக் கூறியது என்ன?

எனது மக்களுடன் போர் புரிய வேண்டாம்
நான் உமக்கு கப்பம் தருகிறேன்
எனக்கும் உமக்கும் இடையே என்ன வழக்கு
நீரே எனக்கு எதிராக வந்து என் நிலத்தில் போரிடுகின்றீர்
நான் இஸ்ரவேல் மக்களின் தலைவராக வந்துள்ளேன்


11. அம்மோரிய மன்னன் இப்தாவின் தூதரிடம் கூறிய பதில் என்ன?

இஸ்ராயேல் மக்கள் அர்னோவில் இருந்து யாபோக்கு வரை என் நிலத்தை பறித்துக் கொண்டார்கள்
அவற்றை சமாதானமாக திருப்பிக் கொடும்
நான் உங்களிடம் யுத்தத்திற்கு வரவில்லை
நீர் இஸ்ரவேலரின் தலைவர் அல்ல
எம்மிடம் சமாதானம் பேசுவதற்கு உனக்கு தகுதி இல்லை


12. இப்தா மீண்டும் அமோனிய மன்னரிடம் அறிவித்தது என்ன?

இஸ்ரவேலர் மோவாபியரின் நிலத்தை பறித்துக் கொள்ளவில்லை
இஸ்ரவேலர் அம்மோனியர் நிலத்தை பறித்துக் கொள்ளவில்லை
இஸ்ரவேலர் மோவாபியரின் எல்லைக்குள் கால் வைக்கவில்லை
சீகோன் மன்னனே இஸ்ரவேலுடன் போர் புரிந்தார்கள்
அதனால் இஸ்ரவேலர் கடவுள் சீகோனையும் அவர் மக்களையும் இஸ்ரவேலர் கையில் ஒப்படைத்தார்


13. இஸ்ரவேலர் ஏன் எமோரியரை வென்று அவர்கள் நாட்டை தமதாக்கிக் கொண்டனர்?

சீகோன் இஸ்ரவேலரை நம்பாததால்
சீகோன் தன் மக்களைத் திரட்டி இஸ்ரவேலருடன் போர் புரிந்ததால்
சீகோன் யாகசிவிலில் பாளையம் இறங்கி இஸ்ரவேலர்களுடன் போர் புரிந்ததால்
எமோரிய மன்னனுடன் தூது அனுப்பி உமது நாட்டை கடந்து தன் நாட்டை அடைய இஸ்ரவேலர் அனுமதி கோரிய போது அனுமதி மறுத்ததால்
இஸ்ரவேலர் மக்களுடன் சமாதானம் கொள்ளாததால்


14. இஸ்ரயேலர் உரிமை ஆக்கிக் கொண்ட நிலம் எது?

அர்னோனில் இருந்து யாபோக்கு வரை
பாலை நிலத்திலிருந்து ஜோர்தான் வரை
எமோரியர் வாழ்ந்த நாடும் முழுவதையும்
காதேசை
கிலயாத்தை


15. எமோரிய மன்னனின் கடவுள் யார்?

மோயிசன்
யாகோப்பு
கிலையாத்து
கெமோசு
எரேமியா