மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 10
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி 20, 21, 22
முடிவுத் திகதி : 2014-10-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. திராட்சை தோட்ட வேலையாட்கள் வேலைக்கு வந்த நேரம் என்ன?

காலை ஒன்பது மணி
பன்னிரண்டு மணி
பிற்பகல் மூன்று மணி
ஐந்து மணி
மாலை ஒன்பது மணி

2. "கடைசியில் வந்த இவர்கள் ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். பகல் முழுவதும் வேலைப் பளுவையும் கடும் வெயிலையும் தாங்கிய எங்களோடு இவர்களையும் இணையாக்கிவிட்டீரே". இதற்கு நிலக்கிழாரின் பதில் என்ன?

தோழரே நான் உமக்கு அநியாயம் செய்யவில்லை
உமக்குரியதை பெற்றுக் கொண்டு போய்விடும்
உமக்குக் கொடுத்தபடியே கடைசியில் வந்த இவருக்கும் கொடுப்பது என் விருப்பம்
எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக்கூடாதா?
நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?

3. செபதேயுவின் மக்கள் யாவர்?

பேதுரு
பிலிப்பு
யூதாஸ்
யாக்கோபு
யோவான்

4. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் ------------------------- இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்கு ------------------------ இருக்கட்டும்"

தலைவராய், பணியாளராய்
ஏழையாய், தொண்டராக
தொண்டராய், பணியாளராக
பணியாளராக, தொண்டராய்
உயரமாய், குள்ளமாய்

5. பார்வையற்றோர் இருவரின் கூற்று என்ன?

நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என் விரும்புகிறீர்கள்?
ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறந்தருளும்
நான் குடிக்கப்போகும் துன்பக்கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?
ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்
கடைசியானோர் முதன்மையாவர், முதன்மையானோர் கடைசியாவர்

6. "இவை ஆண்டவருக்கு தேவை". எவை?

விண்ணரசு
சீடர்கள்
கழுதை
பாவிகள்
கழுதைக்குட்டி

7. "இவர் யார்" என்ற கேள்விக்கு மக்கள் கூட்டத்தினரின் பதில் என்ன?

இவர் இறைவாக்கினர் இயேசு
தாவீதின் மகனுக்கு ஓசான்னா
ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக
உன்னதத்தில் ஓசான்னா
கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர்


8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"என் இல்லம் இறைவேண்டலின் --------------------. ஆனால் நீங்கள் இதை -------------------- குகையாக்குகிறீர்கள்"

இல்லம், கடவுளின்
குகை, கள்வர்
வீடு, மக்கள்
வீடு, கள்வர்
கள்வர், வீடு

9. "இந்த அத்திமரம் எப்படி உடனே பட்டுப்போயிற்று?" சீடர்களின் இந்த கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?

நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் அத்தி மரத்துக்கு நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்.
இந்த மலையைப் பார்த்து , "பெயர்ந்து கடலில் விழு" என்றாலும் அது அப்படியே நடக்கும்
நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள்
மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கு வந்தார்
நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது நம்பிக்கையுடன் கேட்பதை எல்லாம் பெற்றுக்கொள்வீர்கள்

10. இரு புதல்வர்கள் உவமையில் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர் யார்?

இளையவர்
மூத்தவர்
வரிதண்டுவோர்
விலைமகளிர்
பாவிகள்

11. குத்தகை பழங்களை வாங்க சென்றவர்களை தோட்டத் தொழிலாளர்கள் என்ன செய்தனர்?

ஒருவரை நையப்புடைத்தார்கள்
ஒருவரைக் கொலை செய்தார்கள்
ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள்
ஒருவரை கேலி செய்தனர்
அவர் மகனை கொன்றுபோட்டார்கள்

12. திருமண விருந்துக்கு அழைப்புப்பெற்றவர்களின் எதிர்வினை என்ன?

அவர்கள் வர விரும்பவில்லை
அவர்கள் திருமண விருந்துக்கு சென்றார்கள்
ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்
ஒருவர் தம் கடைக்குச் சென்றார்
பணியாளர்களை கொலை செய்தார்கள்

13. "சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா?" என்ற கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?

சீசருக்கு உரியவற்றை சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்
இந்தக் கல்லின்மேல் விழுகிறவர் நொறுங்கிப்போவார்.
அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்
அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக
உங்களுக்கு மறைநூலும் தெரியாது; கடவுளின் வல்லமையும் தெரியாது

14. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் அடிப்படையாக அமையும் கட்டளைகள் எவை?

தாய் தந்தையை மதித்து நட
உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக
உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து
பொய்சான்று சொல்லாதே
களவு செய்யாதே

15. "மெசியா யாருடைய மகன்" என்ற கேள்விக்கு பரிசேயர்களின் பதில் என்ன?

யோசேப்பின் மகன்
கடவுளின் மகன்
மரியாவின் மகன்
தூய ஆவியாரின் மகன்
தாவீதின் மகன்