மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 107
வேதாகமப் பகுதி : நீதி நூல் 8 - 22 முதல் 9 - 7வது வசனம் வரை
முடிவுத் திகதி : 2022-11-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கிதியோன் இஸ்ரவேலர்களிடம் விடுத்த வேண்டுகோள் என்ன?

கொள்ளை அடித்தவற்றிலிருந்து காதணியை எனக்குக் கொடுங்கள்.
கொள்ளை அடித்த அனைத்து பொருட்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்
அடுத்த யுத்தத்திற்கு தயாராகுங்கள்
நீங்கள் ஒரு அரசனைத் தேர்வு செய்யுங்கள்
ஒருநாள் உணவை ஒறுத்தல் செய்யுங்கள்

2. கிதியோன் கேட்ட தங்கக் காதணிகளின் எடை என்ன?

ஆயிரம் கிலோ
ஆயிரத்து ஐநூறு கிலோ
ஆயிரத்தி எழுநூறு செக்கேல்
1500 செக்கேல்
700 இராத்தல்

3. கொள்ளை அடித்த காதணி எந்த வகையில் ஆனது?

வெள்ளி
தங்கம்
பித்தளை
அலுமினியம்
செம்பு

4. இப்பந்தியில் காட்டப்பட்ட கிதியோனின் சொந்த மக்கள் தொகை என்ன?

50 பேர்
60 பேர்
70 பேர்
100 பேர்
150 பேர்

5. அபிமெலேக் என்பவன் யார்?

ஒன்று யோசுவாசின் மகன்
யோசுவாசின பேரன்
செக்கேமில் இருந்த கிதியோனின் வைப்பாட்டியின் மகன்
கிதியோனின் மகன்
மிதியானியர்களின் தலைவன்

6. கிதியோன் இறந்தபின் நிகழ்ந்தவை என்ன?

அவர் அபியேசருக்குரிய ஒபிராவில் அடக்கம் செய்யப்பட்டார்.
அவர் தந்தை யோசுவாசின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்
இஸ்ரேல் மக்கள் மீண்டும் பாகால் இடம் திரும்பினர்
பாகால் பெரித்தைத் தங்கள் தெய்வமாக வழிபட்டனர்
முருகனைத் தெய்வமாக வழிபட்டனர்

7. கிதியோன் என்ற எருபாகல் செய்த அனைத்து நன்மைகளுக்கும் அவர்கள் நன்றி தெரிவிக்காமல் வாழ்ந்த முறை என்ன?

தங்களை சூழ்ந்து வாழ்ந்த எதிரிகளின் கைகளில் இருந்து விடுவித்த ஆண்டவரை இஸ்ராயேல் மக்கள் நினைவில் கொள்ளவில்லை
பாகால் பெரித்தைத் தங்கள் தெய்வமாகக் கொண்டனர்.
அவர்கள் கிதியோன் என்ற எருபாகால் வீட்டிற்கு விசுவாசம் காட்டவில்லை.
மிதியானிய தலைவனை தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டார்கள்
எருபாகல் என்னும் பெயரை மாற்றி அமைத்தார்கள்


8. எருபாகலின் இறப்பின்பின் அபிமேலேக் எங்கே சென்றான்?

மிதியானியருக்கு பயந்து ஒழிந்து கொண்டான்
தன் தாயின் சகோதரர்களிடம் சென்றான்
பாகால் பெரித்தை தன் தெய்வமாகக் கொண்டான்
பாகால் பெரித்தைத் தெய்வமாக்க் கொள்ள மக்களை வலியுறுத்தினான்
இஸ்ரவேலின் தலைவனாக இருக்க விரும்பவில்லை

9. "நான் உங்கள் எலும்பும் சதையுமாக இருக்கிறேன்" - யார் கூறியது?

எருபாகல்
கிதியோன்
அபிமேலேக்
யோசுவாசு
யோசுவாசின் தந்தை

10. இஸ்ரவேலரின் இதயம் அபிமெலேக் பக்கம் திரும்பியதன் காரணம் என்ன?

எருபாகலின் மகன் என்பதனால்
நான் உங்கள் எலும்பும் சதயமாக இருக்கிறேன் என்று கூறியதனால்
மூன்று யோசுவாசின் தந்தை கூறியதனால்
இஸ்ரவேலர் மீண்டும் போருக்கு தயாரானதால்
மிதியானியர் தங்களைத் தாக்க வந்ததால்

11. அபிமெலேக் பாகால் பெரித்தின் கோவிலில் இருந்து பெற்ற 70 வெள்ளிக் காசுகளைக் கொண்டு என்ன செய்தான்?

செக்கேமில் இருந்த தன் தாயின் சகோதரர்களுக்குக் கொடுத்தான்
ஒரு பெரிய தேர் ஒன்று வாங்கினான்
வீணரும் முரணருமான ஆட்களை கூலிக்கு அமர்த்திக் கொண்டான்
யோவாசின் கல்லறையைத் திருத்தி அமைத்தான்
தனது செலவுக்காக வைத்துக் கொண்டான்

12. ஒபிராவில் இருந்த கிதியோன் வீட்டுக்கு வந்த அபிமேலேக் என்ன செய்தான்?

அவர்களோடு உண்டு களித்தான்
அனைவரும் தனக்கு பணிய வேண்டும் என கூறினான்
தனது தந்தையின் கல்லறைக்குச் சென்று வணங்கினான்
எருபாகலின் மக்களும் தன் சகோதரர்களும் ஆகிய 70 பேரை ஒரே கல் மீது வைத்துக் கொன்றான்
தனது தாயின் கல்லறைக்குச் சென்று வணங்கினான்

13. அபிமெலேக் தனது சகோதரர்களை கொலை செய்த போது தப்பித்தவன் யார்?

கிதியோன்
அபிமெலேக்
எருபாகல்
யோத்தாம்
யோசிவாஸ்

14. அபிமெலேக் எங்கே அரசனாக ஏற்படுத்தப்பட்டான்?

எரேசு மேட்டில்
திராட்சை பழ ஆலையில்
செக்கெமில்
சிலைத் தூண் கருவாலி மரத்தடியில்
சீனாய் மலையில்

15. அபிமெலேக் அரசனாக ஏற்படுத்தப்பட்ட செய்தி ஜோத்தாமுக்கு தெரிவிக்கப்பட்ட போது அவன் என்ன செய்தான்?

கெரிசிம் மலைக்கு ஏறிச்சென்றான்.
கெரிசிம் மலை உச்சியில் நின்று உரத்த குரலில் பேசினான்.
செக்கேமின் மக்களே எனக்கு செவி சாயுங்கள் எனக் கூறினான்.
கடவுள் உங்களுக்கு செவி கொடுப்பார் என கூறினான்
கெரிசிம் மலையில் அயர்ந்து தூங்கினார்