மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 106
வேதாகமப் பகுதி : நீதி தலைவர்கள் (7:15 - 8:23)
முடிவுத் திகதி : 2022-10-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கிதியோன் தலை வணங்கியதன் காரணம் என்ன?

மிதியானியருக்கு பயந்ததனால்
பாளையத்தில் எதிரிகள் ஏராளமாக இருந்ததனால்
தன் கண்ணால் ஆண்டவரைக் கண்டதனால்
தனது கனவையும் பொருளையும் கூறக் கேட்டதனால்
தனது தந்தையை கண்டதனால்

2. கிதியோன் தான் அழைத்துச் சென்ற 300 பேரையும் என்ன செய்தார்?

ஐந்து பிரிவாக பிரித்தார்
ஏழு பிரிவாக பிரித்தார்
நான்கு பிரிவாக பிரித்தார்
மூன்று பிரிவாக பிரித்தார்
பத்துப் பிரிவாகப் பிரித்தார்

3. கிதியோன் பிரித்து ஒழுங்கு செய்தவர்களின் கைகளில் என்ன கொடுக்கப்பட்டது ?

எக்காளங்கள்
காலி பானைகள்
பானைக்குள் வைக்க நெருப்பு பந்தங்கள்
கத்திகள்
பெட்டிகள்

4. கிதியோன் தான் செய்வது போல் எதனைச் செய்யச் சொன்னார்?

நான் பாளையத்தின் எல்லை காவல் வரை செல்லும்போது அவர்கள் தொடர்ந்து வரவேண்டும்
எக்காளம் ஊதிக்கொண்டு வரவேண்டும்
ஆண்டவருக்காக கிதியோருக்காக என்று சொல்ல வேண்டும்
நிலத்திலேயே படுக்க வேண்டும்
சமைக்க வேண்டும்

5. கிதியோனின் பட்டாளமான மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதிய போது அவர்கள் என்ன செய்தனர்?

தங்கள் கைகளில் இருந்த பானைகளை உடைத்தனர்
இடக்கையில் நெருப்பு பந்தங்கள் ஏந்தினர்
வலக்கையில் எக்காளங்கள் எந்தியிருந்தனர்.
ஆண்டவருக்காக கிதியோருக்காக ஒரு வாள் என முழங்கினர்
பாளையத்தை சுற்றி ஒவ்வொருவரும் தன் இடத்தில் நின்றனர்

6. மூன்று பிரிவினரும் எக்காளம் ஊதிய போது நிகழ்ந்த நிகழ்வு என்ன?

பாளையத்தில் இருந்த அனைவரும் ஓட்டம் எடுத்தனர்
ஒவ்வொருவரும் மற்றவர் மீது வாள் வீசினர்
பெத்சிற் வரையும் தப்பியோடினர்
ஆபல் மெகோலா எல்லை வரை தப்பியோடினர்
செரேராவை நோக்கித் தப்பி ஓடினர்

7. கிதியோன் மலையில் உள்ள அனைவருக்கும் தூதரை அனுப்பி என்ன கூறினார்?

மிதியானியரை எதிர்க்க கீழே இறங்கி வாருங்கள்
பெத்பரா வரை உள்ள நீர் ஊற்றுக்களையும் ஜோர் தானையும் கைப்பற்றுங்கள்
நீங்கள் இங்கே வரவேண்டாம் அங்கேயே தங்கியிருங்கள்
எங்களுக்காக சமையல் செய்யுங்கள்
நாங்கள் வெற்றி பெற்றோம் என விழாக் கொண்டாடுங்கள்


8. எப்ராயீம் மக்கள் என்ன செய்தனர்?

அவர்கள் பெத்பராவரை உள்ள நீரூற்றுகளை கைப்பற்றினர்
ஜோர்தானைக் கைப்பற்றினர்
ஒரேபு என்ற மிதியானியத் தலைவர்களைச் சிறைப் பிடித்தனர்
ஒரேபை ஒரேபாவாவில் உள்ள பாறைமேல் மேல் கொன்றனர்
செயேபைச் செயேபில் உள்ள திராட்சை ஆலையில் கொன்றனர்

9. எப்ராயீம் மக்கள் கிதியோனிடம் என்ன கூறினர்?

என்ன எங்களுக்கு இப்படி செய்து விட்டீர்
நீர் மிதியானியருடன் போரிடச் சென்றபோது எங்களைக் கூப்பிடவில்லை
எங்கள் தேர்கள் பழுதடைந்த விட்டன
நாட்கள் எங்கள் மந்தைகளை மேய்க்க வேண்டும்
எங்கள் பிள்ளைகளை கொலை களத்திற்கு அனுப்ப மாட்டோம்

10. கிதியோன் சுக்கோத்து மக்களிடம் கூறியது என்ன?

என்பின்னே வரும் இவர்களுக்கு உணவு கொடுங்கள்
இவர்கள் களைத்து இருக்கின்றார்கள்
நான் செபாகு சல்முன்னா என்பவர்களைத் துரத்திச் செல்கின்றேன்
நாளை நான் வந்து உணவருந்துவேன்
என் பின்வரும் இவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டாம்

11. செபாகும் சல்முன்னாவும் கற்கோரில் இருந்தபோது அங்குள்ள நிலை என்ன?

அவர்களோடு 15,000 பேர் கொண்ட படை இருந்தது
அவர்கள் அனைவரும் கிழக்கே வாழும் மக்களின் படைகளில் இருந்து எஞ்சி இருந்தவர்கள்
ஏற்கனவே மடிந்த போர் வீரர்கள் தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரம்
கிதியோன் கூடாரங்களின் பாதை வழியாகச் சென்று எதிர்பாராத நேரத்தில் அவர்களைத் தாக்கினர்
கதியோன் மிதியாயரின் அரசர்களான செவ்வாகையும் சல்மு நாவையும் பிடித்து படை முழுவதையும் சிதறடித்தார்

12. எரேசு மேட்டின் வழியாகத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் யார்?

மிதியானின் தலைவர்கள்
செபாகும்
சல்முன்னா
யோவாசு
யோவாசின் மகன் கிதியோன்

13. சுக்க்கோத்தின் தலைவர்களும் பெரியவர்களுமாக 77 பேரின் பெயர்களை எழுதிக் கொடுத்தவர் யார்?

மிதியான்
கிதியோன்
சுக்கோசைச் சேர்ந்த ஒர் இளைஞன்
யோவாசு
சல்முன்னா

14. செபாகைக் கொன்றவர்கள் யார்?

யோவாசு
சுக்கோத்தைச் சேர்ந்த இளைஞன்
எத்தோர்
கிதியோன்
மிதியான்

15. இஸ்ரேல் மக்கள் கிதியோரிடம் தங்களை ஆளும்படி கேட்டதற்கு கிதியோன் அளித்த பதில் என்ன?

நான் உங்களை ஆட்சி செய்வேன்
மிதியானியர்
என் மகன் உங்களை ஆளுவான்
ஆண்டவர் உங்களை ஆளுவார்
சல்முன்னா உங்களை ஆளுவார்