மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 103
வேதாகமப் பகுதி : நீதி தலைவர்கள் 6:8 முதல் 23 வரை
முடிவுத் திகதி : 2022-07-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இஸ்ரேல் மக்கள் கூக்குரல் இட்டபோது ஆண்டவர் செய்த செயல் என்ன?

அவர்களுக்கு உணவளித்தார்
மக்களை பலுகச் செய்தார்
அவர்களை விரட்டி விட்டார்
ஓர் இறைவாக்கினரை அனுப்பினார்
ஒரு நீதி தலைவரை ஏற்படுத்தினார்

2. ஆண்டவரின் தூதர் ஒபிராவில் எங்கே வந்து அமர்ந்தார்?

விண்ணில்
யோசுவாவுக்கு சொந்தமான நிலத்தில்
அபியேசர் குடும்பத்திற்கு சொந்தமான மரத்தில்
கருவாலி மரத்தடியில்
அமோனியரின் தெய்வங்களுக்கருகில் அருகில்

3. இறைவாக்கினரை இஸ்ரேலிடம் அனுப்பி ஆண்டவர் கூறியது என்ன?

உங்களை எகிப்திலிருந்து வெளிக்கொணர்ந்தேன்
நீங்கள் வாழும் நாட்டில் உள்ள அமோனியரின் தெய்வங்களை வணங்க வேண்டாம்
நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்
நான் உங்களை நேசிக்கும் அனைவரும் உங்களை நசுக்கியோர் அனைவரின் கைகளில் நின்றும் உங்களை மீட்டேன்
அவர்களின் நிலத்தை உங்களுக்குக் கொடுத்தேன்

4. ஆண்டவரின் குரலை கேட்காமல் அவர்கள் என்ன செய்தார்கள்?

சாப்பிடாமல் பட்டினி கிடந்தார்கள்
அமோனியரின் தெய்வங்களை வணங்கினார்கள்
ஆண்டவர் குரல் கேட்டு ஒழிந்து கொண்டார்கள்
ஆண்டவரை வரை நேராக வருமாறு கேட்டார்கள்
அமோனியரின் தெய்வங்களை உண்மையானது என நம்பினார்கள்

5. கிதியோன் திராட்சை ஏன் ஆலையில் கதிர்களை அடித்துக் கொண்டிருந்தார்?

மிதியானியரிடமிருந்து கோதுமையை மறைப்பதற்காக
ஆண்டவர் காணாமல் இருப்பதற்காக
மிதியானியருக்கு கோதுமையை ரகசியமாக கொடுப்பதற்காக
திராட்சை ஆலை பெரியது என்பதற்காக
திராட்சை ஆலை பழுதடைந்த காரணத்தால்

6. வானதூதர் கிதியோனுக்கு என்ன கூறினார்?

வெளியே வா எனக் கூறினார்
மிதி ஆகியோருக்கு பயந்து ஓடி விடு என்று கூறினார்
வலிமைமிக்க வீரனே எனக் கூறினார்
ஆண்டவர் உன்னோடு இருக்கிறார் என கூறினார்
வாள்களும் ஆட்களும் உனக்குத் தருவேன் எனக் கூறினார்

7. ஆண்டவர் கிதியோனுக்கு என்ன கூறினார்?

உன்னுடைய இதே ஆற்றலுடன் செய்வாய்
இஸ்ரேலியரை நீ விடுவிப்பாய்
உன்னை அனுப்புவது நான் அல்லவா
குதிரைகள் எல்லாம் இறந்து விட்டன
உன்னால் விதியை வெல்ல முடியாது


8. ஆண்டவர் எம்மோடு இருக்கிறார் என்றால் இச் சம்பவங்கள் ஏன் நிகழ்கின்றன என, ஏக்கமுற்றோர் கூறியது என்ன?

ஆண்டவர் எம்மை எகிப்தில் இருந்து வெளியே கொண்டு வந்தார்
எங்கள் தந்தையர் விதைந்துரைத்த செயல்கள் எல்லாம் எங்கே?
இப்போது ஏன் ஆண்டவர் எம்மைக் கைவிட்டுவிட்டார்?
எம்மை மிதியானியரின் கைகளில் ஒப்படைத்து விட்டாரே
ஆண்டவரே நீர் வேண்டாம்

9. கிதியோன் ஆண்டவரிடம் கூறியது என்ன?

எவ்வழியில் இஸ்ரேலியரை நான் விடுவிப்பேன்
மனோசேயிலே நலிவுற்ற குடும்பம் என்னுடையது
என் தந்தை வீட்டிலேயே நான் சிறியவன்
எனக்கு வாள் வீசத் தெரியாது
என்னால் மிதியானியரோடு போரிட முடியாது

10. ஆண்டவர் கிதியோனிடம் கூறியது என்ன?

உன்னால் மிதியானியரை வெற்றி கொள்ள முடியாது
மிதியானியரிடம் சரணடைவதே உனக்கு மேலானது
மனோசையிலே நீ நலிவுற்று இருக்கிறாய்
நான் உன்னோடு இருப்பேன்
நீ ஒரு தனி ஆளாக மிதியானியரை வெல்வாய்

11. கடவுளின் பார்வையில் எனக்குத் தயவு கிடைத்துள்ளது எனக் கூறியவர் யார்?

மிதியானியரின் தலைவர்
கிதியோன்
அமோனியரின் தலைவர்
ஆண்டவரின் தூதர்
மனோசே

12. கிதியோன் ஆண்டவனுக்கு படைத்த படையல் என்ன?

ஆட்டுக்குட்டி
ரொட்டி
இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவால் செய்யப்பட்ட புளியாத அப்பம்
இறைச்சி குழம்பு
சோறு

13. கிதியோன் அவருக்கு படைத்த படையலை எங்கே வைத்தார்?

வானத்தில்
மரத்திலே
பாறை மீது
நீரின் மீது
மாடி மீது

14. கிதியோன் ஆண்டவரின் தூதர் உண்மையானவர் என எவ்வாறு அறிந்துகொண்டார்?

ஆண்டவரின் தூதர் வானத்தில் காட்சி அளித்தபோது
ஆண்டவரின் தூதர் அவருக்கு தெரியாமல் மறைந்து நின்ற போது
பாறையில் இருந்து நெருப்பு எழும்பியபோது
இறைச்சியையும் அப்பத்தையும் எரித்தபோது
ஆண்டவரின் தூதர் தனது படையலைத் தொட்டபோது

15. ஆண்டவரின் தூதரை கிதியோன் நேருக்கு நேராகப் பார்த்தபோது ஆண்டவர் கிதியொனிடம் என்ன கூறினார்?

உனக்கு நலமே ஆகட்டும்.
நீ அஞ்சவேண்டாம்
நீ சாக மாட்டாய்
உனக்கு நான் உணவளிப்பேன்
பிள்ளைகளை நான் ஏற்றுக் கொள்வேன்