மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 101
வேதாகமப் பகுதி : நீதித்தலைவர்கள் நூல் 4 அதிகாரம்
முடிவுத் திகதி : 2022-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. எப்போது இஸ்ரேல் மக்கள் ஆண்டவரின் பார்வையில் தீயது என பட்டதை மீண்டும் செய்தனர்?

மோசே ஆண்டவரிடம் உரையாடிவிட்டு மீண்டும் வரத் தாமதம் ஆகியது அதனால்
ஆரோன் பொன் கன்றுக்குட்டி செய்து கொடுத்ததால்
ஏகூது இறந்த பின்னர்
பேரீச்ச நகரைக் கைப்பற்றியது அதனால்
அனாத்தின் மகன் சம்கார் தலைவராக இருந்தமையால்

2. ஆட்சோரை ஆண்ட மன்னனின் பெயர் என்ன?

அனாத்
மோவாபு
யாபின்
எக்லோன்
சம்கார்

3. இஸ்ரவேலுக்கு நீதி தலைவியாக இருந்தவர் யார்?

யாவின்
சீசரா
பாரக்கு
தெபோரா
அலமேக்கு

4. இராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையில் இருந்த பேரிச்சை மரத்தின் பெயர் என்ன?

நப்தலிமரம்
கெதேசு மரம்
தெபோராப் பேரீச்சை
வேப்பம் மரம்
எப்ராயீம் பேரீச்சை

5. "நீ என்னுடன் வந்தால் நான் செல்வேன்" யார் யாருக்கு கூறியது?

அனாத்தின் மகன் சம்கார் ஏகூத்துக்கு கூறியது
யாமீனுக்கு ஆண்டவர் கூறியது
தெபோரா பாராக்குக் கூறியது
பாராக் தெபொராவுக்குக் கூறியது
சீசரா

6. எபேர் கூடாரம் அமைத்த இடம் எது?

தாபோர் மலை
சானானிமில் இருந்த கருவாலி மரத்திற்கு அருகில்
ரித்சாயீம் என்னும் இடத்தில்
பேரீச்ச நகரில்
எப்ராயீம் மலையில்

7. யாபினின் படைத்தலைவர் வாழ்ந்த இடம் எது?

அரோசத் கோயிமில் என்னும் இடத்தில்
எக்லொனில்
ரித்சாயீம் என்னும் இடத்தில்
ஒத்னியெல் வாழ்ந்த இல்லத்தில்
கில்காலுக்கு அருகில்

8. தெபோராவின் கணவர் பெயர் என்ன?

ஆனாத்
சம்கார்
இலப்பிதோத்
பாராக்
மோயீசன் மகன்

9. செபுலோனும் நப்தலியும் ஒன்று கூடிய இடம் எது?

கருவாலி மரத்திற்கு அருகில்
பேரிச்சை மரத்தடியில் பேரீச்சை மரத்தடியில்
கெதேஸ் என்னும் இடத்தில்
எக்லொனில்
செயீரா என்ற இடத்தில்

10. இஸ்ரவேல் மக்கள் யாரிடம் தீர்ப்புப் பெறுவதற்காகச் செல்வார்கள்?

பெத்தேலுக்கு
இலப்பிதோத்திடம்
தெபோராவிடம்
பாராக்கிடம்
அபினொவாமிடம்

11. சீசாராவுக்கு அறிவிக்கப்பட்ட செய்தி என்ன?

எப்பேர்ஒபாவின் மக்களாகிய கேனியரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்த செய்தி
பத்தாயிரம்பேர் அணிவகுத்து சென்ற செய்தி
பாராக்கு தாபோர் மலை மீது ஏறி விட்ட செய்தி
கருவாலி மரத்தருகே கூடாரம் அமைக்கப்பட்ட செய்தி
எந்த செய்தியும் அறிவிக்கப்படவில்லை

12. சீசராவிடம் இருந்த இரும்புத் தேர்களின் தொகை எவ்வளவு?

ஆயிரம்
தொளாயிரம்
ஒன்பதினாயிரம்
பத்தாயியிரம்
மூவாயிரம்

13. சீசரா தன் தேரில் இருந்து இறங்கி தப்பி ஓடியது ஏன்?

அவனது தேர் சிதறடிக்கப்பட்டது அதனால்
ஆண்டவரால் சீசரா படை முழுவதும் பாராககின் முன்னால் சிதறடிக்கப்பட்து அதனால்
சீசரா தோல்வி அடைந்ததால்
சரி பாராக் வெற்றி பெற்றதனால்
பாராக்கைத் துரத்திச் சென்து அதனால்

14. சீசராவைக் கொலை செய்தது யார்?

பாராக்கு
யாவில்
எபேரின் மனைவி
யாபின்
மோசேயின் மாமனார்

15. "எழுந்திரும் இந்நாளில் ஆண்டவர் சீசராவை எம்மிடம் ஒப்படைப்பார்". யாரால் யாருக்கு கூறப்பட்டது?

யாபின்னால் எபேரின் மனைவிக்கு கூறப்பட்டது
தெபோராவால் பராக்கிடம் கூறப்பட்டது
யாவேலினால் சீசராவுக்குக் கூறப்பட்டது
சீசாரா இறந்து கிடந்த போது யாவேல் பராக்கிடம் கூறியது
கெதேசில் ஒன்று கூடியபோது அபினோவாமினால் பாராக்குக்கு கூறப்பட்டது