1. இஸ்ராயேல் மக்கள் யார் நடுவில் வாழ்ந்தனர்?
2. ஆண்டவரின் பார்வையில் இஸ்ரேலியர் செய்த தவறு என்ன?
3. இஸ்ரேலியர் ஆண்டவரை நோக்கி கூக்குரல் இட்டபோது ஆண்டவர் அவர்களுக்கு விடுதலை அளிக்க ஒருவரை எழச் செய்தார் அவர் யார்?
4. கூசான் ரித்சாயிமை வெற்றி கொள்வதற்கு காரணமாய் அமைந்தது எது?
5. ஆண்டவர் மோவாபின் மன்னன் எக்லோனை வலிமைப்படுத்கியதன் காரணம் என்ன?
6. எக்லோனுக்கு இஸ்ராயேல் மக்கள் எத்தனை ஆண்டுகள் அடிமைப்பட்டு இருந்தனர்?
7. விவிலியத்தில் நீதித்தலைவர்கள் பகுதியில் காட்டப்படும் இடக்கை மனிதரின் பெயர் என்ன?
8. எக்லொனுக்குக் கப்பம் கட்டுமாறு அனுப்பிவைக்கப்பட்ட மனிதர் யார்?
9. மன்னன் எக்லோன் ”அமைதி” எனக் கூறக் காரணம் என்ன?
10. எக்லோன் மன்னனின் மேல் அறையின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தன காரணம் என்ன?
11. எக்லோன் மன்னனின் வேலையாட்கள் சாவியை எடுத்து கதவைத் திறந்தார்கள் ஏன்?
12. எக்லோன் மன்னன் தரையில் விழுந்து கிடந்தான் நடைபெற்றது என்ன?
13. ஏகூது தப்பியோடிய இடத்திற்குப் பெயர் என்ன?
14. இஸ்ராயேல் மக்கள் மலை நாட்டிலிருந்து ஏன் கீழே இறங்கினர்?
15. ”என் பின்னால் வாருங்கள் ஆண்டவர் மோவாபியராகிய உங்கள் எதிரிகளை உங்களிடம் ஒப்படைத்துள்ளார்” இவ்வாறு கூறியது யார்?