மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 120
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர்கள் 19-13,20 & 20-1,28
முடிவுத் திகதி : 2023-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)
திருவிவிலியம் (பொது மொழிபெயர்ப்பு) நூலைப் பயன்படுத்துங்கள்.1. கிபையாவுக்கு வந்து தங்கி இருந்தவர் யார்?

ஒரு முதியவர்
எப்ராயீம் மலை நாட்டை சார்ந்தவர்
வேலை முடித்துவிட்டு வந்தவர்
வயலில் இருந்து வந்தவர்
சூரிய குலத்தை சேர்ந்தவர்

2. நகரின் சதுக்கத்தில் இருந்தவரரிடம் முதியவர் என்ன கேட்டார்? அதற்கு பதில் என்ன கிடைத்தது?

எங்கே போகிறாய்
எங்கிருந்து வருகிறாய்
நாங்கள் எப்ராயீம் மலைநாட்டு எல்லை புறத்திற்கு செல்லுகின்றோம்
நான் அப்பகுதியை சேர்ந்தவன்
என் வீட்டிற்கு திரும்பிச் செல்கின்றேன்

3. சத்திரத்தில் தங்கி இருந்த அவர்களுக்கு நிகழ்ந்தது என்ன?

எவரும் தங்கள் வீட்டுக்குள் வருமாறு அவர்களை அழைக்கவில்லை
கழுதைகளுக்கு வேண்டிய வைக்கோலும் தீவனமும் அளித்தார்
பெண்களுக்கு அப்பமும் திராட்சை இரசமும்எங்களிடம் இருக்கின்றன
நாங்கள் சூரிய வணக்கம் செய்ய வேண்டும்
எங்கள் வேலை ஆட்களுக்கு வேண்டிய உணவு எங்களிடம் இருக்கின்றது

4. தங்கி இருந்த அவர்களிடம் முதியவர் கூறியது என்ன?

இரவில் சதுக்கத்தில் தங்காதே
உனக்கு நலம் உண்டாக
உன் தேவைகள் அனைத்தையும் நான் கவனித்துக் கொள்கிறேன்
உனக்கு பணம் தருகிறேன்
உன் கழுதை எல்லாவற்றையும்என்னிடம் விற்று விடு

5. உடன்படிக்கைப் பேழை முன் நின்று பினகாசி கேட்டது என்ன? 20-28 ஆண்டவர் கூறியது என்ன ?

பென்ஐமின் மக்கள் என் சகோதரர்கள்
அவர்களுடன் போரிட நான் மீண்டும் செல்ல வேண்டாமா? எனக் கேட்டான்
ஆண்டவர் செல்லுங்கள் எனச் சொன்னார்
நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்படைப்பேன் என்றார்
நான் அவர்களுடன் போரிட மாட்டேன் என பினகாசு கூறினார்

6. இஸ்ராயேல் மக்கள் கடவுளிடம் கேட்டது என்ன? ஆண்டவர் சொன்னது என்ன?

யார் எங்களுக்காக முதலில் பெஞ்சமின் மக்களுடன் போருக்கு செல்வது
முதலில் யூதா செல்லட்டும்
பின் கிபயா ஆட்கள் செல்லட்டும்
நான் உங்களோடு வருகிறேன்
நான் உங்களை ஆசீர்வதிக்க மாட்டேன்

7. இஸ்ராயேல் மக்கள் காலையில் எழுந்து என்ன செய்தார்கள்?

கிபாயாவுக்கு எதிரில் பாளையம் இறங்கினார்கள்
இஸ்ராயேல் ஆட்கள் பென்மின் மக்களுடன் போர் புரியச் சென்றார்கள்
கிபயாவை நோக்கி அணிவகுத்து நின்றார்கள்
பெஞ்சமின் மக்கள் கிபையாவிலிருந்து வெளியே வந்தார்கள்
அந்நாளில் 20,000 இஸ்ராயேல் மக்களை வெட்டி வீழ்த்தினார்கள்


8. இஸ்ராயேல் மக்கள் போருக்கு தயாராவதற்கு இடம்பெற்ற நிகழ்வுகள் என்ன?

தாண் பெயேர் செபா கிலை யாது மக்கள் ஒரே கூட்டமைப்பாக ஒன்று கூடினர்
ஆண்டவர் திருமுன் மிஸ்பாவில் ஒன்று கூடினர்
இஸ்ராயேலின் அனைத்து குலங்களின் தலைவர்களும் கடவுளின் மக்களது சபையாக வந்து நின்றனர்
வாள்ஏந்திய போர் வீரர்கள் நான்கு லட்சம் பேர்
சிலர் துப்பாக்கி ஏந்தி நின்றனர்

9. இஸ்ராயேல் மக்கள் தங்களைத் தேற்றிக்கொண்டு என்ன செய்தனர்?

ஆண்டவர் திருமுன் மாலை வரை அழுதனர்
முதல் கூடிய அதே இடத்தில் மீண்டும் போருக்கு அணிவகுத்து நின்றனர்
மக்கள் தம் சகோதரர்களாகிய பெஞ்சமின் மக்களுடன் மீண்டும் போருக்குச் செல்லலாமா என ஆண்டவரைக் கேட்டனர்?
ஆண்டவர் அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள் என்றார்
பெஞ்சமின் மக்களுக்கு எதிராக போருக்கு சென்றால் எனது ஆசீர் இருக்காது எனச் சொன்னார்

10. எல்லா மக்களும் ஒரே மனத்தவராய் கூறியது என்ன?

நம்மில் எவரும் திரும்பி செல்ல மாட்டார்கள்
நாம் கிபையாவுக்கு செய்யப் போவது இதுதான்
இஸ்ராயேலில் எல்லா குலங்களிலும் இருந்து நூற்றுக்கு 10 பேரை தேர்ந்தெடுங்கள்
கிபையாவின் ஆட்கள் செய்த செயலுக்கு பழிவாங்கச் செல்பவர்களுக்கு உணவுப்பொருட்கள் கொண்டு வரட்டும்
நாம் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வோம்


11. இரண்டாம் நாள் போரில் என்ன நிகழ்ந்தது?

பெஞ்சமின் மக்களும் இஸ்ரவேலருக்கு எதிராக கிபையாவிலிருந்து புறப்பட்டு வந்தனர்
மக்களை நெருங்கினர்
பெஞ்சமின் மக்கள் இஸ்ராயேல் மக்களில் 18,000 பேரை வெட்டி கொன்றார்கள்
வெட்டப்பட்ட அனைவரும் போர் வீரர்கள்
வெட்டப்பட்ட போர் வீரர்களை தீயினால் எரித்தார்கள்


12. பதினெண்ணயிரம் போர் வீரர்களை வெட்டி வீழ்த்திய போது இஸ்ரேல் மக்கள் என்ன செய்தார்கள்?

இஸ்ரேல் மக்கள் சிரித்தனர்
இஸ்ரயேல் மக்கள் அனைவரும் பெத்தேலுக்கு வந்து அழுதனர்
அங்கே ஆண்டவர் திருமுன் அமர்ந்தனர்
அங்கு ஆண்டவர் திருமுன் நோன்பு இருந்தனர்
அங்கே அவர்கள் தூங்கினார்கள்


13. பெத்தேலுக்கு வந்த இஸ்ரேலில் மக்கள் உண்ணா நோன்பு பிருந்து என்ன செய்தார்கள்?

அவர்கள் எரிபலி செலுத்தினார்கள்
நல்லுறவு பலி செலுத்தினார்கள்
ஆண்டவரிடம் அறிவுரை கேட்டார்கள்
வாகனத்திலேயே பெஞ்சமின் மக்களிடம் சென்றார்கள்
குதிரைகள் அவர்களை பேட்டி செல்ல மறுத்துவிட்டன


14. அவர்கள் ஆண்டவரிடம் என்ன அறிவுரை கேட்டார்கள்?

ஏனெனில் கடவுளின் பேழைஅங்கிருந்தது
அப் பேழை உடன்படிக்கையின் பேழை ஆகும்
பேழையைத் திறக்கலாமா என கேட்டார்கள்
பேழைக்குள் இருந்த கோலை எடுத்துச் செல்ல யோசித்தார்கள்
பேழை அறிவுரை சொல்லவில்லை


15. பினகாசு யார்?

ஆரோனின் பேரன்
ஆரோனின் புதல்வர் பிலயாசரின் மகன்
மோயிசனின் வளர்ப்பு மகன்
இஸ்ரவேலரின் தூதுவர்
வேலைக்கு இருந்தவர்


நீங்கள் கீழே குறிப்பிடும் முகவரிக்கு சான்றிதழ் அனுப்பிவைக்கப்படும்

First Name:
Last Name:
E-mail:
Address :

City Code :
City :
Country: