ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

விடை தேடுவோம்……
ஏன் டிசம்பர் 25?திருவருகைக்காலத்து ஆசீரும் அருளும் உங்கள் குடும்பங்களில் சமூகங்களில் தங்கட்டும் புதுமகிழ்ச்சியை தரட்டும். நம் மனதில் நம் மத்தியில் இக்காலத்தில் எழும் கேள்விகளை வெளிப்படுத்தி விடைதேடுவோம்.

முதலில் கொண்டாடப்பட்டது உயிர்ப்பு விழாவா? கிறிஸ்து பிறப்பு விழாவா? ஏன்?

முதலில் கொண்டாடப்பட்டது உயிர்ப்பு விழாவே ஆகும். இயேசு சிலுவைப்பாடுகளில் இறந்து உயிர்த்து விண்ணகம்சென்றபிறகு நான் மீண்டும் வருவேன் உலகம் முடியும் வரை உங்களோடு இருப்பேன் உங்களுக்காக துணையாளரை அனுப்புவேன் என்ற வாக்குறுதிகளை தொடக்கதிருச்சபையினர் ஆவலோடு எதிர்பார்த்ததையும் தூய ஆவியின் (பெந்தகோஸ்தே விழா) வருகை அதன் பிறகு ஏற்பட்ட மாறுதல் இவைகளை திருத்தூதர் பணிகள் நூலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். தொடர்ந்து அவர்கள் ஒன்றுகூடி ஒரே மனதாக ஒரே எண்ணத்தோடு சமமாக சகோதரமாக செய்தது கொண்;டாடியது இறைவார்த்தை பகிர்வும் நற்கருணை பகிர்வும். அதாவது ஒரு குட்டி சிறிய உயிர்ப்பு விழாவை ஈஸ்டரை ஒவ்வொரு சனிஇரவும்(வாரத்தின் முதல் நாள்) இயேசுவின் உயிர்பபை கொண்டாடி எங்கள் இறைவன் உயிருள்ளவர் வாழ்கின்றவர் சாட்சி பகர்ந்தனர்.

உரோமையர்கள் பாலஸ்தீன பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை அதிகப்படுத்தியபிறகு கிறிஸ்தவர்களை தடுத்தநிறுத்த எவ்வளவோ முயற்சிஎடுத்தனர். யூதர்கள்- யூத கிறிஸ்தவர்கள்- புறஇனத்தவர்கள் எனபிரிப்பது மற்றும் துன்புறுத்தி கொலை செய்வது (விலங்குகளுக்கு இரையாக – எரியும் நெருப்பில் – சிலுவை மரணம்) நற்கருணை கொண்டாட்டத்தை தடைசெய்வது. திருச்சபையின் ஊற்றும் துவக்கமும் உயிருமாகிய நற்கருணை கொண்டாட்டம் மறைமுகமாக தொடாந்தது எத்தனையோ புனிதர்கள் நற்கருணை இயேசுவாக உடல் உடைக்கப்பட்டு இரத்தம் சிந்தி இயேசுவோடு ஒன்றானோம் என்ற அவர்கள் வாழ்க்கை புதியஉள்ளங்களை தூண்டியது. ஏன் முதல் உலகப்போர் இரண்டாம் உலகப்போர் மற்றும் பிரான்சு புரட்சி தருணங்களில் மறைமுக நற்கருணை கொண்டாட்டங்கள் ஆற்றலை சக்தியை வெற்றியை பெற்றுத்தந்தன. யாருடைய பிறந்தநாளும் கொண்டாடும் பழக்கம் எண்ணம் அன்றுவரை தோன்றியதில்லை இருந்ததில்லை. உயிர்ப்பு விழாதான் முதலிலிருந்தே கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துவராக மாறிய முதல் உரோமை ஆட்சியாளர் கான்ஸ்டன்டைன் தான் கிறிஸ்துவின் பிறப்பும் புனிதம் முக்கியம் என உணர்த்த டிசம்பர் 25-ம்தேதி கி.பி 336 ல் துவங்கினார் சில ஆண்டுகள் கழித்து திருத்தந்தை முதலாம் ஜீலியஸ் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து டிசம்பர் 25 கிறிஸ்துபிறப்பு விழாவாகியது.

ஏன் டிசம்பர் 25ம் தேதி? அன்று கணணி இல்லை யாரும் எழுதியோ குறித்தோ வைக்கவில்லை மாறாக இயேசு பிறந்தபொழுது எதிர்ப்பு தான்இருந்தது. ஆனால் மரியன்னைக்கு வானதூதர் அறிவித்தது மார்ச் 25ம்தேதி உறுதியாக நினைவுகூறப்படுகிறது எனவே அன்றிலிருந்து ஒன்பதாவது மாதம் டிசம்பர் 25ம்தேதி ஆகும். மற்றும் உரோமையில் குளிர்கால திருவிழாவாக டிசம்பர் பொது விடுமுறையோடு சத்துர்னாலியா என்ற விழா கொண்டாடினர். இது 17ம்தேதி முதல் 23ம்தேதி வரை அல்லது சில இடங்களில் 21ம்தேதியிலிருந்து 22ம்தேதிவரை கொண்டாடப்பட்டது. இந்நாட்கள் சூரிய உதயமோ மறைதலோ இல்லா மிக குறுதிய இருள்நிறைந்த நாட்களாகும் இந்த இருளில் பலவித இன்பவிழாவிற்குபிறகு 25ம்தேதி சூரிய உதயத்தை காண்பதை இருளை வெற்றிகொண்ட தங்கள் சூரிய கடவுள் அதுவே குளிர்காலம் முடிந்து இளவேனிற்கால தொடக்கம் என பல்வேறு பெயர்களால் சூரியகடவுளை இதுதான் வெற்றிகொள்ள முடியா உயர்ந்த சக்தி எனக்கொண்டாடினர். கிறிஸ்தவர்கள் இயேசுவே இறைமகன் அவரே சக்தியே உருவான இருளை அழித்த சூரியன் என கிறிஸ்துபிறப்பு விழாவை கொண்டாட துவங்கினர்.

கிறிஸ்துமஸ்:கிறிஸ்தவர்கள் ஒன்றாக கூடி செபித்து நற்கருணை பகிர்வோடு கொண்டாடுவது நற்கருணை மிசா (மாஸ் கூட்டம் ஒன்றுசேர்வது) என்பது கிறஸ்துவை அன்றுமையமாக கொண்டு ஒன்றுசேர்வதால் கிறிஸ்து-மாஸ் என்பது கிறிஸ்மஸ் ஆகியது.

சக்தியும் ஆற்றலும் தாங்கிய கிறிஸ்துவின் பிறப்பு அனைத்து தீமையின் சக்திகளை தொடர்ந்து வெற்றி கொண்டு மனித சகோதர சமத்துவ உறவை எந்நாளும் புதுப்பித்து புதியவைகாளட்டும்.
[2014-12-13 01:52:41]


எழுத்துருவாக்கம்:

Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US