ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

தாவீதின் திறவுகோலே!“இஸ்ராயேல் வீட்டின் செங்கோலே, இருளில் அமர்ந்திருப்போரை விடுவிக்க வந்தரருளும்.”
அகிலத்தை அரவணைத்து காத்திட இம்மண்ணிற்கு உன் அரசாட்சி என்னும் திறவுகோல்!

ஆதிக்க ஆடம்பர ஆசைகளில் மடிந்திடாதிருக்க உன்நிபந்தனையற்ற அன்பு என்னும் திறவுகோல்!

இம்மையிலும், மறுமையிலும் உன்னை அறிந்திட எமக்கு நீதாகம் என்னும் திறவுகோல்!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய உன்வகுகை இன்னும் எமக்கு பிறப்பு என்னும் திறவுகோல்!

எதிலும் எல்லோருக்கும் நம்பிக்கை கொடுத்திட உன் உடனிருப்பு என்னும் திறவுகோல்!

ஏராளமானோர் உன்னில் இளைப்பாறிட உன்திருஇதயம் அடைக்கலம் என்னும் திறவுகோல்!

ஐயாயிரம் பேருக்கு உணவு அளித்த உன் தாயன்பு ஆன்மநலம் குன்றியவருக்கு நீகுணமளிப்பு என்னும் திறவுகோல்!

ஒப்புயர்வற்ற இவ்வுலகில் அகதிகளாகத் திகழ்பவர்களுக்கு உன் ஆறுதல் மீட்பு என்னும் திறவுகோல்!
ஓர் உலகில் வாழ்ந்தாலும், போரினால் பிரிந்து வாழ்பவருக்கு அமைதி, சமாதானம் என்னும் திறவுகோல்!

ஔவைப் போன்ற அன்னையர்களை இறுதிவரை உடனிருந்து பாதுகாத்திட மனிதநேயம் என்னும் திறவுகோல்!

செபம்:-
வாழ்வும் வழியுமான எம் இறைவா! இவ்வுலகில் பலவாயில்கள், திறவுகோல்கள் இருப்பினும் நீர்மட்டுமே அதற்கான பாதையை காண்பிக்கிறீர் என அறிந்திடும் தெய்வீக ஞானத்தைக் கொடுத்தருளும். உமது திட்டத்தை எம்மில் நிறைவேற்றிடயாம் உம்மோடு இணைந்து ஒத்துழைக்க வந்தருளும் இறைவா வந்தருளும்!
[2014-12-30 06:00:00]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி