ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

ஈசாய் தளிர்“ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து துளிர்விட்ட தளிரே!”
நம்மில் இருக்கும் வேர்களை மற்றும் ஆணி வேர்களை சரி செய்ய, மீண்டும் புதிதாய் தளிர்விட இன்றைய நவநாள் அழைப்புவிடுக்கிறது.

வளர்க்க வேண்டியவை
• உறவை புதுப்பித்தல்
• பிறரின் குரல் கேட்டல்
• நம்பிக்கை பெறுதல், கொடுத்தல்
• பிறரை பாராட்டுதல்
• மகிழ்ச்சியை பகிர்தல்

தகர்க்க வேண்டியவை
• கோபம்,பயம்
• பொறாமை
• சுயநலம்
• பிரிவினை
• ஏமாற்றுதல்

செபம்:-
நன்மை செய்யத்தூண்டும் இறைவா! திருவருகைக்காலத்தில் என்மனநிலை விரும்புகின்ற எண்ணத்திற்கும், செயல்ப்பாட்டிற்கும் பலம்கொடுக்க, பலவீனம் என்னும் ஆணிவேர்களை களையப்பட காலதாமதம் செய்யாமல் எம்மை விடுவிக்க வந்தருள்வாய் இறைவா வந்தருள்வாய்!
[2014-12-30 00:00:00]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி