ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.









ஓ..............ஆதோனாயீ



“வலிமைமிக்க ஆற்றலுடன் எம்மை மீட்க வாரும்!”

ஒரு மறைக்கல்வி பாடச்சாலையில் அருட்சகோதரி கூறியது;
உன்னையே நம்பு, நீ ஏமாற்றம் அடைவாய்……….
உன் நண்பர்களை நம்பு, அவர்கள் இறந்த பிறகு அவர்களை நீ இழந்து விடுவாய்………..
பணத்தை நம்பு, உன்னிடமிருந்து யாராவது திருடிச் சென்று விடுவார்கள்…………
புகழை நம்பு, சிலரது தவறான பேச்சுக்கள் அதை அழித்து விடும்…….ஆனால் கடவுளை நம்பு, இவ்வுலகிலும் அடுத்த உலகிலும் நீ ஏமாற்றம் அடையமாட்டாய்.

ஆம் கடவுளை நமது வாழ்வை பாவத்தில் இருந்து மீட்டுக் கொண்டார். அதிலிருந்து நாம் வலிமைமிகு ஆற்றல் பெற்றுள்ளோம் .இதனை எவராலும் அழித்துவிட முடியாது. திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல் என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; திருப்பா(59:17) என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே. திருப்பா(62:7)

இஸ்ரேலின் கடவுள், யாக்கோப்பின் கடவுள், ஈசாக்கின் கடவுள் வலிமைமிக்க ஆற்றலுடன் நம்மில் செயல்படுகிறார். செயலாற்றும் கடவுளாக இருக்கிறார். நாம் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கை, விசுவாசம், இவற்றில் உறுதிக் கொண்டவர்களாக வாழ்வோம். வலிமைகுற்றிய நேரத்தை தவிர்த்து வலிமைமிக்க இறைவனால் எப்போதும் ஆற்றல் உண்டு என்பதை விசுவசிப்போம்.

செபம்:-
வலிமையின் மன்னரே! வாழ்வில் வலிமையின்றி இருக்கும் மானிடருக்கு திடத்தை கொடுக்க உமது திருக்கை வல்லமையோடு எங்களை ஆட்சி செய்ய வந்தருளும் இறைவா வந்தருளும்!
[2014-12-29 19:11:01]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி