ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholic.de என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

விடிவெள்ளியே„முடிவில்லா வாழ்வைப் பரிசாகப் பெறச்செய்வார்”
வாழ்வு என்பது தொடர் பயணம்.
இப் பயணத்தில் பயணம் மேற்கொள்ளும் யாவரும் எதையோ தேடிச்செல்கிறோம். அவற்றில் நிறைவையும் காணதுடிக்கிறோம். மனித வாழ்வு குறிக்கோள்,
இலட்சியம் என எதையாவது மையமாகக் கொண்டு அமைகிறது. இவற்றை அடைய முற்ப்படும் போது நாம் சந்திக்கின்ற திசைகள், பாதைகள் எப்படிப்பட்டவை என்பதை உணர்ந்து இப்பாடல் வழியாக நம்மையே இறைவனிடம் ஒப்புக்கொடுப்போம்.
நீயே எமது வழி நீயே எமது ஒளி
நீயே எமது வாழ்வு இயேசய்யா
நான்கு திசையும் பாதைகள் சந்திக்கின்ற வேளைகள்
நன்மையென்ன தீமையென்ன அறியாத கோலங்கள்
நீயே எங்கள் வழியாவாய் நீதியின் பாதையின் பொருளாவாய்
உனது பாதபதிவுகள் எமது வாழ்வின் தெரிவுகள்
அவற்றில் நாம் நடந்தால் வெற்றியின் கனிகள்

துன்ப துயர நிகழ்வுகள் இருளின் ஆட்சிக்காலங்கள்
தட்டுத்தடுமாறி விழ தகுமான சூழல்கள்
நீயே எங்கள் ஒளியாவாய் நீதியின் பாதையின் சுடராவாய்
உம்மை நாங்கள் போற்றிட பொய்மை எங்கும் போக்கிட
உண்மையின் இறைவா உன தருள்தாரும்

செபம்:-
வழிகாட்டிடும் விடிவெள்ளியே! வாழ்வில் ஏதாவது சுழலின் மூலம் அல்லது வழிகாட்டிகள் இல்லாமல் குறிக்கோள், இலட்சியம் என்பது என்னவென்று தெரியாது இருக்கும் உள்ளத்தினருக்கு விடிவெள்ளியின் ஒளியாய் இருக்க வந்தருளும் இறைவாவந்தருளும்!
[2014-12-30 06:00:00]


எழுத்துருவாக்கம்:

அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG
பிரின் ஆம் கிம்சே
யேர்மனி