மனிதருக்கு வாழ்வுதரும் அரசே!
 “ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். ஆண்டவர் தம்மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்டவர் தம்மக்களுக்கு சமாதானம் அருள்வாராக! ஆண்டவர் தம்மக்களுக்கு ஆசி வழங்குவாராக!” (திருப்பா 29:10-11)
இறைவனின் அரசாட்சி |
மனித அரசாட்சி |
குடிசையில் பிறப்பு எளிய வாழ்வின் அடையாளம், மனிதனின் தேவைகள், உணர்வுகளை எளிதில் புரிந்துக் கொண்டார்.
|
அரண்மனைவாழ்வு பிறருக்காக நேரமின்மை, பிறரை புரிந்து உதவுவது கடினம்.
|
உடையில் எளிமை ஆடம்பரமற்ற அடிப்படைத் தேவைகளில் நிறைவு கொண்டார்.
|
விலையுயர்ந்தபட்டாடை மரியாதையைத் தக்கவைத்துக்கொள்ள ஆடம்பரச்செலவுகள்.
|
நன்றியின் பலன் சிலுவை மனிதனின் மீட்பு என்ற தொடர்பயண எதிர்நோக்கு |
ஆட்சி அதிகாரம்
சுயநலம் மேலோங்கி சிறுமையில் இருப்போரை கண்டுக் கொள்ளாமை.
|
முள்முடி கிரிடம்
இறைத்திட்ட நிறைவின் பலனாய், விண்ணக வாழ்வில் கிடைக்கும் பொன்முடிகள். |
பளப்பளப்புகிரிடம் புகழுக்காய், பதவிக்காய்பலனை எதிர்ப்பார்த்து ஏமாற்றம்.
|
இவ்வாறு நமது வாழ்க்கை முறையில் எவ்வகை ஆடம்பரமோகம் இருக்கிறது? நாம் கிறிஸ்துவை ப்பின்பற்றி வாழும் பண்பை கொண்டுள்ளோமா? இதை கண்டுணர்ந்திடவும், பகிர்ந்திடவும் இறையாட்சி இன்று நம்மை அழைக்கிறது.
செபம்:- விண்ணக மண்ணக அரசசே எம் இறைவா! பதவி, புகழ் மற்றும் பட்டங்களை எமது மனம் விரைந்து தேடாமல் எம்மைத்தேடி வரும் சந்தர்ப்பங்களை உம்துணையோடு நல்வழியில் பயன்படுத்திட அருள்தாரும் இறைவா அருள்தாரும்!
[2014-12-30 06:00:00]
எழுத்துருவாக்கம்: அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG பிரின் ஆம் கிம்சே
யேர்மனி
| |
|