விடை தேடுவோம்…… மாரானாதா?

திருவருகைக்காலத்து ஆசீரும் அருளும் உங்கள் குடும்பங்களில் சமூகங்களில் தங்கட்டும் புதுமகிழ்ச்சியை தரட்டும். நம் மனதில் நம் மத்தியில் இக்காலத்தில் எழும் கேள்விகளை வெளிப்படுத்தி விடைதேடுதேடுவோம்……
மாரானாதா என்ற வார்த்தை ஏன் திருவருகை காலத்தில் சொல்லப்படுகிறது?
வருகையின் காலம் மற்றும் காத்திருக்கும் காலம் என்றழைக்கப்படும் இக்காலத்தில் நம் காதுகளில் கேட்டவை இப்பொழுதும் கேட்பவை ‘மாரானாதா” என்ற ஒரு வார்த்தைஆகும். காரணம் இதையே நம் முதல் கிறிஸ்தவ சமூகம் கிறஸ்துவை எதிர்நோக்கியிருந்தபொழுது பயன்படுத்தியது.
முதல் கிறிஸ்தவர்கள் மாரானாத என்ற சொல்லை. ஏன் எந்த சூழலில் எந்த அர்த்ததோடு பயன்படுத்தினர்?
நம்மத்தியில் இறக்கின்றபொழுது ஒருவர்சொல்கின்ற வார்த்தையை உயரியதாக நாம் மதிப்பதைப்போல இயேசு; உயிர்த்து விண்ணகம் சென்றபொழுது நான் மீண்டும் வருவேன் என்ற அவரின் வாக்குறுதிவாhத்தையை ஆணித்தரமாக நம்பியது மட்டுமல்ல ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். பலர் பொறுப்பின்றி ஒரு பணியையும் செய்யாமலும் வரப்போகிறார் உலகம் முடிவுறும் ஏன் பணிசெய்யவேண்டும் என்ற சோம்பலான பழக்கத்தையும் வளர்த்துக்கொண்டனர். இத்தருணத்தில் உரோமை அரசுகள் பாலஸ்தீன இடங்களை ஆக்கிரமித்து கிறிஸ்தவர்களின் வழிபாட்டிற்கு தடங்கலாக முட்டுக்கட்டையாக இருந்து போகப்போக உரோமை அரசர்களை கடவுளாக ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது துன்புறுத்துலுக்கு ஆளாகவேண்டும் என கட்டளைபிறப்பித்தது. நூற்றுக்கணக்கில் மறைசாட்சியாயினர். இவர்களுக்கு மத்தியில் இயேசு இறைவனாக மீண்டும் வரமாட்டார் என ஏமாற்றத்தில் விசுவாசசாட்சியத்துக்கு கேள்விக்குறியாக அநேகர்வெளிப்படுத்தியபொழுதுதான் கிறிஸ்தவ சமூகத்தை எழுச்சியூட்ட புத்துயிர் தர உயிரோட்டம் தர அவர் வருவார் வாரும் இயேசுவே வாரும் அவர் வருகிறார் என்பதை ஆழமாக அவர்களில் பதியவைக்க ‘ மாரனாதா என்ற அரமாயிக் சொல்லை ஒருவருக்கு காலை மாலை வணக்கங்கள் வாழ்த்துதல் சொல்லுதற்கு பதிலாக மாரனாதா என்றும் வழிபாட்டுகளில் சமாதானம் என்ற வெளிபடுத்துதலுக்கு பதிலாக மாரனாதா என்றும் வெளிப்படுத்தி வருவார் வருகிறார் என்ற விசுவாசத்தை ஆழப்படுத்தினர். மாரனாதா என்ற சொல் சாலோம் என்ற யூதர்கள் பயன்படுத்திய வார்த்தைக்கு மாற்று வார்த்தையாக மாரானாதா பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
விவிலியத்தில் மரானாதா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறதா?
பல இடங்களில் அவர் மீண்டும் வருவார் …அவர் வருவார் என்று பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. விவிலியத்தின் கடைசி நூலாக அமைந்துள்ள திருவெளிப்பாட்டின் கடைசி பிரிவாகிய 22-ல் இறுதி சொற்றொடராக யோவான் ஆம் நான் விரைவாக வருகிறேன் ஆமென் வாரும் ஆண்டவராகிய இயேசுவே வாரும். ஏன்ற விவிலியத்தின் இறுதி வார்த்தைகள் நமக்கு கொடுக்கப்படும் சிறப்பு அழைப்பாகும். இந்தபிண்ணியில் விழிப்பாயிந்து கவனமாயிருந்து இயேசுவே வாரும் என்றழைத்துக் காத்திருக்க அன்றைய முதல கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல நம்மனைவருக்கும் கெர்டுக்கப்படுகின்ற அழைப்பாகும்
இன்றைய நம் ஆன்மிக பயிற்ச்சிக்கு நம் திருவருகைக்கால தயாரிப்புக்கு மாரானாதா எவ்வாறு உண்மையாகும்?
மனித எதிர்பார்ப்புகள் ஆதகங்கள் இதய ஆவல்கள் இறைமகிழ்ச்சியை தள்ளிவைத்து இணையதளங்களில் இனிப்பை - பேஸ்புக்கில் முகமறியா உறவை – டுவீட்டரில் உணர்வுதரும் பதிலை –சேட்டிங்கில் தன்சுதந்திர நேரத்தை தேடுகிறோம் வாருங்கள் நண்பர்களாக இணையுங்கள் என அழைப்புவிடுகிறோம். அர்த்தமில்லா பொழுதுபோக்கு அழைப்புகளை கடந்து அமைதியைவிரும்பி சகோதரத்தை நேசித்து இறைவனை வாரும் என அழைக்கின்றேனா? அறிவியல் விஞ்ஞானத்தை கேள்வி குறியாக்கும் 6000 பேரை பலிவாங்கிய ஈபோலாவில் சிதைந்திருக்கும் குடும்பங்களோடு இணைந்து வாரும் இயேசுவே வாரும் பதில் தாரும் என அழைப்போம்.. அவர் நடந்தமண் இரத்தத்தால் நிரப்பப்பட்டு ஆலயங்கள் தகர்க்கப்பட்டு கிறிஸ்தவர்கள் இருந்த தடயம் அழிக்கப்பட்ட இடங்களில் வாரும் இயேசுவே வாரும் பதில் தாரும் என அழைப்போம். ஜசிஸ் இயக்கத்தின் மிருகத்தனமான அணுகுமுறைக்கு முடிவுகட்ட உலக தலைவர்கள் முன்வந்து மனிதநேயத்தை நிலைநாட்ட வாரும் இயேசுவே வாரும் பதில் தாரும் என அழைப்போம். மாரானாதா அன்றும் இன்றும் என்றும் நம் அறைகூவலாகட்டும்.
[2014-12-02 00:33:45]
எழுத்துருவாக்கம்: Rev.Fr.Peter Jayakanthan sss
Congregation of the Blessed Sacrament
Corpus Christi Catholic Church,
Houston, Texas, US | |
|