ஆன்மீக வலம்

மதிப்பிற்குரிய அருட்பணியாளர்களே, துறவிகளே, அருட் கன்னியரே, ஆண்டவரின் நற்செய்தி பணியில் ஆர்வமுள்ள பொதுநிலையினரே, உங்கள் ஆன்மீக சிந்தனைகளை எமது இணையத்தளத்தின் ஆன்மீக வலத்தில் பிரசுரித்து, ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை எல்லோருக்கும் அறிவிக்க விரும்பினால், info@tamilcatholicnews.com என்ற எமது மின்னஞ்சலுக்கு உங்களுடைய ஆக்கங்களை அனுப்பிவைக்கவும். எமது ஆன்மீக இயக்குனரின் அனுமதி பெற்று, இங்கே பிரசுரிக்கப்படும்.

இதோ! ஓநாய்களிடையே ஆடுகளை அனுப்புவதைப்போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப்போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்.
(மத்தேயு 10:16)

நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்
(மத்தேயு 28:19-20)

விடை தேடுவோம்……
மாரானாதா?

திருவருகைக்காலத்து ஆசீரும் அருளும் உங்கள் குடும்பங்களில் சமூகங்களில் தங்கட்டும் புதுமகிழ்ச்சியை தரட்டும். நம் மனதில் நம் மத்தியில் இக்காலத்தில் எழும் கேள்விகளை வெளிப்படுத்தி விடைதேடுதேடுவோம்…… [2014-12-02 00:33:45]

எழுத்துருவாக்கம்:திருவருகைக்காலம் அருட்பணி.பீற்றர் ஜெயகாந்தன் SSS

விடை தேடுவோம்……
இயேசுவின் பெயர்கள்……

இயேசு என்பது அவரது பெயர். உங்ககளுக்காக மீட்பர் பிறந்துள்ளார் இவரே ஆண்டவராகிய மெசியா. இவைகளில் இயேசு - மீட்பர் - மெசியா அனைத்தும் இயேசுவையே குறிக்கிறது. பழைய ஏற்பாட்டில் அவர் பல பெயரில் முன் அறிவிக்கப்படுகிறார். நூற்றுக்கணக்கில் இயேசுவுக்கு பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இறைவாக்கினர்கள் முன் அறிவித்துக் சொல்லியிருக்கின்ற பெயர்களை இங்குப்பார்ப்போம். [2014-12-11 02:43:30]

எழுத்துருவாக்கம்:திருவருகைக்காலம் அருட்பணி.பீற்றர் ஜெயகாந்தன் SSS

விடை தேடுவோம்……
ஏன் டிசம்பர் 25?

கிறிஸ்துவராக மாறிய முதல் உரோமை ஆட்சியாளர் கான்ஸ்டன்டைன் தான் கிறிஸ்துவின் பிறப்பும் புனிதம் முக்கியம் என உணர்த்த டிசம்பர் 25-ம்தேதி கி.பி 336 ல் துவங்கினார் சில ஆண்டுகள் கழித்து திருத்தந்தை முதலாம் ஜீலியஸ் இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்து டிசம்பர் 25 கிறிஸ்துபிறப்பு விழாவாகியது. [2014-12-13 01:52:41]

எழுத்துருவாக்கம்:திருவருகைக்காலம் அருட்பணி.பீற்றர் ஜெயகாந்தன் SSS

தாவீதின் திறவுகோலே!

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய உன்வகுகை இன்னும் எமக்கு பிறப்பு என்னும் திறவுகோல்! [2014-12-30 06:00:00]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

ஈசாய் தளிர்

நன்மை செய்யத்தூண்டும் இறைவா! திருவருகைக்காலத்தில் என்மனநிலை விரும்புகின்ற எண்ணத்திற்கும், செயல்ப்பாட்டிற்கும் பலம்கொடுக்க, பலவீனம் என்னும் ஆணிவேர்களை களையப்பட காலதாமதம் செய்யாமல் எம்மை விடுவிக்க வந்தருள்வாய் இறைவா வந்தருள்வாய் [2014-12-30 00:00:00]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

ஓ..............ஆதோனாயீ

கடவுளை நமது வாழ்வை பாவத்தில் இருந்து மீட்டுக் கொண்டார். அதிலிருந்து நாம் வலிமைமிகு ஆற்றல் பெற்றுள்ளோம் .இதனை எவராலும் அழித்துவிட முடியாது. திருப்பாடல் ஆசிரியர் கூறுவது போல் என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன் [2014-12-29 19:11:01]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

ஓ........ஞானமே

மனித வாழ்வின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் ஞானம் இன்றியமையாதது. அறிவு, புத்தி இவற்றிற்கு இடையே காணப்படும் மெய்யுணர்வே ஞானம் எனலாம்.அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஞானம் அவசியமானது. [2014-12-29 19:11:01]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

விடிவெள்ளியே

இலட்சியம் என எதையாவது மையமாகக் கொண்டு அமைகிறது. இவற்றை அடைய முற்ப்படும் போது நாம் சந்திக்கின்ற திசைகள், பாதைகள் எப்படிப்பட்டவை என்பதை உணர்ந்து இப்பாடல் வழியாக நம்மையே இறைவனிடம் ஒப்புக்கொடுப்போம். [2014-12-30 06:00:00]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG

மனிதருக்கு வாழ்வுதரும் அரசே!

“ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். ஆண்டவர் தம்மக்களுக்கு ஆற்றல் அளிப்பாராக! ஆண்டவர் தம்மக்களுக்கு சமாதானம் அருள்வாராக! ஆண்டவர் தம்மக்களுக்கு ஆசி வழங்குவாராக!” (திருப்பா 29:10-11) [2014-12-30 06:00:00]

எழுத்துருவாக்கம்:அருட்.சகோ. சி. குழந்தை திரேசா FSAG